30.9.11

கண்மாய் அழிவும் உள்ளாட்சித்தேர்தலும்.

அடைமழைநேரம் மழை வெறித்ததும் அப்படியே கண்மாய்க்கரைப்பக்கம் காலார நடந்து போனால் சொத சொதவென நீர்பாரித்துக்கிடக்கும் செம்மண். பின்னாடித் திரும்பிப்பார்த்தால் கால்தடம் கூடவரும். கண்மாய்க்கரையில் ஏறி நின்றுபார்த்தால் நுங்கும் நுறையுமாய் சிகப்புத் தண்ணீர் வந்துகொண்டிருக்கும். அப்புறம் ஒருமாத காலத்துக்கும் த்ண்ணீர் செந்நிறமாகவே கிடக்கும்.நாளாக ஆக அது அலை யடித்து தண்ணீர் நிறமாக மாறும். புழுப்பூச்சிகள், தட்டான்கள், அரைத்தவளை, கெண்டைப்பொடிகள், சிறுநண்டுகள் தண்ணீர்ர்ச்சாரை, நீர்க்காக்காவென ஜீவராசிகள் புதுசாக்குடியேறும்.பழைய்ய டியூப்களில் காற்றடைத்துக்கொண்டு நீச்சலடிக்கலாம்.நீந்திக்களைத்தபோது நண்டுபிடிக்கலாம்.மடைக்கார ஒத்தையால் சண்முகண்ணாச்சியோடு சேர்ந்து மடைதிறக்கலாம்.அங்கிருந்து வரப்பு வழியே கண்மாய் நினைவுகளோடு வீடுசேரலாம்.
இவை எல்லாவற்றையும் அள்ளிச்சிதறி சண்டையும் கூத்தும் கும்மாளமுமாய் இறங்கி மீன்பிடித்து வருகிற ஒருநாள் வரும்.அது கண்மாய் அழிகிற நேரம்.அந்தசேறும் சகதியும் சண்டையும் வசவுமாக வந்து நிற்கிறது உள்ளாட்சித்தேர்தல்.ஆளாலுக்கு சகதிக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள் கூடைகூடையாய் அள்ளிக்குவிக்க.

2 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
கண்மாய்கள் இருந்தால் இவையெல்லாம் பார்க்கலாம்.
ஆக்கிரமிப்புகளினாலும், மண் அள்ளியும் கண்மாய்களை சீரழித்து வருகிறார்கள். வேதனையாக இருக்கிறது.

திலிப் நாராயணன் said...

அழிந்த கண் மாயில் மீன்பிடிக்கலாம்தான்.புதிய பொருளாதாரக்கொள்கையில் 20 ஆண் டுகளைத்தொலத்து விட்ட நமமவர்களை என்னவென்று எத்தனை மடி வலையில் பிடிப்பது( இரட்டைமடி.....?)