13.9.09

மத்திய அமைச்சர்களின் ஒரு நாள் விடுதி வாடகை ஒரு லட்சம்.

நூறு நாட்கள் தாண்டி விட்ட UPA அரசின் சாதனைகள் சொல்ல, வேறு வேறு ஊடகங்கள் உண்டு. இந்த நூறு நாட்களாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் கைக்கு வராமல் காத்திருக்கும் அமைச்சர்கள் 39 பேர். இன்னும் வீடுகளைக் காலி செய்யாமல் டபாய்க்கிற முன்னாள் மந்திரிகள் 11 பேர். இந்த செய்திகளால், நமக்கொன்றும் பாதகமில்லை. ஏனெனில் காத்திருக்கிற எந்த மந்திரியும் சாலையோரத்திலோ, இல்லை சுற்றுலாத்தளங்களின் படிகளிலோ தங்கப் போவதில்லை. அவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஐந்து நட்சத்திர விடுதிகள். அப்படிப்பட்ட விடுதிகளில் தங்கிய இரண்டு பேர் SM.கிருஷ்ணா, மற்றும் சசிதரூர்.


அவர்கள் தங்கியிருந்த விடுதியின் அறைக்கான ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா வெறும் ஒரு லட்சம் தான். நூறு நாள் கழித்து கணக்கைப் பார்த்த பிராணாப் முகர்ஜி ஆடிப்போனார். இரண்டு பேருக்கும் வாடகை மட்டும் தலா ஒருகோடி. ஆடாமல் என்ன செய்ய முடியும். வாடகையை அவர்கள் சொந்தப் பொறுப்பிலே கட்டவேண்டும் என்று முடிவானது. இவ்வளவு பெரும் தொகையை வாடகையாக செலவழிப்பதற்கும் ரயில்வே டிக்கெட் விற்பனையைத் தனியாருக்கு தாரைவார்க்க எடுக்கும் முடிவுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கிறதா என நாம் கவலைப்பட வேண்டியதில்லை.


அந்த ஆறு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் பாராளுமன்றக் கட்டிடத்தில் காபி, டீ போன்ற பாணங்களும், சாப்பாடும் வெறும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு கிடைக்கிறது. இது டெல்லியில் ஒரு தோசைக்கு ஐம்பது ரூபாய், ஒரு கப் காபிக்கு பதினேழு ரூபாய் கொடுக்கும் சாதாரண ஜனங்களுக்கு ஒரு போதும் தெரியப் போவதில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல நிறுவணங்களின் சம்பளப் பேச்சுவார்த்தைகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கிறபோது தங்களின் சன்மானத்தை குறிப்பிட்ட இடைவேலையில் தானாக உயர்த்திக்கொள்வதும் வெளியில் செய்தியாவதில்லை.


கோவை நகரத்தில் மட்டும் மொத்தம் 23 குடிசைப்பகுதிகள் இருக்கிறது. நகரை அழகுபடுத்துவதற்காக எல்லாம் காலி செய்யப்பட்டு விட்டன. நகருக்கு வெளியே அவர்களுக்கு 272 சதுர அடியில் இடம் ஒதுக்கித் தருவதாக ஒப்புதல் மட்டும் அளித்திருக்கிறது அரசு. அதே கோவையில், மாநகராட்சி மிருகக்காட்சி சாலையில், திரேசியஸ் எனும் சிங்கவால் குரங்குகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தின் பரப்பளவு 500 சதுர அடி. இதுதான் இந்த அரசுகள் காலங்காலமாக ஒதுக்கப்பட்ட மக்களின் மேலும் குரங்குகள் மேலும் வைத்திருக்கும் அபிமானத்தின் அளவைக்காட்டுகிறது.


மன்னாதி மன்னன் படத்தில் " அப்புறம் அந்தக் குடிசைகளை என்ன செய்வது" என்கிற கேள்வி வரும், " தேவையில்லாத காரணத்தால் அவையெல்லாம் தீயிலிட்டுக் கொளுத்தப்படும் " என்று மறைந்த நடிகர் எம்ஜிஆருக்கு அப்படி ஒரு வசனம் எழுதிக் கொடுக்கப்பட்டது. மிகுந்த ஆரவாரத்தையும் ஒரு பெரும் எதிர்பார்ப்பையும் சாதாரண ஜனங்களுக்குள் விதைத்து விட்டது அந்தக்கால சினிமா இலக்கியம். நிஜத்தில் அரசியல் இலட்சனம் வேறு வேறு மாதிரி இருக்கிறது. அதை சுட்டிக்காட்டவும் மறதியெனும் புதை சேற்றுக்குள்ளிருந்து மனிதர்களை வெளியில் எடுப்பதுவும் மட்டுமே இலக்கியத்தின் வேலையாக இருக்கிறது.

8 comments:

அன்புடன் அருணா said...

