22.3.11

" கருப்பு நிலாக்கதைகள் " - எழுத்தாளர் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் விமர்சனம்.


முதல் கதையான விடுதலையின் ஒத்திகையில் நடகவேஷத்தில் கூட எளியவன் வாயிலிருந்து வந்து விழுகிற நாயே என்ற சொல்லைத் தாங்கமுடியாத விபரீதம். ஏகாலித் தொழிலின் அடிமைத்தன வேலைகளைக் கூட விளையாட்டாகவும், வேலையாகவும் எடுத்துக்கொள்கிற சாலமுத்துவாலேயே தாங்க முடியாத அவமதிப்பு,ரயிலில் கிடைக்கிற சாதியற்ற வாஞ்சை.

மருளாடியின் மேல் இறங்கியவர்கள் ரொம்பவும் தனித்துவமான சிறந்த கதை.நுட்பமான சமூகப்பார்வையும் உளவியல் கூறும் உள்ள கதை.

நினைவில் சலசலக்கும் பனங்காடு ஆறுமுகச்சாமியின் உடல் சிலிர்ப்பில் துல்லியமாகிற ஆழ்மனக்காதல்.சம்பாரிமேளம் பற்றிய கதையில் பாண்டியன் கிராம வங்கித்தோழர்களும்,கிருஷ்ணக்குமாரும் மனசுக்குள் வந்து போகிறார்கள்.தொழிற்சங்கங்கள் மீது அசூயை ஏற்படுத்த முனைகிற தமிழ்சிறுகதை உலகின் ஒட்டு மொத்த எத்தனிப்புக்கும் எதிராக இருக்கிற கதை.மரியாதையை ஏற்படுத்துகிற சிறுகதை.

இந்தத்தொகுப்பிலுள்ள கதைகளில் ஆகச்சிறந்த சிறுகதை ’கருப்பு நிலாக்களின் கதை’.கண்ணகி மறக்கமுடியாத உயிர்ச்சித்திரம்.ஆண்களின் பலம் பலவீனங்களினால் அலைப்புறும் பெண்ணின் அவலமும் ஆவேசமும் தெரிக்கிற கதை.அரிவாள்மனைக்கு இப்படியொரு நற்குணமா ?.செவத்த மணியின் பலகீனம்,பால்ச்சமியின் மூர்க்கம் ரெண்டும் அவளை சிதைக்கிறது.அவைதான் அவளை உக்கிரப்படுத்தவும் செய்கிறது.

இன்னொரு ரயிலில் ஸ்டேசன் மாஸ்டர் உயர்ந்து நிற்கிறார்.ரயில் முகம் பார்த்தறியாத சிறுவனின் ஆவலும் அலைபாய்வும் கண்ணுக்குள் தெரிகிறது.பெரியார் பேரனுக்குப் பிடித்த பேய் நல்ல சித்தரிப்பு. பயந்த மனசுக்குள்ளொரு மனிதநேயம், உறவுச் சேர்க்கையைக் கலைத்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வு.ஆனியன் தோசையில் மனசு ஆடி ஆடிக் குலுங்கிச் சிரிக்கிறது.

எளிய மக்களின் வாழ்வியலையும், உளவியலையும் அவர்களது மொழியிலே மட்டுமில்லை.அவர்களது மனநோக்கிலிருந்தும் உணர்த்துவதும் விவரிப்பதுமித்தொகுப்பின் தனித்துவச்சிறப்பு.பொது மனிதனாகப்பாவனை பண்ணாத எழுத்தாளனின் நேர்மைதான் இந்தத் தனித்துவத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

வாக்கிய அமைப்புகளிலும் சற்று வித்தியாசம் தென்படுகிறது. வாக்கிய அமைப்புக்களில் எழுத்தாளர் ஏற்படுத்துகிற லாவகம் அந்த மொழிக்குரிய வெள்ளந்திக் குணத்தைச் சற்றே மட்டுப்படுத்துகிறது. விளைவு ? உணர்ச்சி ரீதியான தாக்குதல் நிகழ்த்துவதான பலகதைகள், பலநிகழ்வுகள், உணர்ச்சி ரீதியான அலைக்கழிப்பை ஏற்படுத்தாமல் போய்விடுகின்றன. அறிவை மட்டுமே உரசி விட்டு நகர்கின்றன.

வாசித்து முடித்தவுடன் மனசுக்குள் வேரடிப்பது கதைகளின் யதார்த்தமும்,நம்பகத்தன்மையும்,உணர்ச்சி ரீதியான அலிக்கழிப்பும்தான்.
களச்சித்தரிப்பு இல்லை.நிகவுகளைச்சித்தரிக்கும் கதைகள் காலம் இடம் போன்றவற்றைத் தாண்டி ச்செல்வதால் கதைகள் மனசுக்குள் வேரடிக்க மறுப்பதற்குக் காரணம்.

