2.2.11

ராணுவ பீரங்கிகளில் இருந்து புறாக்கள் பறக்கும் தேசம்.


தாஹீர் சதுக்கம் மானிட சமுத்திரமாக மாறிக்கொண்டு வருகிறது. '' முபாரக் வேண்டாம் ஜனநாயகம் வேண்டும்'' என்கிற கோஷம் அலையின் உருமலோடு ஒலிக்கிறது.கெய்ரோவின் தெருக்களில் நைல் நதி பொங்கிப்பிராவகம் எடுத்தது போல ஊர்வலங்கள் நகர்ந்து வருகிறது.இந்து கிறித்தவன் என்கிற முபாரக்கின் பிரித்தாலும் சூழ்ச்சி நொறுங்கடிக்கப்பட்டு மாற்றத்திற்கான ஒற்றுமை எதிர்கொள்ளமுடியாத பேருழுச்சியாக மாறிப்போனது.’என் நாடு என் நாடு’ என்கிற தேசீய கீதம் போராட்டக்காரர்களின் சங்க நாதமாக எகிப்து முழுக்க ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ராணுவத்தின் சீருடைகளும் கவச வாகனங்களும் துப்பாக்கி முனைகளும் கூட தாங்கள் ஏவல் நாய்களில்லை ரத்தமும் மூளையும் உள்ள இந்த தேசத்தின் சொத்து என்பதை சொல்லிக் கொடுக்கின்றன. ராணுவத்தின் இந்த புது அடங்காமை எஞ்சிய உலகத்துக்கான வரலாறு காணாத செய்தி.

இனி எகிப்தின் பெயர் கேட்கும் போதெல்லாம் பிரமீடுடுகள் மாதிரி,நைல்நதி மாதிரி நாகரீகத்தின் தொட்டில் மாதிரி இந்த மக்கள் எழுச்சியும்
நினைவுக்கு வரும். அப்படியாப்பட்ட சூடான மக்கள்,சூது வாதுகளுக்கு இடம் தராத மக்கள்,  இந்த நிமிஷத்து எகிப்து மக்கள்.

இதோ எங்கள் தேசத்து நடுவன் உள்துறை மந்திரி மோடியின் கைகளைப் பிடித்துக்கொண்டு ’வாருங்கள் தீவிரவாததை ஒழிப்போம்’ என்று வசனம் பேசுகிறார். முன்பாதியில் ரவுடிகளாகவும் பின்பாதியில் கடமை உணர்ச்சி மிக்க காவலர்களாகவும் மாறுகிற திரைப்படங்கள் பார்க்கிற உணர்வுதான் மிஞ்சுகிறது. ஏனென்றால் நமது உள்துறை மந்திரி நல்ல தமிழரல்லவா ?

17 comments:

vasu balaji said...

classic

உயிரோடை said...

//முன்பாதியில் ரவுடிகளாகவும் பின்பாதியில் கடமை உணர்ச்சி மிக்க காவலர்களாகவும் மாறுகிற திரைப்படங்கள் பார்க்கிற உணர்வுதான் மிஞ்சுகிறது. //

அருமை.

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல ஒரு அலசலும் சாடலும், அருமை....

hamaragana said...

அன்புடன் வணக்கம்
உலகின் மிக அதிக ஜனத்தொகை கொண்ட நாடான சீனாவில் மாணவர்களின் ஜனநயாக போர்ரட்டதிர்க்கு கிடைத்ட பரிசு பீரங்கி குண்டுகள் எத்தனை பேர் இறந்தனர் என்பது அந்தாண்டவனுக்கு தான் தெரியும்.. அருகில் உள்ள நமது சகோதர-சகோதரிகள் எத்துணை பேர் --- ஆனால் ஆரம்ப உலகின் நாகரீகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் எகிப்தில் ராணுவம் நாங்களும் மனிதர்களே !!!! எங்கள் மக்களை நோக்கி எங்களது துப்பாக்கி திரும்பாது !!!.என்ன பாராட்டினாலும் தகும்... நீங்கள் கூறியது போல் வரலாற்றில் உயரிய இடம் பெற்று விட்டார்கள் எகிப்து ராணுவத்தினர்... .

பா.ராஜாராம் said...

//இனி எகிப்தின் பெயர் கேட்கும் போதெல்லாம் பிரமீடுடுகள் மாதிரி,நைல்நதி மாதிரி நாகரீகத்தின் தொட்டில் மாதிரி இந்த மக்கள் எழுச்சியும் நினைவுக்கு வரும்//

ஆம்!

