9/11 மற்றும் 26/11 இந்த இரண்டு தேதிகளைக்கேட்ட மாத்திரத்தில் பயங்கரவாதம் என்கிற பூச்சாண்டியின் உருவம் நிழலாடும். உலகமெங்கும் தீவிரவாதம் இந்த நேரத்தின் உடனடிச் சவாலாக முன் நிறுத்தப்படுகிறது. அந்த அரணுக்குள் அந்தமாயக் கேடயத்துக்குள் மறைந்துகொண்டு அதிகாரம் தனது மறைமுக செயல்திட்டங்கள் அணைத்தையும் வெகு இலகுவாக நிறைவேற்றிக்கொள்கிறது.
இதோ மும்பை தாஜ் சொகுசு விடுதித் தாக்குதல் நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. அந்த தக்குதலில் களப்பலியான உயிர்களில் அசோக் காம்டெ,கார்கரே,சலஸ்கர் எனும் பெயர்கள் முக்கியம் வாய்ந்தவை.தாக்குதலை முறியடிக்கப்போன அவர்கள் வீரமரணத்தை ஏந்திக்கொண்டார்கள். சம்பவ இடத்தின் தீவிரத்தை உடனடியாக காவல் துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்லியும் நெடுநேரம் போதிய படைகள் அனுப்பப்படவில்லை.காமா மருத்துவமனையில் நாற்பது நிமிடம் இரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காவல் உதவி ஆணையாளைர் அசோக் காம்டே கேட்பாரற்று இறந்து போனார்.
இப்படியான இருட்டடிப்பு செய்யப்பட்ட சேதிகளோடு ஒரு புத்தகத்தை தனது காதல் கணவருக்கு நினைவஞ்சலியாக்குகிறார் வினிதா காம்டே. மறைந்த உதவி ஆணையாளர் அசோக் காம்டெயின் மனைவியான வினிதா எழுதிய to the last bullet எனும் இந்தப்புத்தகம் மும்பை கவல்துறை மற்றும் அரசியலில் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. வெளியிட்ட நாளிலே விற்றுத்தீர்ந்து விட்ட அந்த விவாதப் புத்தகத்தின் வெளியீட்டு நிறுவணமான அமேயா பப்ளிகேஷன் இது இந்திய புத்தக வரலாற்றில் ஒரு திருப்பம் என கருதுகிறது.
இறந்தவர்களின் பெயருக்குப்பின்னால் ஒளிவட்டம் வரைந்துவிட்டு தனது பாதுகாப்பு ஓட்டைகளை மறைக்கிற அரசின் எல்லா பாக்கங்களையும் விவாதப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகிறது.
6 comments:
என்ன சொல்ல???? விவாதம் தான் செய்ய முடியும், இழப்புக்கு என்ன செய்ய? ஒரு லட்சம் ரூபாய்க்காக கொல்ல வந்தார்களாம் நல்ல தாய் பிள்ளைகள்... ம்ம்ம்ம் இதை எல்லாம் பார்க்கும் போது 11 நவம்பர் 2012 அருகில் இருக்கு, தீவிரவாதம் அழியும் அட்லிஸ்ட்
/இறந்தவர்களின் பெயருக்குப்பின்னால் ஒளிவட்டம் வரைந்துவிட்டு தனது பாதுகாப்பு ஓட்டைகளை மறைக்கிற அரசின்/
வாய் மூடச்செய்யும் வார்த்தைகள்.
it was the last bullet for kamte.
more bullets available in the government!
bcas govnt is for the people!
//இறந்தவர்களின் பெயருக்குப்பின்னால் ஒளிவட்டம் வரைந்துவிட்டு தனது பாதுகாப்பு ஓட்டைகளை மறைக்கிற அரசின் எல்லா பாக்கங்களையும் விவாதப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகிறது.///
ம்ம்ம் என்ன செய்ய ...
//இறந்தவர்களின் பெயருக்குப்பின்னால் ஒளிவட்டம் வரைந்துவிட்டு தனது பாதுகாப்பு ஓட்டைகளை மறைக்கிற அரசின் எல்லா பாக்கங்களையும் விவாதப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகிறது.///
அம்மாதிரி விவாதத்தையும் உடைக்கவல்ல நரித் தனம் தெரிந்தவர்கள் இந்த அரசியல்வாதிகள்.......
தமிழில் இந்த புத்தகம் கிடைக்குமா..!!
இந்திய தீவிரவாதம் மற்றும் அரசாங்கத்தின் குழப்பங்கள் அதிக அளவில் விவாதங்களுக்கு உட்படுத்தபட்டு கொண்டிருக்கின்றன சமீப காலங்களில். என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மைகள் புத்தகங்களாக சொல்லப்பட்டாலும் - மாற்றம் என்ன நிகழ்கிறது - யார் நிகழ்த்த முடியும் என்ற ஒற்றை கேள்விதான் எப்போதும்.. !!
Post a Comment