3.3.11

கேள்விகளை விதைக்கும் காடைக் குருவிகளின் தேடல்.


அருப்புக்கோட்டை தாண்டி திருச்சுழி வழியே பயணம்போனால் எங்கு பார்த்தாலும் வேலிக்கருவேல மரங்கள் அடர்ந்திருக்கும். விறகு வெட்டிச் சுமந்த லாரிகளும்,கரிமூட்டப் புகை மூக்குக்குள் கமறலும் எதிர்ப்படுகிற கோடை காலப்பயணம் அது.

எங்காவது  திட்டுத்திட்டாய் குண்டு  மிளகாய் விவசாயம் நடக்கும்.ஆங்காங்கே தட்டுப்படும் ஊர்களின் ஓட்டுவீடும் கூரை வீடுகளும் கூட வேலிக் கருவேல மரங்களுக்கு நடுவில்தான் ஒளிந்து கிடக்கும்.ஆறு பரிசல்,வயல்வெளி பசுமை எல்லாம் இல்லாத கிராமங்கள் அவை.

நீக்கமற நிறைந்திருக்கும் வெயிலும் நசநசப்புமாக ஒரு அமானுஷ்ய மௌனம்  வழிநெடுக நம்மோடு கூடவரும். குண்டுங் குழியுமான தார்ச்சாலை நீண்டு கொண்டே போகும். ஏகாந்தமாக நீண்டுகிடக்கும் சாலைகளின் நடுவில் விதம் விதமான பறவைகள் நடந்து இறைதேடும்.

வாகனத்துக்கு வழிவிட்டுப் பறந்து போகும் காடைகளும் குருவிகளும் நடுரோட்டில் உட்கார்ந்து எதைத் தேடும் என்கிற கேள்விகள் குடைச்சலைக் கொடுக்கும்.

உள்ளுர்ப் பயணிகளிடமிருந்து சிந்திய தானியங்களையா?.
உழைப்பவர்களிடமிருந்து சிந்திய வியர்வையையா?
வெளியூர்ப்பயணிகள் விட்டெறியும் காலிப்போடலங்களையா?

 இல்லை கனவுகளையா ?

10 comments:

சக்தி கல்வி மையம் said...

உள்ளுர்ப் பயணிகளிடமிருந்து சிந்திய தானியங்களையா?.
உழைப்பவர்களிடமிருந்து சிந்திய வியர்வையையா?
வெளியூர்ப்பயணிகள் விட்டெறியும் காலிப்போடலங்களையா?

இல்லை கனவுகளையா ? ///வலி தரும் வரிகள்....

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_03.html

MANO நாஞ்சில் மனோ said...

வலிக்குதைய்யா....

Pranavam Ravikumar said...

Nicely written!

ஈரோடு கதிர் said...

கொடிய தேடல்தான்

ஓலை said...

Ellaathaiyum thaan.

Unknown said...

சிட்டுக்குருவிகள் கானாமல் போய்க்கொண்டிருக்கின்றன...

இறுதியில் மனிதனும்./..

இராஜராஜேஸ்வரி said...

வலி தரும் வரிகள்....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சாலைகளில் அமரும் பறவைகளைப் பார்க்கும் பார்வையும் அதைத் தொடரும் கேள்விகளும் வேடந்தாங்கலுக்கு வரும் அபூர்வமான பறவைகளுக்கு ஒப்பானவை காமராஜ்.

உங்கள் தோள்களில் கை போட்டுக் கொள்கிறேன்.

kashyapan said...

செந்தில் அவர்களே! சிட்டுக்குருவி மட்டுமல்ல தட்டாம் பூச்சி மறையத்தொடங்கிவிட்டது விலங்கினம்,தாவரங்கள் என்று எவை மிஞ்சப்போகிறதோ தெரியவில்லை..நான் வசிப்பது NEERI(National Environmental Engineering Research Institute) அருகில்.விஞ்ஞானிகள் வருத்தப்படுகிறார்கள்.புதிய திட்டங்களுக்கான ஒப்புதலுக்கு வரும் பொது, ஆதரித்து ஒன்றும் எதிர்த்து ஒன்றும் அறிக்கை கொடுக்கச்சொல்கிறார்களாம்.சென்னயிலிருந்த்து நாகை, தூத்துக்குடி,குமரி,கொச்சி வரை பன்னாட்டுக் கம்பெனிகளொடு சேர்ந்து சுற்றுலா,மற்றும் சொகுசு விடுதிகள் கட்டப்பொகிறார்களாம். அதற்காக மரபு சார்ந்த தொழில் புரியும் மீனவர்களை அப்புறப்படுத்தும் ஏற்பாடும் உள்ளதாம்.வேடிக்கை .என்ன தெரியுமா? இதில் U.P.A , N.D.A ,பாகுபாடு இல்லை என்பது தான்.---காஸ்யபன்.

சுந்தரா said...

தென்படுகிற ஒன்றிரண்டு பறவைகளையும் தொலைத்துவிடுவோமோ என்ற அச்சம் வருகிறது.