6.9.09

பகிரப்படாத பேட்டி








முப்பது வருடமாக
எதிர்காற்றில் நீச்சலடித்து
குச்சி ஐஸ் விற்கும்
ஒத்தையால் கருப்பசாமி அண்ணன்.


அப்படியே, அகலக்கேரியர் சைக்கிளோடு
ஒரு உதிரிப் பாகமாய்
மாறிப்போன
மண்ணெண்ணை விற்கும்
ராமர் அண்ணாச்சி.


உழவு மாடுகளை மாற்றி மாற்றி
பிராணிகளின் பாஷை பழகிப்போன வண்டிக்கார
கோபால்நாயக்கர்.


மூன்று தலைமுறையாய்
பாபுபேக்கரி  டீப்பட்டறையில்
நடுராத்திரிகள் நின்று
சுரம் விழுந்த காலோடு
ஒரு தூணாய் மாறிபோன மாரிக்கோணார்.


விளக்குக் கம்பத்தடி
கிழிந்த குடைக்கு
கீழே உட்கார்ந்தபடி
பரபரக்கும் ஜனசந்தடி
அதன்கால்களைக் கவனித்தபடி
வாழ்க்கயின்விளிம்பில் காத்திருக்கும்
வெங்கடாசலபுரத்துத் தாத்தா.


இவர்களிடம்
உழைத்தால் உயரலாமா என்று கேட்டு,
வாங்கி, கட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்
மூட்டை நிறைய்ய பெருமூச்சையும்,
அதை விடஅதிக
கெட்டவார்த்தைகளயும்.

14 comments:

ஆ.ஞானசேகரன் said...

//இவர்களிடம்உழைத்தால் உயரலாமா என்று கேட்டு,
வாங்கி, கட்டிக், கொண்டு வந்திருக்கிறேன்மூட்டை நிறைய்ய பெருமூச்சையும், கெட்டவார்த்தைகளயும்.//

அருமை....

பாலா said...

எப்பொழுதோ படித்தது பாலக்குமாரனென்று நினைக்கிறன் " சிலர் வாழ்க்கையில் மலை மலையாய் உழைத்து கொட்டியிருப்பர் இன்னமும் மடு விலேயே வாழ்ந்து கொண்டிருப்பார் " இந்த வரியா வென்று தெரியவில்லை ஆனால் இதே கருத்து கொண்ட வரி . புத்திசாலித்தனமற்ற உழைப்பு விழலுக்கு நீர் .

Shakthiprabha (Prabha Sridhar) said...

கலக்கல் கவிதை!

( இரு வார்த்தைகளுக்கு நடுவே இடைவெளி இட அவசரத்தில் மறந்து விட்டீர்கள் போலும். )

ஈரோடு கதிர் said...

சுருக்கென்று தைக்கும் கடைசி வரிகள்..

கவிதை மனதை பிசைகிறது...

ஆமாம்... இவர்கள் ஏன் உயரவேயில்லை..

மண்குதிரை said...

anupavam tharukirathu

ஆரூரன் விசுவநாதன் said...

பரம்பரையாக ஒருவர் நேரு குடும்பத்திற்கு செருப்பு தைத்துக் கொடுத்து கொண்டிருந்ததாக சொல்லப்பட்ட கதை நினைவிற்கு வருகிறது.

உண்மைதான், இப்படிபட்ட மனிதர்கள் மாறுவதில்லை, அவர்தம் சந்ததியினராவது, மாறினால் சரி

அன்புடன்
ஆரூரன்

Deepa said...

:-)

கடைசி பத்தி சுருக்.

(அப்புறம் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில்: என் ப்ரொஃபைலில் என் பெயருக்கு அருகில் எண்ணைச் சேர்த்திருக்கிறேன். கொஞ்ச நாளைக்கு யாருக்குப் பின்னூட்டமிட்டாலும் இப்படித் தான் காட்டும்!)

அன்புடன் அருணா said...

பளீரென்று முகத்தில் அறையும் உண்மை!

குப்பன்.யாஹூ said...

அற்புதம்.

அருமையான வரிகள்.

நன்றியுடன்

hariharan said...

கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் இந்த தேசத்தில் அம்பானிகள் தான்??

ஆட்சியாளர்கள் உருவாக்குகிற சட்டங்களும் மசோதாக்களும் கொள்கைகளும் தான் குறிப்பிட்ட பிரிவினர் மேன்மேலும் பணக்காரர்கள் ஆவதும் எளியவர் அப்ப்டியே சதா அதே நிலைமையில் உழைத்துக்கொண்டே இருப்பது தான் ஜெய் ஹோ!!!

யாத்ரா said...

கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு காமராஜ்!

Kannan said...

வாங்கி வந்த வரம் அம்புட்டுதான்னு சுருக்கமா சொல்லிட்டு நம்ம சோலிக்களுதைகளை பார்கத்தான் நேரம் சரியா இருக்கு.

முத்துக்குமார் said...

யதார்த்தமான ,எளிமையான, சொல்லவந்ததை தெளிவாய் சொன்ன, அர்த்தம் உள்ள நல்ல கவிதை .