( மிகச்சிறந்த கருப்பின எழுத்தாளரும், தீவிரப் பெண்ணியவாதியுமான ஆலிஸ் வாக்கர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சொல்லமுடியாத துயரங்களை அனுபவித்த அமெரிக்க - ஆப்பிரிக்க கருப்பின அடிமைகளின் துயரார்ந்த வரிகளை எழுதியவர். ஈராக் யுத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டவர். இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இன்றுவரை களத்திலிருக்கும் உலகப் பெண்கள் அமைப்பின் நிர்வாகி ஆலிஸ் வாக்கர். வெள்ளை வீடுகளின் சமயலரையில் கிடந்து கருகிப்போன கருப்பின் அடிமைகளின் வாழ்க்கை ஒவ்வொன்றும் உலகை அதிரவைக்கிற கொடூரம். வெள்ளைக்காரத்தகப்பனே கணவனாகும் கருஞ்சோகம், பரவலாக உலகறியாதது. 1983 அம் ஆண்டு பெரும் விவாதத்துக்கு உள்ளாகி பின் புலிட்சர் விருது பெற்ற புதினம், கலர் பர்ப்பிள். முழுக்க முழுக்க ஒரு நாட்குறிப்பின் வடிவில் எழுதப்பட்டது இது. தன் வரலற்று எழுத்துக்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய இது போன்ற புதினங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஓங்கிய குரலாகியது. பின்னர் உலகம் முழுவதும் விஸ்தரிக்கப்பாட்டது. பாலியல் சமத்துவதுக்கான போர் முரசாகாவும் இந்த எழுத்துக்கள் முன் நிறுத்தப்பட்டன. அதன் சுருக்கம் ) 0 கல்வியறிவு இல்லாத ஏழைக் கருப்பு இனப்பெண் சீலி, தனது பதினான்காவது வயதில் மாற்றாந் தந்தையால் வல்லுறவுக்கு ஆளாகி கற்பமாகிறாள். பிறந்த இரண்டுகுழந்தைகள் காணாமல்போக அவர்களிருவரும் மாற்றாந் தந்தையால் கொல்லப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறாள். அவளது தங்கையான நிட்டியைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப் படுவதாகக் கூறி வரும் ஆடவனுடன் சீலிக்குக் கட்டாயத்திருமணம் சம்பவிக்கிறது. அவன் தான் மிஸ்டர் எக்ஸ். மாற்றந்தந்தையோடு வழச்சகிக்காமல் வெளியேறி சீலியுடன் வந்து தங்கும் தங்கை நிட்டியை மயக்க முயற்சித்துத் தோற்றுப்போகிறான் மிஸ்டர் எக்ஸ். தோல்வியால் சினந்து அவளை வீட்டைவிட்டு வெளியேறச்சொல்லுகிறான் மிஸ்டர் எக்ஸ். அவளது அக்காளும் கூட இந்தச் சிறையிலிருந்து தப்பிப்போகக் கிடைத்த பாக்கியமாக எண்ணிக்கொண்டு போ என அறிவுரை கூறுகிறாள். அங்கிருந்து வெளியேறும் நிட்டி உள்ளூர் பாதிரி ஒருவரின் வீட்டு வேலைக்காக ஜார்ஜியா செல்கிறாள். கடிதம் மூலம் தொடர்கிற அன்பும் உறவும், நின்று போன கடிதங்களால் அறுந்து போகிறது. நிட்டியும் இறந்து போனதாக எண்ணிக் கொள்கிறாள் சீலி. மிஸ்டர் எக்ஸின் பழய்ய மகனான ஹார்போ சோபியாவைத் திருமணம் செய்து தந்தையோடு வந்து தங்குகிறான். மகனும் தந்தையும் இணைந்து சோபியாவைக் கொடுமைப் படுத்துகிறார்கள். சீலியைப்போலல்லாமல் அவள் அவர்களுடன் எதிர்த்துப் போராடுகிறாள், திருப்பி அடிக்கிறாள். அந்த ஊர் மேயர் தன் மனைவிக்கு தாதியாக வரும்படிக அழைக்க, அந்த