28.7.09

நீர்வீழ்ச்சி - கண்காட்சி
பாசிகளைத் தொங்கவிட்டபடி

நாடோடி மக்கள் வாழ்க்கை

தங்கச்சங்கிலி தவழவிட்டபடி

நகரவாசிகள் பொழுதுகடத்துவார்கள்


பேரீச்சம்பழ இறுக்கத்தில் கூட்டம் உரசும்

ஆணுடல்களிலிருந்துசீமைச்சாராய

நெடி மேல்நோக்கி கிளம்பும்

விதிமாறாத நெரிசல் அவச்தைகளிருந்தாலும்


தெரிந்த குரங்குகளிடமிருந்து

தின்பண்டங்களைப் பாதுகாப்பதும்

தெரியாத திருடர்களிடமிருந்துபயத்தை

பதுகாப்பதும் சாகசம்.


மலைமுழுக்க சேலை உடுத்திக்கொண்ட

பசிய காடுகளை பார்ப்பதுஆனந்தம்.

சேலையை ஏற்றிக்கட்டியஈர யுவதிகளைப்

பார்த்துக்கொண்டு தலைதுவட்டுவதும். ஆனந்தம்.


வீட்டுக்கு வந்தவுடன்

மொட்டை வெயில் முறைக்கும்

மினரல்வாட்டர் தீர்ந்து விட்டதும் உறைக்கும்.

6 comments:

யாத்ரா said...

அருமை.

அன்புடன் அருணா said...

வீட்டுக்கு வந்ததும் என்ன?திரும்பி வரும் வழியிலேயே வீட்டின் கவலையைச் சுமந்து கொண்டிருப்போமே!!!

கதிர், ஈரோடு said...

//வீட்டுக்கு வந்தவுடன்


மொட்டை வெயில் முறைக்கும்


மினரல்வாட்டர் தீர்ந்து விட்டதும் உறைக்கும்.//

நெத்தியடி

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

ஆ.ஞானசேகரன் said...

அருமை அருமை...

ummar said...

ஆஹா அருமை அருமை தங்களின் கவிதை