4.7.09

ஆராய்ச்சிமணியை இடைமறிக்கும் பாதுகாப்பு

மெட்டல் டிடெக்டர்கள், தானியங்கி ஒளிப்பதிவுக்கருவி, வருகைப்பதிவேடு, இதையெல்லாம் தாண்டி கண்காணிக்கசீருடையிலும், சாதா உடையிலும் காவலர்கள். அதையும் தாண்டிப்போனால் பெண்கள்,ஆண்களைத் தனித்தனியே சோதனை செய்ய காவலர்கள்.
பல அடுக்கு பாதுகாப்பு வளயங்கள் தாண்டிஅடையாள அட்டை வாங்கிப் போனால் தலைமைச் செயலகம்.உள்ளே ரக ரகமான வாகனங்கள் தனியார்களதும், அரசாங்கத்தினதும்.
ஏழு மழைதாண்டி ஏழுகடல் தாண்டிமேலேறிப்போனால் அமைச்சர்கள் அலுவலர்கள்சிப்பந்திகள், கோப்புகள்.கால்கடுக்க காத்திருந்துமனுக்கொடுத்து திரும்பும் சாமான்யகள்

நூறு ஆண்டுகளுக்குமேல் பழமையான மரங்கள்அந்த மரங்களுக்கு மேலே எந்த அடையாள அட்டையுமில்லாமல் வந்துபோகும் பறவைகள்.

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

//நூறு ஆண்டுகளுக்குமேல் பழமையான மரங்கள்அந்த மரங்களுக்கு மேலே எந்த அடையாள அட்டையுமில்லாமல் வந்துபோகும் பறவைகள். //

வந்துபோகும் சுதந்திர பறவைகள்

அன்புடன் அருணா said...

ரொம்ப ஆழமான விஷயத்தை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்...