நரகத்துக்கு நான் வாமாட்டேன் என மறுக்கிற அவளை மேயரின் மனைவி அடிக்கிறாள். திருப்பி அடித்த சோபியா குற்றவாளியாகி பனிரெண்டு வருட சிறைத்தண்டனைக்கு ஆளாகிறாள். மிஸ்டர் எக்ஸின் நீண்ட நாள் காதலி பாப் இசைப்பாடகி ஷக் ஆவெரி, உடல் நலக் குறைவால் சீலியின் வீட்டில் வந்து தங்குகிறாள். சீலியின் துன்பத்துக்கு இறங்கி அவளுடன் சிநேகமாகிறாள். அது இன்னொரு பரிமாணத்தில் காதலாகிறது.முதன் முதலில் அன்பின் ருசியை உணரும் சீலி உன்னதமான உணர்வுகளால் ஆட்டுவிக்கப்படுகிறாள். மிஸ்டர் எக்ஸிடம் அவள்படும் அடி, உதைகளைத் தடுக்க அவள் அந்த வீட்டில் நீண்ட நாள் தங்க நேர்கிறது. மீண்டும் ஒரு இசைப்பயணம் சென்றுதிரும்பும் ஷக், க்ரேடி எனும் ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு திரும்புகிறாள். இதனால் கிடைத்த ஒரு ஆசுவாச உறவும் தட்டிப்பறிக்கப்பட்டதாக உனருகிறாள் சீலி. திரும்புகிற அவள் நிட்டியப் பற்றி விசாரிக்கிறாள். அவளிடம் இருந்து கடிதம் வருவது நின்று போனதால் நிட்டி இறந்து போயிருக்கக்கூடும் என்று சீலி கூறுகிறாள். மிஸ்டர் எக்ஸின் பெட்டியொன்றில் நிறைய்ய கடிதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தகவலை அப்போது ஷக் உடைக்கிறாள். கண்டுபிடிக்கப்பட்ட கடிதங்கலின் மூலம் பல புதிர்கள் உடைக்கப்படுகிறது. உள்ளூர் பாதிரித் தம்பதிகளுடன் கிறிஸ்தவ தொண்டுக்காக ஆப்ரிக்கா சென்று விட்டதாகவும். அவர்களின் இரண்டு ததுப்பிள்ளைகளும் உருவத்தில் நிட்டியைப்போலிருப்பதால் பாதிரியின் மனைவியின் சந்தேகம் அதிகமாகி, பின்னர் அவள் இறந்த பின் முறைப்படி நிட்டி பாதிரிக்கு மனைவியாகி சீலியின் குழந்தைகளுக்கு தாயுமாகிறாள். |
3.8.09
ஆலிஸ் வாக்கரின் புதினம் - கலர் பர்ப்பிள் - ( color purple - 1982 )
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
பகிர்வுக்கு நன்றி
இன்று தான் இவ்வலைப்பக்கம் வருகிறேன்...என்ன சட்டென முடித்து விட்டீர்கள்...? color Purple -ஐ நாவலாக படிக்காவிட்டாலும் படமாக பார்த்திருக்கிறேன்...steven spielberg இயக்கத்தில் வெளியாகியிருந்தது...காலர் பர்பிள் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்...அடர் ஊதா என்ற பொருளில் அதற்கான விளக்கத்தையும் எங்கோ படித்ததாக நினைவு...மறந்துவிட்டேன்.
வாருங்கள் ஞானசேகரன் வணக்கம்.
கருத்துக்கு நன்றி.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
இங்கு நாலு பக்கம் எழுதினால் கட்டுபடியாகாது,
திரும்பிப் பார்க்கமாட்டாகள். கடைசிப்பாராவில் திருத்தம்
இருந்ததால் விட்டுவிட்டேன். கலர் எனத் திருத்திவிட்டேன்.
சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி.
ரௌத்ரன் நல்ல பெயர்.
பூங்கொத்துக்களுடன் விருதும் கொடுத்திருக்கேன் வாங்கிக்கோங்க!
பூங்கொத்துக்களுடன் விருதும் கொடுத்திருக்கேன் வாங்கிக்கோங்க!
Post a Comment