8.7.12

அமீர்கானின் நேர்மைக்கு ஒரு செவ்வணக்கம்.


எப்பொழுதாவது இப்படி நேர்ந்து விடுகிறது. மிகுந்த சோர்வில் இருக்கும் போது எங்கிருந்தாவது ஒரு கை வந்து தலை கோதிச்செல்வது போல, நாவறண்டு அலையும் பொட்டக்காட்டினிடியே கிடைத்த ஊத்து தண்ணி போல, எப்பொழு தாவது இப்படி நடந்து விடுகிறது.

இன்று 08.07.12 விஜய் தொலைக்காட்சியின் ’சத்யமேவ ஜயதே’
.
நேர்மையாகச் சொல்லப்போனால் இயக்குநர் ஸ்டாலின் k விஜயன் சொன்னது போல ஒரு தேசியத்  தொலைக் காட்சிமுதன்முதலாக தீண்டாமை பற்றிய முழுநீள நிகழ்சியை ஒருங்கிணைத்திருப்பது இதுவே முதல் முறை. அதைப்போலவே இந்த தேசத்தினைப் பற்றிய அக்கறையுள்ள மிகச்செறிவான ஆவணப்படம் india un touched வெகுவாக முன்னிலைப் படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறை. இன்னும் ஆயிரம் ஆயிரம் பெருமைகள் இந்தியாவுக்கு இருந்த போதிலும் அவைகளுக்கு அருகில் இழிவும் கண்ணீரும் வழிந்த படி வீற்றிருக்கும் தீண்டாமையைச் சரிசெய்யாமல் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

ஒரு மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் இனி கடவுள் கூட இந்தியாவில் பிறக்கும்போது தலித்தல்லாத சாதியில் பிறக்கவேண்டும் என்று தான் சிரத்தை எடுத்துக்கொள்வார் என்று சொன்னார். அதைச்சொல்லும்போது அவரின் முகம் ஒரு யுகாந்திரச் சோகத்தைச் சுமந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு கடவுள்  மறுப்பாளர். போதிக்கப்படும் நீதி பாதிக் கப்படும்போதுதான் தெரியும். இந்த தீண்டாமைக்கொடுமையின் சிறு துகளைக் கூட அறியாமல், இங்கிருந்து அது போய்விட்டது என்று சொல்லுபவரைப் பார்க்கும்போது கொலை வெறி தான் வருகிறது.

ஒரு பள்ளியில் படிக்கிற ஐநூறு குழந்தைகளில் மூன்று அருந்ததியக் குழந்தைகளைப்பொறுக்கி எடுத்து  கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லுகிற ஆசிரியன் குறித்து நீங்கள் என்ன மதிப்பீடு வைத்திருக் கிறீகள். இந்தச் சமூகம் அந்தத்தா..யை எப்படி எதிர் கொள்கிறது.இந்த அரசு அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று யோசிக்கையில் வாழ்க்கை நரகமாக மாறிப்போகிறது.

இந்த சோகத்தை,இந்திய அவலத்தை அங்குலம் அங்குலமாக பேசியதால் அமீர் அமீர்கான் உண்மையில் மிகப்பெரும் இடத்துக்குப்போய் நிற்கிறார். அவரது சத்யமேவ ஜயதே எல்லா நிகழ்ச்சிகளையும் மிஞ்சி நிற்கிறது.
ஒரு லாகூன், கொடுக்கும்போதும், ஒரு தாரே ஜமீன் பர் கொடுக்கும் போதும் அவர் மீது கவிழ்ந்திருந்த நம்பிக்கைக்கு சின்ன பங்கம் கூட வைக்காத நேர்மையாளராக மிளிர்கிறார்.

வாழ்த்துக்கள் அமீர்கான்.

8 comments:

hariharan said...

அமீர் கானின் இந்த நிகழ்ச்சி எல்லோராலும் பேசப்பட்டுவருகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்துகிற நிகழ்ச்சி. எப்படி இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை முதலாளித்துவ ஊடகங்கள் தயாரிக்கின்றன / வெளியிடுகின்றன என்பது தான் மர்மமாக உள்ளது.

ஓலை said...

Neenda naatkalukkup piragu ...

Vanakkam nanbare!

kashyapan said...

அமீர் கானின் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க உதவுவது ரிலையன்ஸ் ஃப்வுண்டெஷன் என்பது கூடுதல் தகவல் தோழா! மதிய உணவின் போது என்னைத்தனியாக உட்காரவைக்கிறார்கள் அதனால் நான் பள்ளிக்குப் போவதில்லை என்று சிறுவன் கூருகிறான். ஸ்டாலின் அந்தப் பையன் அதனை சிரித்துகோண்டே கூறுகிறான் எனபதிவிடுகிறார். தலித்துகள் மீது நடத்தப்படும் வன்முறை ,பாலி யல் துயரங்கள்,அரசு அலுவலகங்களில் இன்றும்-இன்றும் நடக்கும் அக்கிரமங்கள் ஏன் காட்டப்பட வில்லை என்பது கேள்விகுறிதான். வடமாநிலங்களில் நடப்பதை கண்கூடாகப் பார்க்கும்போது தமிழ்நாடு சிறிய அளவில் சமூக ஆர்வலர்களால் முன் கை எடுத்திருப்பதாகவே படுகிறது.தோழா! அமீர்கானை எனக்குப் பிடித்திருக்கிறது.அதனைவிட "தீண்டாமை ஒழிப்பு முன்னணி " களத்தில் இறங்கி செய்யும் பணி மிகவும் பிடித்திருக்கிறது---காஸ்யபன்

vimalanperali said...

இது போலான நிகழ்ச்சிகள் நிறைய தயாரிக்கப்பட வேண்டும் ,நிறையவே பேசப்பட வேண்டும்,விவாதிக்கப்பட வேண்டும்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நேர்மையான பதிவு.பகிர்வு.நன்றி காமராஜ்.

www.eraaedwin.com said...

சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக எந்த இடத்தில், எந்த வடிவத்தில் யார் எதைச் செய்தாலும் அவர் திசை நோக்கிக் கும்பிடவே செய்வேன்.

நச்சென்ற பதிவு. நேரம் வாய்க்கும்போது நீட்டிவிடுங்களேன்

unknown said...

வணக்கம்

தீண்டாமையை தீண்டாமை ஆக்குவோம்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை

என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....