6.5.11

பிரிவின் அணையுடைக்கும் ஒரு துளி உப்பு நீர்

ஒரு மாசிப் பின்னிறவில்
பாட்டியின் சேலைக்ககதப்பில்
கலககலக்கும் கோலிக்குண்டு கனவில்
துயிழ்ந்தவனை எழுப்ப ஏழவில்லை
வறுமைக்கும் பிரியத்துக்குமான இழுபறியில்.

ஊர் கடந்து தட்டப்பாறைக்குப் போன
அம்மா அப்பாவுக்கு, எதிர்த்து தட்டுப்பட்ட
ஏழு வயதுச் சிறார்களைப்பார்த்த பொழுதெலாம்
தொண்டைக்குழி அடைத்திருக்கும்.

சொல்லில் அடங்காதவற்றை மௌனத்தில்,
மௌனத்திலும் அடங்காதவற்றை நினைவுகளிலும்
நினைவுகளில் அடங்காதவற்றை ஒருதுளி உப்புநீர்
கட்டாயம் உடைத்திருக்கும்.


12 comments:

இராமசாமி said...

அருமை காமு சார்..

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

ஓலை said...

Arumai. Azha vaikkareenga. Anubavmanu ninaicha varuththamaaga irukku nanbare!

kashyapan said...

காமராஜ் அவர்களே! தன் ஏழுவயது மகனை தாயிடம் விட்டுவிட்டு I.T கம்பெனியில் வேலை பார்க்க மதுரை- பங்களுரு குளிரூட்டப்பட்ட விரைவு ரயிலில் செல்லும் தமிழ்ச்செல்வியும், ராஜசெகரனும் விடும் கண்ணிரும் உப்புக்கரிக்கிறது. வாழ்க்கையின் நிர்ப்பந்தம் பாசத்தை மீறுகிறது. இது வளர்ச்சி என்கிறார்களே! அப்படித்தானா?---காஸ்யபன்

ஆ.ஞானசேகரன் said...

//மௌனத்திலும் அடங்காதவற்றை நினைவுகளிலும்
நினைவுகளில் அடங்காதவற்றை ஒருதுளி உப்புநீர்
கட்டாயம் உடைத்திருக்கும்.//

வணக்கம் தோழரே மிக்க அருமை

சுந்தர்ஜி said...

நல்ல ஆன்மாக்கள் ஜீவிப்பதற்கு ஆதாரமே இந்த ஒரு துளி உப்பு நீர்தான்.

பாரமாயிருக்கிறது மனதும் வாழ்க்கையும் காமராஜ்.

வானம்பாடிகள் said...

க்ளாஸ்!!

க.பாலாசி said...

கண்டிப்பாக... அந்த ஒருதுளிதான் எல்லாமும்.. அருமை சார்..

பத்மா said...

இது வரப்போகும் பிரிவினை குறித்துமா காமராஜ் சார் ?

Dr.எம்.கே.முருகானந்தன் said...

துளி உப்புநீர் சிந்த வைத்தீர்கள். நல்ல கவிதை

அன்புடன் அருணா said...

/ஒருதுளி உப்புநீர்
கட்டாயம் உடைத்திருக்கும்./
கண்டிப்பாக....

சுந்தரா said...

வாசிக்கும்போதே அடைத்தும் உடைத்தும் பார்க்கிற கவிதை.

அருமை அண்ணா.