10.2.11

தொலை தூரத்திலிருந்தும் துரத்தும் பசி.


பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் அவர்கள் வருவார்கள்.டீச்சர் ஆட்டுக்கு கொஞ்சம் கொழ ஒடிச்சிக்கிறோம் என்பார்கள்.நிமிர்ந்து  நிற்கும் அந்த வேப்பமர கிளைகள் மின்கம்பியில் தட்டுவதால் அதை வெட்டத்தருணம் பார்த்துக்கொண்டிருப்போம். அவர்களுக்கு கொடுக்கிறதாகப் பாவனை செய்துகொண்டு  வெட்டுகிற வேலையை மிச்சம் பிடிப்போம்.ஒடித்த வேப்பங்கிளைகளை அள்ளிச் சைக்கிளில் கட்டிக்கொண்டு எதோ செய்யாத தர்மம் பண்ணியவர்களைப் பார்ப்பது போலப் பார்த்துக்கொண்டே செல்வார்கள்.வெயிலடிக்க ஆரம்பித்த பிறகு அடிக்கடி வருகிறார்கள். இன்றும் ஒருவர் வந்தார். இந்தவாரம் இது மூன்றாவது ஆள்.

ஐயய்யோ வேண்டாமுன்னு சொல்லுங்க வெயில் நெருங்குது, நிழல்லில்லாமப் போயிரும்,ஒடிக்கிற கொழ கீழே செடிங்கமேல உழுது.அவர் பரிதாபமாக முழித்தார். நான் வீட்டுக்குள் வந்துவிட்டேன். அவர் பார்வையின் கெஞ்சலைத் தாங்க முடியாமல் வந்து கணினியில் ஒளிந்து கொண்டேன். அவள் அடுப்பில் காய் கறிகளோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள். திடீரென கிளைகள் ஒடிந்துவிழும் சத்தம் கேட்டது.

எழுந்து போய் வெளியில் பார்த்தேன்.பின்னாடியே ஓடிவந்து ‘மனசு கேக்கல நாந்தான்  ஒடிச்சுக்கச் சொன்னேன்’ என்று சொன்னாள்.ஆடுக பட்டினியாக் கெடக்குமா,சொன்னாரு சொல்லிக்கொண்டிருக்கும் போதே குரல் தாழ்ந்தது. ’பாவம் வாயில்லாச் சீவனுக்காக ரெண்டு மைல் சைக்கிள் மித்திச்சு வார்றாரு பாவமாருந்திச்சு’ .இப்போது இவள் கண்களைப்பார்க்க முடியாமல் மீண்டும் இங்கே வந்துவிட்டேன்.

11 comments:

ஓலை said...

அருமை. நல்ல இளகிய மனது.

மதுரை சரவணன் said...

ata appadiyaa... super.

அன்புடன் அருணா said...

பசி துரத்தி இளகாத பெண்கள் உண்டா என்ன?அருமை!

ஈரோடு கதிர் said...

தலைப்பு மிகப் பொருத்தம்

vasu balaji said...

குழை ஒடிந்ததில் பிழைத்தது மனம்:)

பா.ராஜாராம் said...

நெகிழ்வான பகிர்வு மக்கா.

Unknown said...

வாசித்தேன்

pavithrabalu said...

பசி உணர்தல் என்பதை பெண்மையோடு, தாய்மையோடு பிணைத்துள்ளீர்கள்.. அருமையான பதிவு தோழர்,...

டக்கால்டி said...

கிளை பறிக்க சொன்னதும் முதலில் மறுத்த மனைவி கதாப்பாத்திரமா? எனக்கு புரியவில்லை...ஆயினும் கதை அருமை...:-)

காமராஜ் said...

ஓலை,
சரவணன்,
அருணா,
கதிர்,
அண்ணா,
பாரா,
சிவா,
தோழர்,
எல்லோருக்கும்
நன்றி.

காமராஜ் said...

அன்பின் டகால்ட்டி.
இது கதையல்ல
நிஜம்.
பசியும் நிஜம்.