//அதை சுட்டிக்காட்டவும் மறதியெனும் புதை சேற்றுக்குள்ளிருந்து மனிதர்களை வெளியில் எடுப்பதுவும் மட்டுமே இலக்கியத்தின் வேலையாக இருக்கிறது.//
அப்படி எடுத்தும் கூட ஏதாவது பிர்யோசனம் இருக்குமா என்பதுவும் சந்தேகமே....
உங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் காத்திருக்கிறது என் வலைப்பூவில்....

சந்தனமுல்லை said...

//இரண்டு பேருக்கும் வாடகை மட்டும் தலா ஒருகோடி. //

ஆ!!!

//கோவை நகரத்தில் மட்டும் மொத்தம் 23 குடிசைப்பகுதிகள் இருக்கிறது. நகரை அழகுபடுத்துவதற்காக எல்லாம் காலி செய்யப்பட்டு விட்டன//

:((

நல்ல இடுகைக்கு நன்றி!

ஈரோடு கதிர் said...

//அதை சுட்டிக்காட்டவும் மறதியெனும் புதை சேற்றுக்குள்ளிருந்து மனிதர்களை வெளியில் எடுப்பதுவும் மட்டுமே இலக்கியத்தின் வேலையாக இருக்கிறது.
//

இதையும் தாண்டி ஏதாவது செய்ய வேண்டும்தான்..

மிகப்பெரிய அளவில் இருக்கும் ஊடகங்கள் இதையெல்லாம் கண்டும் காணமலும் போய்க் கொண்டுதான் இருக்கின்றன.

thiyaa said...

அடேங்கப்பா !!!!!!!
என்ன வளர்ச்சி............................................................
....................................!!!!!!!!

Unknown said...

//அதை சுட்டிக்காட்டவும் மறதியெனும் புதை சேற்றுக்குள்ளிருந்து மனிதர்களை வெளியில் எடுப்பதுவும் மட்டுமே இலக்கியத்தின் வேலையாக இருக்கிறது.//

உண்மைதான் மாமா...ஆனால் கொடுமை என்னவென்றால் திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்க மட்டும் செய்யவில்லை அவர்கள் ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு தங்கள் திருட்டை சாதனையாகவல்லவா சித்தரித்து கொண்டிருக்கிறார்கள்!இதனால் நிஜமாகவே மக்கள் நலனில் அக்கறை கொண்டோரின் எழுத்துக்களின் வெப்பம் அப்பாவி பொதுஜனத்தின் அறியாமையின் நிழலை கூட நெருங்கவில்லை என்பதே கசப்பான உண்மை...

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

வரதராஜலு .பூ said...

என்னாதான் சார் இது. இந்த கம்மனாட்டிங்களோட 100 நாள் சாதனை இதுதான்ட்டு சொல்ல முடியும். இந்த விஷயம் சமீபத்தில் எப்படியோ வெளிவ்நதப்பிறகே இவர்கள் நட்சத்திர ஓட்டலை விட்டு வெளியேறுகிறார்கள். விஷயம் வெளியே வராமல் இருந்திருந்தால் அனைத்தும் அரசு செலவிலேயே கொண்டாடியிருப்பார்கள் என்று நினைக்கிறறேன்.

இந்த மீடியா கம்மனாட்டிங்களுக்கும் வேற வேலையே இல்ல. சோனியா எகனாமி க்ளாஸ்ல விமானத்துல போறதும் ஒரு நியூஸ் ஆவுது. பெரிய மயிறு தியாகத்தப் பண்ணிட்டாங்க இவங்க.

சாவுகிராக்கிங்க.

//மிகப்பெரிய அளவில் இருக்கும் ஊடகங்கள் இதையெல்லாம் கண்டும் காணமலும் போய்க் கொண்டுதான் இருக்கின்றன.//

ஊடகங்களை கவனிச்சிடுவாங்கன்னு நெனைக்கிறேன். அதான்.

அழகிய நாட்கள் said...

// " அப்புறம் அந்தக் குடிசைகளை என்ன செய்வது" என்கிற கேள்வி வரும், " தேவையில்லாத காரணத்தால் அவையெல்லாம் தீயிலிட்டுக் கொளுத்தப்படும் " என்று மறைந்த நடிகர் எம்ஜிஆருக்கு அப்படி ஒரு வசனம் எழுதிக் கொடுக்கப்பட்டது.//அந்த வசனம் 1958ல் வெளி வந்த 'நாடோடி மன்னன்' திரைப்படமத்தில் வருகிறது.'மன்னாதி மன்னன்' அல்ல. என்றாலும் 'மன்னன்' என்ற சொல்லாடலில் நாம் மிகுந்த மகிழ்ச்சி கொள்ள வேண்டியிருக்கிறது.பாரதியின் வரிகள் "எல்லோரும் இன்னாட்டு மன்னர்" என்று மரியாதையாகவல்லவா விளிக்கிறது?மூன்று நாள் தமிழக சுற்றுப்பயணத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் செல்வழிக்கும் இந்த்திருனாட்டில்தான் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்குள் ஜீவனம் செய்யும் 80 கோடி மக்களும் னாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள்சிக்கன நடவடிக்கை என்று சொல்லக்கூடும். நம்மவர்கள் எதைசொல்லக்கூடும்?