28.5.11

இரண்டு உலகம்


அந்த விடுதியின் ஜன்னல் வழியே பார்த்தால் அரசு மதுபானக்கடையின் பார் தெரியும்.ஓயாத சளச்சளப்பேச்சு சிலநேரம் பாட்டு சிலநேரம் சிரிப்பு அல்லது உரத்த குரலில் கெட்ட வார்த்தைகள் கேட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு சத்தம் முடியும் போதும் நாலைந்து சீசாக்கள் ஏற்கனவே குவித்துப் போட்ட காலி சீசாக்களோடு கலகலவெனச் சேர்ந்துகொள்ளும் சத்தம் கேட்கும்.

எட்டிப்பார்த்தால் மலைப்பாய் இருக்கும் அளவுக்கு மலைபோல் குவிந்து கிடக்கும்.காலிப்பாட்டில் மட்டும் விற்றால் ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கில் வருமாணம் வருமாம்.இரவு தூங்கிய பிறகும் பாட்டில்கள் குவிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

மறுநாள் காலையில் கீழ்பகுயில் புத்தம் புது காய்கறிகள் குவித்து பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.கொஞ்சம் தள்ளி நாலைந்து கிராமத்துப்பெண்கள் சின்னச்சின்ன கட்டுகளாக பச்சைப்புல்லைக் கட்டி
வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு கட்டு இரண்டு  ரூபாய் அல்லது ஐந்தே வைத்துக்கொண்டாலும்  அந்த நாள் முழுக்க அவர்களுக்கு என்ன கிடைத்து விடப்போகிறது. பொறுக்க முடியாமல் கேட்டபோது நாப்பது ரூவா கெடைச்சாலே கடவுள் புண்ணியம் என்று சொன்னார்கள். ஒரே ஒரு கட்டிடத்தின் கீழே தான் இந்த ரெண்டும்.

7 comments:

சிநேகிதன் அக்பர் said...

விசித்திரமான உலகம்.

Ramani said...

இரு உலகம்
தலைப்பும் பதிவும் அருமை
ஒரு புகைப்படம் இணைத்திருந்தால்
இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

இரண்டு உலகம் படித்ததும் ஒரு காட்சி மனதில் ஓடியது. ஊர்ப்புறங்களில் பஞ்ச காலத்தில் கற்றாழைச் சோற்றை வேகவைத்து உண்டது ஒரு உலகம். இன்று சென்னையில் கத்தாழையை அடுக்கி வைத்து கத்தாழைச் சோறு ஜூசுக்கு டம்ளர் 20ரூக்கு அடிபிடி. :))

இளங்கோ said...

இரு உலகையும் நீங்கள் சொல்லிய விதம் அழகு. அதிலும் ஆண்கள் மது அருந்திக் கொண்டு, காசை செலவழிக்க.. இந்தப் பெண்களோ காசை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் குடும்பத்துக்காக.

ஹரிஹரன் said...

ஏழை இந்தியன், பணக்கார இந்தியன் தேசியத்தில் மட்டுமே பொதுமை.

ஓலை said...

Nice portrayal.

க.பாலாசி said...

இரண்டு உலகமும் இதுதான் உலகம் என்றே சொல்கிறது... எல்லாபுறமும் இதேபோல்தான் இருக்கிறது.