2.7.09

ஷாஜஹானின் கவிதை.

வலிகளின் கொடுமையை
உரக்கச்சொல்லும்இவை
எழுத்தாளர் ஷாஜஹானின் கவிதை
.

கருப்பும் வெளுப்பும்
---------------------------

கருத்தவன் காணும் உலகு ஒன்றாகவும்
வெளுத்தவன் பார்ப்பது மற்றொன்றாயும்
எதிரெதிர் திசைகளில் ஒரே வாழ்க்கை.


கடலோர வீட்டுக்கு உயிர்பயம் தந்து.
மாடவீதியில் இதம் சுகம் தந்தும்
வெவ்வேறாய் அர்த்தப்படுகிறது
அதேபௌர்ணமி இரவு.


குடிசை வீட்டின் தூக்கம் கெடுத்தும்
வீட்டில் தாலாட்டிக் கொடுத்தும்
மாறு பட்டு நிறம் காட்டுகிறது
அந்திநேர கனமழை.


உரைபனிக் கொடுமையைஒரு போதும்
அறியான் வெப்ப நாட்டான்
பெண்ணின் வலிகளெப்படி
அறிவான் ஆணாய்ப்பிறந்தவன்.


அடங்கிப் போவென நீ போதிப்பதற்கும்
அத்து மீறி அவன் கொதிப்பதற்கும்
ஊருக்குள் உன்வீடும் சேரியில் அவன் வீடுமாய்
பிரிந்துகிடப்பதே காரணம் என்றுணர்.

14 comments:

யாத்ரா said...

மிக நல்ல கவிதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

காமராஜ் said...

யாத்ரா வாருங்கள்.
உங்களோடு பேசலாமா ?

ஆ.முத்துராமலிங்கம் said...

பகிர்வு அருமை!!

காமராஜ் said...

நன்றி முத்துராமலிங்கம் சார்.

காமராஜ் said...

வருங்கள் அகநாழிகை சந்தோஷம்.
எனது வலைப்பக்கத்தில் இணைந்ததற்கு
நன்றி.

மாதவராஜ் said...

நல்ல கவிதை!

கதிர் said...

சுருக்கென்று தைக்கிறது...

பகிர்வுக்கு நன்றி நண்பரே!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கவிதை..
நல்ல பகிர்வு
வாழ்த்துகள் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கவிதை..
நல்ல பகிர்வு
வாழ்த்துகள் நண்பா

பாலா said...

arumai sir

காமராஜ் said...

நன்றி தோழா

காமராஜ் said...

நன்றி கதிர், வருகைக்கும்
கருத்துக்கும்.
இன்னொரு முறையும் நன்றி
ஒரு நெகிழ்வான பின்னூட்டம்
தந்தற்கு.

காமராஜ் said...

எங்கள் அன்புத்தோழர் ஞானசேகரன்
வாருங்கள் வணக்கம்.

நன்றி பாலா

யாத்ரா said...

அன்பு காமராஜ், என்ன இது கேள்வி, உங்களுடன் பேசுவதில் எனக்கு தான் மிக மகிழ்ச்சி, அவசியம் பேசுவோம், தனி மடலனுப்புகிறேன்.