6.11.11

வரலாறு நெடுகிலும் அணைக்கப்பட்ட அறிவொளி தீபங்கள்.......

                                         ( அமெரிக்கப்படை தீயிட்டுக்கொளுத்திய பாக்தாத் நுலகம்)

இந்தியா முழுமைக்கும் பரவியிருந்த பௌத்தம் உயிர்ப்பலிகளை எதிர் கொண்டு நிர்மூலமாக்கப்பட்டது.போதிமரம் இருபதுமுறைக்குமேல் வெட்டப்பட்டது.உலகின் முதல் பல்கலைக்கழகமான நலந்தா தரைமட்ட மாக்கப்பட்டது. அதற்குப்பின்னர் அங்கிருந்த அறிவுப்பொக்கிஷங் களான ஓலைச்சுவடிகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.(கிமு1193)பற்ற வைத்த தீ மூன்று மாதங்களுக்கு மேல் எறிந்துகொண்டிருந்ததாம்.

http://skaamaraj.blogspot.com/2009/10/blog-post_27.html

போலந்து,பல்கேரிய நாடுகளில் நாஜிகள் நூலகங்களைத்தீகிரையாக்கினர்(கிபி 1941-42).

இலங்கையில் யாழ் பல்கலைக்கழக நூலகம் எறிக்கப்பட்டது(1981).

ஆப்கனில் தாலிபான்கள் நூலகத்தைத்தீக்கிரையாக்கினார்கள்(1998).

ஈராக் போரில் அமெரிக்கா ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்ததோடு நின்றுபோகாமல் அங்கிருந்த புகழ் மிக்க கலைப் பொக்கிஷங்களைஅழித்து நாசம் பண்ணியது (கிபி2003).

இப்படி வரலாறு நெடுகிலும் அறிவுத்தீபத்தை அணைக்கிற சிந்தனைக்கொலைகள் நிகழ்ந்து வந்திருக்கிறது. அவையாவும் கடைந்தெடுத்த காட்டுமிராண்டிச் செயல்கள் என்றால் சென்னை கோட்டூர்புரத்தில் இருந்து இடம்மாற்ற முடிவு செய்யும் தமிழக யோசனை  மேற் சொன்னவற்றின்  ஹைடெக் வடிவம். நூலகம்  ஆளும் கட்சி,எதிர்க்கட்சி எனும் குடுமிபிடிக்குள் அடங்காத அறிவுப்பெட்டகம்.அதன் மேல் கைவைக்கிற அரசின் செயலைக் கண்டிக்க அறிஞர்கள்,எழுத்தாளர்கள் கலைஞர்கள் மட்டும் போதும் என்கிற எல்லைகள் தவறானது. அதைத் தாண்டி இது ஒரு பொதுப் பிரச்சினை என்பதை பரவலாக்க வேண்டும்.

அண்ணா நூற்றாண்டுவிழா நூலகப்பிரச்சினையில் குரலெழுப்பும் எல்லோருக்கும் செவ்வணக்கம்.

o

by Su Po Agathiyalingam on Wednesday, 02 November 2011 at 17:25

புஷ்யமித்திரன் புத்தநினவுத்தூண்களை இடித்தான். ஹிட்லர் நூலகத்தையும் புத்தகங்களையும் எரித்தான்.சிங்களக் காடையர்கள் யாழ் நூலகத்தை எரித்தனர்.தாலிபான்கள் புத்தர் சிலையை உடைத்தனர்.அமெரிக்க ராணுவம் ஈராக்கில் அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் சூறையாடியது.பாபர் மசூதியை சங்பரிவாரங்கள் நொறுக்கின.வரலாறு முடியவில்லை... ஜெயலலிதாவுக்குபகை கருணாநிதிமீதா? தமிழ் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதுமா ? பாடபுத்தகங்களில் செம்மொழி மீதெல்லாம் கருப்பு சாயம் பூசி அழித்தார்..’யாதும் ஊரே யாவரும் கேளிர் ’பாடலை மறைத்தார் அது வர்ணாஸ்ரத்திற்கு எதிரான குரல் என்பதால்.சமச்சீர் கல்விக்கு எதிராக கொக்கரித்தார்.செம்மொழி நூலகத்தை குப்பைத் தொட்டியில் வீசினார்.தலைமைச் செயலகத்தை அடாவடியாக மருத்துவமனையாக மாற்றுவேன் என்கிறார். இப்போது அண்ணா நூலகத்தை பிய்த்து எறிகிறார்.இதையெல்லாம் வரலாற்றில் பாசிசம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்?ஆனால் வரலாறு பாசிஸ்டுகளைக் குப்பைத்தொட்டியில்தான் வீசியெறிந்துள்ளது? கடைசியாக ஒரு தகவல்:குமரிமுனை திருவள்ளுவர் சிலை பாசிஸ்டுகள் கண்ணை உறுத்துகிறதாம்...தற்போது ஆயுதப்போலீஸ் காவல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாம்.ஒரு நாள் கடற்கரை கண்ணகி சிலைபோல் வள்ளுவரும் காணாமல் போக ஏற்பாடாம்.என்ன செய்யப் போகிறாய் தோழா

இடிபாடுகளில் தொலைந்த இந்திய ஞானம் ( நலந்தா பற்றிய குறிப்பு)
http://skaamaraj.blogspot.com/2009/10/blog-post_27.html

6 comments:

kashyapan said...

மேற்ச்சொன்னவற்றின் ஹைடெக் வடிவம்!சபாஷ் காமராஜ் ! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்

ஓலை said...

Sad affairs.

எல்லா கோவில் முகப்பிலும் ஒரு நந்தி இருக்கு. அது தனது பார்வையை தடுக்குதுன்னு எந்த கடவுளும் சொன்னதா சொல்லிகிரதில்லை. கலைஞர் எதைப் பண்ணாலும் தூக்கி அடிக்கனும்னு நினைக்கிரவங்களுக்காக கலைஞர் ஒரு நந்தியை எங்காவது நிப்பாட்டிருக்கலம்! :-)))

விமலன் said...

வரலாறு சொல்கிற உண்மைகளுக்கும், இந்த காழ்ப்புணர்ச்சிக்கும் பெரியதான வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை.

K.s.s.Rajh said...

நல்ல தகவல்கள்

ஹரிஹரன் said...

நூலகத்தை இடம் மாற்றும் செயலை திமுகவினர் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இடதுசாரிகள், எழுத்தாளர்கள் தான் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

கட்டியிருப்பதில் ஊழல் இருக்கிறது என ‘தினமணி’ தலையங்கம் கூறுகிறது அதனால் கழகத்தினர் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்களோ?

திலிப் நாராயணன் said...

காம்ஸ்! மனுவாதியான ஒருவரிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? ஆடு கோழிவெட்டத்தடை, மதம் மாறத்தடை, ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஒரே உத்தரவில் பதவி நீக்கம் செய்தது கண்ணகி சிலை அகற்றம்,என தொடர்கிறது அட்டகாசங்களின் பட்டியல் . ஆயினும் ராணிமேரிக்கல்லூரியை சட்டபைக்காக தெரிவு செய்தது, சமச்சீர் கல்வியை அரை மனதுடன் நிறைவேற்றியது பெங்களூர் நீதிமன்றததில் இரண்டு நாள் நேரில் 130 வாய்தாவுக்குப் போகாமல் இருந்து விட்டு முதன் முறையாக ஆஜரானது என காலம் சில பதிவுகளை செய்து கொண்டுதான் இருக்கிறது.