14.8.09

சுட்டெரிக்கும் வெயிலையும் வாழ்வின் ரசனை குளிராக்கும்








அடர்ந்த வேலிக்கருவேல மரங்களை ஊடறுத்துக் கொண்டு சென்ற மாட்டு வண்டிப்பாதையில் இரண்டு கிலோமீட்டர் பயணம். அப்போது வெயில் வெளியே சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வெட்டிக் குவிக்கப்பட்ட பல்வகை மரங்கள் அந்தஇடத்தில்ஒரு தோப்பு இருந்ததற்கான எச்சங்களை விட்டு வைத்திருந்தது. அந்த தோப்பை விலைபேசவந்தவருக்கு துனையாகப்போனோம்.



சுற்றிலும் பட்டாசுக்கம்பெனிகள் முளைத்திருக்க அந்தக்காடு மட்டும் மனித நடமாட்டம் இல்லாமல் கிடந்தது. அங்கே ஒரு நாவல் விருட்சம் வானுயர விரிந்து கிடந்தது. ஒரு நான்குபேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் சுற்றளவு கொண்ட அந்த மரம் கிளிகளும் மைனாக்களும் குருவிகளும் இன்ன பிற பறவைகளும் வசிக்கிற இடமாக இருந்தது. ஆடிக்காற்றின் உக்கிரத்துக்கு ஈடுகொடுக்க அதன் கிளைகளிலிருந்து கருநீலக்கனிகள் உதிர்ந்து விழுந்தன.


சற்று நேரத் தயக்கத்துப் பின் நான்கு சக்கர வாகனத்து கதவுகள் திறந்து இறங்கி பழங்கள் பொறுக்கினோம். குனிந்து பொறுக்க பொறுக்க காலங்கள் உதிர்ந்து பள்ளிக்கூட நாட்கள் எங்களைத் தொற்றிக் கொண்டது. சுட்ட பழம் சுடாத பழம் என்ற பழமைகள் பேசிச்சிரித்தபடி வெயில் மறந்து போனது. கால்சராயைக் கழற்றிவிட்டு மரமேறத் தவித்தது பழய்ய கால்கள். சார் உக்காருங்க உதிர்த்து எடுத்து தாரோம் என்று சொன்ன தோட்டக் காவலரின் குரலை ஏற்றுக்கொள்ள மனம் தயாராக இல்லை.



காட்டைச் சுற்றிகாட்ட முன் நடந்த அவரின் வேகம் எங்களுக்கு கட்டுபடியாகவில்லை. சிறிது நடந்த பின் கௌதாரிகளும், காடைகளும் மருண்டோடின. எங்களைக்கண்டதும் மேல்சட்டையில்லாத நாலைந்து சிறுவர்களும்கூட கலைந்து ஓடினார்கள். அவர்கள் கையில் பாலித்தீன் பைகளில் கருநீலக் கனிகள் கிடந்தன. அந்தப் பதட்ட ஓட்டம் இன்னும் பத்து வருடம் கழித்து இனிய நினைவுகளாவது தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆடைக்குள்ளே வியர்வை நசநசத்தாலும் காட்சிகள் குளுமையாக இருந்தது.



ஒரு புதரில் மயில்களிரண்டு ஒன்றையொன்று அலகுரசிக்கொண்டு காமம் செப்பக் கண்டோம். இன்னும் சிறிது தூரம் கடந்த பிறகு ஒரு வெற்றுச் சீசாவும் அதன் தோழமைப் பொருட்களும் கூட சிதறிக் கிடந்தது. அது ஒன்றும் புதிதல்ல சில மல்லிகைப் பூக்களும் அதனருகே காய்ந்து கிடந்தது. ரசனைக்காரன் எனச் சொல்லிவிட்டுக் கடந்துபோனார் சகபயணி.

17 comments:

காமராஜ் said...

என்

வலைப் பக்கத்தைப் பின் தொடரும்
அமித்து அம்மாவுக்கும்,
சஞ்செய் க்கும்

நன்றி

Raju said...

\\ஒரு வெற்றுச் சீசாவும் அதன் தோழமைப் பொருட்களும் கூட சிதறிக் கிடந்தது. \\

இதுதான் சொல்லாம சொல்றதா..?
பதிவு முழுதும் ஈர்த்தது.

ஈரோடு கதிர் said...

காமராஜ்...
ரசனையான எழுத்துதான்...

கடைசி வரிகளை வாசிக்கும் போது நாசிக்குள் கனவாய் ஒரு மல்லிகை மணப்பதை தவிர்க்க முடியவில்லை

அன்புடன் அருணா said...

//குனிந்து பொறுக்க பொறுக்க காலங்கள் உதிர்ந்து பள்ளிக்கூட நாட்கள் எங்களைத் தொற்றிக் கொண்டது//
அழகு!

ஆரூரன் விசுவநாதன் said...

மெல்ல கை பிடித்து வழிநடத்திச் செல்லும் வகையிலான எழுத்து நடை. உடன் பயணித்த திருப்தி. வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்.

மண்குதிரை said...

ungka uurkkaararidam peesineen

rompa nalla anupavan. visual laay virukirathu.

Unknown said...

மாமா என்பதற்காக சொல்லவில்லை...உங்களது இந்த மண்மனம் வீசும் எழுத்து நடை என்னை பொறாமை கொள்ள வைக்கிறது.

எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னால் இப்படிப்பட்ட பதிவுகள் நிச்சயம் இட முடியாது....

பொறாமையும்,பெருமையுமோடு இதை சொல்கிறேன்...

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க
நல்ல விவரணை
நல்ல ரசனைக்காரன் நீங்க
காமம் செப்பக் கண்டேன் ன்னு சொல்லிட்டு மல்லிகைப் பூ பற்றி சொன்னது ..
அருமைங்க காமராஜ் சார்

மாதவராஜ் said...

ஆஹா... அருமை என் தோழனே..! ருசி கொண்ட வரிகள்.

காமராஜ் said...

வாருங்கள் டக்ளஸ் கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

வணக்கம் கதிர், நாளை என்ன நிகழ்ச்சி நிரல்

காமராஜ் said...

வணக்கம் ஆரூரான் கருத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

வாருங்கள் அருணா மேடம்,

காமராஜ் said...

நன்றி மண்குதிரை
நன்றி மாப்ளே.
நன்றி நெசமித்ரன்

காமராஜ் said...

நன்றி மாது

ஆ.ஞானசேகரன் said...

//ஆடைக்குள்ளே வியர்வை நசநசத்தாலும் காட்சிகள் குளுமையாக இருந்தது. //

ஆகா மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்
அதிலும் கடைசி பத்தி இன்னும்.... இன்னும்......

☼ வெயிலான் said...

நீங்களும் ரசனைக்காரர் தான் என்னைப் போலவே....... :)