24.2.11

நெருங்கி வருகிறது புரட்சி.


இன்று நகரின் திருப்பங்கள்,ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதிகள்,குடிசை வீடுகள் நிறைந்த தெருக்கள் என எல்லா இடங்களிலும் கொடிகள் தோரணமாகி இருக்கின்றன.அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்,நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடுராஜா நேரம் வரும் காத்திருந்து பாடு ராஜா என்கிற புரட்சிப் பாடல்கள் காதைக்கிழிக்கின்றன.நகரில் இருக்கிற எல்லாப் பெருந்தெய்வக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடும்,பொங்கலும் சுண்டலும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

கிராம,நகர,கிளை,தலைவர்கள் உற்ச்சாகமாகி விட்டார்கள்.கைமுதல் போட்டு புதுக்கடை திறக்கிற சந்தோசம் பொங்கி வழிகிறது அவர்களின் முகங்களில்.நெடுநாட்கள் காணாமல் போயிருந்த தமிழக இரண்டாம் புரட்சியின் பழய்ய முகம் தெருக்கெளெங்கும் சிரித்த முகத்தோடு திரும்பி வந்திருக்கிறது. தமிழகத்தின் முதலாம் புரட்சிமன்னர் கொடுத்த துருப்பிடித்திருந்த வாளை திரும்ப எடுத்து சானைபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த அலைவரிசையில் அவர்களின் தியாக வரலாறு உருக்கமான பின்னணிக்குரலில் காட்சியாகிக்கொண்டிருக்கிறது. இரண்டாயிரத்துக்குப்பிறகு பிறந்த குழந்தைகளும்,செவ்வாய்க்கிரகத்தில் இருந்து பூமிக்குவந்த மனிதர்களும் ’அவங்க ஏன் படுத்திருக்காங்க, ஜனங்க ஏன் வரிசையில் வந்து பாத்துட்டுப்போறாங்க ? என்று கேள்விகள் கேட்கிறார்கள். வரலாற்று ஆசிரியர்களிடம் தான் அதற்கான பதில்களெல்லாம் இருக்கிறது.

போன வாரம் ஒரு பொது விநியோகத் துறை ஊழியரைப்பார்த்தேன் ’ஸ்ஸ்ஸ்அப்பாட தெனந்தினம் நிறுத்துப்போட்டு பொஜம் எறங்கிப்போச்சு, இனி எண்ணி ரெண்டுமாசந்தான்,’  ‘ அதுக்குப்பிறகு?. ‘ ’அதுக்குப்பிறகு இந்த ஒத்த ரூவா அரிசி,நூறுநாள் வேலையெல்லாம் இருக்காது’ என்று சந்தோஷப்பட்டுக்கொண்டார். இதுபோல என்ன என்ன சந்தோஷமெலாம் மீண்டும் திரும்பப்போகிறதோ.

13 comments:

பா.ராஜாராம் said...

//கிராம,நகர,கிளை,தலைவர்கள் உற்ச்சாகமாகி விட்டார்கள்.கைமுதல் போட்டு புதுக்கடை திறக்கிற சந்தோசம் பொங்கி வழிகிறது அவர்களின் முகங்களில்.//

//தமிழகத்தின் முதலாம் புரட்சிமன்னர் கொடுத்த துருப்பிடித்திருந்த வாளை திரும்ப எடுத்து சானைபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்//

//இரண்டாயிரத்துக்குப்பிறகு பிறந்த குழந்தைகளும்,செவ்வாய்க்கிரகத்தில் இருந்து பூமிக்குவந்த மனிதர்களும் ’அவங்க ஏன் படுத்திருக்காங்க, ஜனங்க ஏன் வரிசையில் வந்து பாத்துட்டுப்போறாங்க ? என்று கேள்விகள் கேட்கிறார்கள். வரலாற்று ஆசிரியர்களிடம் தான் அதற்கான பதில்களெல்லாம் இருக்கிறது.//

//இதுபோல என்ன என்ன சந்தோஷமெலாம் மீண்டும் திரும்பப்போகிறதோ//

களை கட்டிருச்சாக்கும்? :-))

நேசமித்ரன் said...

பா.ரா ஆமாம் :))

வினோ said...

இப்போவேவா அண்ணா? இன்னும் மூணு மாசம் இருக்கில்ல?

வானம்பாடிகள் said...

:)).இங்க இன்னும் சுவத்துல ரிஸர்வ்ட் ஃபார் எழுத ஆரம்பிக்கல

சுந்தர்ஜி said...

கிண்டலும் கேலியும் பொங்கிவழிகிறது வார்த்தைக்கு வார்த்தை.

இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் இன்னும் எத்தனை நாளைக்கோ காமராஜ்?

ஈரோடு கதிர் said...

புரட்சி ஓங்குக!

karurkirukkan said...

//இரண்டாயிரத்துக்குப்பிறகு பிறந்த குழந்தைகளும்,செவ்வாய்க்கிரகத்தில் இருந்து பூமிக்குவந்த மனிதர்களும் ’அவங்க ஏன் படுத்திருக்காங்க, ஜனங்க ஏன் வரிசையில் வந்து பாத்துட்டுப்போறாங்க ? என்று கேள்விகள் கேட்கிறார்கள். வரலாற்று ஆசிரியர்களிடம் தான் அதற்கான பதில்களெல்லாம் இருக்கிறது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் , சிம்லா நகருக்கு பொழுது போக்குபூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரி 10 வயது சிறுமி ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஹிமாச்சல் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்‌ளார்.

Read more: http://karurkirukkan.blogspot.com/#ixzz1EwwzZutw

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா நடக்குது நாட்டுல....

vasan said...

ஆட்சியின் த‌ன்மை மாறுமா? கோப‌ல‌புர‌ நுழைவிலிருந்த‌ காவ‌ல் அவுட் போஸ்ட், அப்ப‌டியே போய‌ஸ் தெரு நுழைவுக்குப் போக‌லாம். 'த‌லைவ‌ரே, ஐயா' என வ‌ழிந்த‌ காவ‌ல் துறை,
'அம்மா, தாயே' என வ‌ளைய‌லாம். குடும்ப‌ம், கிராமிய‌ ஆட்ட‌ம் மாறி ச‌கோத‌ரி கும்ப‌ல் சாமியாட்ட‌ம் ஆக‌லாம்.

அன்புடன் அருணா said...

அட!அதுக்குள்ளேயா???

க.பாலாசி said...

உங்க ஸ்டைல்... கூடவே கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரே..வையும் சேத்துக்குங்க... எல்லா வேடிக்கையையும் ஒருசேர பாக்கலாம்..

க.பாலாசி said...

எனக்கு சமீபத்தில் படிச்ச இ.பா.வோட வேதபுரத்து வியாபாரிகள் ஞாபகம் வருகிறது.. அவ்வளவு கிண்டல் அந்த நாவல்..எல்லாமே நடப்பு நிகழ்வுகளுக்கு குறைவில்லாமல்.

ஓலை(Sethu) said...

இந்தத் தேர் திருவிழா போது தான் சுட்ட பணம் எல்லாம் மக்களுக்கு இலவசமா விநியோகிக்கப் படுது. இப்ப கொஞ்சம் அவசரப் பட்டு உள்ள கொண்டு போய் வைச்சுட்டாங்களா. கொஞ்சம் பொறுத்திருந்தா மக்கள் கையில கொஞ்சம் காசு புரண்டிருக்கும்.