அருமையான பதிவு மக்கா!

Unknown said...

Attakasam. Super.

க.பாலாசி said...

//அப்படியாப்பட்ட சூடான மக்கள்,சூது வாதுகளுக்கு இடம் தராத மக்கள், இந்த நிமிஷத்து எகிப்து மக்கள்.//

காலையில்தான் நினைத்தேன். அப்படிப்பட்ட சூடாகும் மக்கள் குரல் இங்கேயும் வரவேண்டும். இல்லையெனில் இந்த அரசியல் புழுக்கள் நெளிந்துகொண்டாதானிருக்கும்...

ரொம்ப நாளாச்சு.. உட்காந்து படிக்கணும், விட்டது எல்லாத்தையும்...

காமராஜ் said...

நன்றி பாலாண்ணா.

காமராஜ் said...

நன்றி லாவண்யா.

காமராஜ் said...

நன்றி அன்பின் மனோ

காமராஜ் said...

hamaragana said...

நன்றி ஐய்யா

காமராஜ் said...

நன்றி பாரா

காமராஜ் said...

சேது சார்

பாலாசி நன்றி

சிவகுமாரன் said...

என்ன செய்வது ? ஜெயிலில் மூத்த கைதி கையில் வார்டன் பொறுப்பு கொடுப்பதாக சொல்வார்கள் ( உண்மையா தெரியவில்லை ) அப்படித்தான் இதுவும்,

ஜோதிஜி said...

கட்டக் கடேசியாக முடித்துள்ள வரியை வைத்தே ஒரு குமுறு குமுறத் தோன்றுகிறது.............

தலைப்பு மிக அற்புதம்.

kashyapan said...

எகிப்தில் அப்துல் கமல் நாஸருக்குப் பிறகு சதத் என்பவர் ஜனாதிபதியானார்.குடியரசு தின ராணுவ அணிவகுப்பு நடந்து கோண்டிருந்தது. குடியரசுத்தலைவர் சதத் அணிவகுப்பு மரியாதையை பீடத்தில் ஏறி ஏற்றுக்கொண்டிருந்தார்.அணிவகுப்பில் கலந்து கொண்டிருந்த வீரர்கள் பத்துபேர் துப்பாக்கியோடு விலகி வந்து அவரைச் சுட்டுக்கொன்றனர்..தினாமன் சதுக்கத்தில் மக்கள் ராணுவம் மாணவர்களை சுடாது என்பது தெரிந்த அமெரிகக் கைக்கூலி மாணவர்களை தூண்டிவிட்டான். மாணவர்கள் ராணுவ வீரனை அடித்துநோறுக்கினர்.வீரர்கள் திருப்பி அடிக்கவில்லை.அந்த கைக்கூலிக்குத்தானிந்த ஆண்டு நோபல் பரிசு கொடுத்திருக்கிறார்கள்.---காஸ்யபன்

ராகவன் said...

அன்பு காமராஜ்,

தஹ்ரீர் சதுக்கம், சூயஸ், அலெக்ஸாண்டிரியா, இஸ்மாயில்யா என்று எல்லா இடங்களிலும் இது போன்ற போராட்டங்கள் நடந்தன.

எதற்கான போராட்டம், ஏன் ஆரம்பித்தது என்பதற்கு ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கிறது... புரிதல் ஆளுக்காள், தேசத்துக்கு தேசம் ஒவ்வொரு விதமாய் இருக்கிறது.

ஹீலியாபோலிஸில் தங்கியிருந்தபோது, கெய்ரோவின் கலவரங்கள் செவ்வாயோடு முடிந்துவிட்டது என்று தான் தோன்றியது... கிஸாவை கடந்து வரும்போது கேட்ட கலவரக்குரல்கள்... ஒருமித்து பலம்பொருந்தியதாய் இருந்தது.

கிடைத்த இடத்தில் தங்கி ஒரு இரவை கழித்தோம்... அல்ஜசீராவில் ஊதப்பட்ட புள்ளிவிபரங்கள்... மேலும் பயமுறுத்தியது... தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ என்று தோன்றியது. ஒரு சரித்திர நிகழ்வை பார்க்க முடிந்தது ஒரு மகிழ்ச்சியே...

எகிப்தில் இருந்த எட்டு நாட்கள்... எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது காமராஜ்.

எழுதுகிறேன்....

அன்புடன்
ராகவன்