சச்சி, கண்ணகி, சாலமுத்து, வெள்ளச்சிகள் மறக்கமுடியாத உயிர் சிற்பங்களாகி நிலைக்கின்றன.எழுத்தாளனின் தனித்துவம் இந்தக்கதைகளெங்கும் கிடக்கின்றன.சேரிக்குள் இருந்து குடியானவத் தெருவைப்பார்க்கிற கண்ணோக்கில் ஒட்டுமொத்த கதைகளின் தொனியும் பயணமும் நிகழ்கிறது.

வடிவமைப்பும்,அச்சும், அட்டையும் நேர்த்தியாகச் செய்துவிட்டு ஃபைனல் ப்ரூப் கோட்டை விட்டு விட்டீர்கள்.எழுத்துப்பிழைகள் வாசிப்பு ருசிக்குள் கூடுதல் உப்பைப்போடுகிறது.வட்டார மொழிச்சிறுகதைகளில் எழுத்துப்பிழை வருவது பெரும் ஆபத்து.அனர்த்தங்களைத் தந்துவிடும்.

பொதுமனிதனாகப்பாவனை பண்ணாத எழுத்தாளனின் நேர்மை மொழியாளுமையிலும் செயல்பட்டிருந்தால் ஆகச்சிறந்த தொகுப்பாகவும் காலத்தால் மறக்கமுடியாத கலைப் படைப்பாகவும் மாறியிருக்கும்.

விமர்சனங்கள் உங்களையறியாமல் உங்களிடம் ஒட்டியிருக்கும் குறைகளைச் சுட்டுதல்.குறை களைந்த காமராஜை கண்டறிதல் என்று கொள்க.இந்தச் சிறுகதைத்தொகுப்பு ஆகச்சிறந்த கதைகள் கொண்ட அணிவகுப்பு. கிராமத்தின் ஏழ்மை இல்லாமை உள்முகச்சிதைவுகள்,நிறைவேறாத ஆசைகள் ஆகியவற்றைநல்ல கரிசல்காட்டு மொழியில் படைப்பாகத்தந்திருக்கிறீர்கள்.

’கருப்புநிலாக்கதைகள்’, ’மருளாடியின்மேல் இறங்கியவர்கள்,’ ’வேரைவிரட்டியமண்’, ’சம்பாரிமேளம்’ போன்ற உன்னத கதைகளை- சாகாவரம்பெற்ற கதைகளைத்தந்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

7 comments:

Unknown said...

தேர்ந்த விமர்சனம்,,,

க.பாலாசி said...

சார்.. ஒவ்வொருதடவயா முயற்சிபண்ணி வாங்கமுடியாம போயிடுது.. கண்டிப்பா படிக்கணும்னுங்கற எண்ணம் இருக்கு.. வாங்கி படிக்கிறேன். நல்ல விமர்சனம்..

செ.சரவணக்குமார் said...

நேர்த்தியான விமர்சனம். கருப்பு நிலாக் கதைகள் நூலிற்கு சரியான நபரிடமிருந்து கிடைத்த பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள் காமு அண்ணா.

vasu balaji said...

இலட்சுமணப் பெருமாள் கதைகள் படித்ததும் எழுதியிருந்தேன். அடுத்தது கருப்பு நிலாக் கதைகள் காத்திருக்கிறது என்று. இரண்டிலும் உறுத்தல் அச்சுப் பிழைகள். அருமையான கதைகளில் ஆழவிடாமல் உறுத்துகிறது. அதையும் மீறி மனதில் சம்மணமிடும் கதாபாத்திரங்கள் அற்புதம். ஒன்றிரண்டு நாளில் என் அனுபவமும் பகிர அவா. வாழ்த்துகள் காமராஜ்.

ஓலை said...

Nalla vimarsanam. Vaippu kidaikkum pothu padikkanum. Vaanambadi sir arimugaththukku waiting.

Rathnavel Natarajan said...

Thiru Kaamaraj,
Kindly read Maelanmai Ponnuchchamy's short story in OmSakthi March 2011 issue - POOVUKKUL THEE - if you are not having the book, kindly approach me, I will send it by courier. It is a wonderful story. Kindly publish the story in your website thanking Omsakthi and analyse the story. The Greatman should come to the limelight. My address.
N.Rathnavel,
7-A, Koonangulam Devangar North St., Srivilliputtur. 626 125.
94434 27128
rathnavel_n@yahoo.co.in
rathnavel.natarajan@gmail.com
Thank You.

superlinks said...

உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

நன்றி