2.10.11

வராமல் வந்த மாமணி இந்தப் பஞ்சயத்துராஜ்இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்று சொன்ன சொல்லில் நிறைய்ய மர்மங்கள் இருக்கிறது.முதலில் ஆன்மா என்கிற சொல்லே மிகவும் மர்மமானது.ஆம் கண்டுபிடிக்க முடியாத,அல்லது இல்லாத ஒன்றை நாம் மர்மமென்றுசொல்லலாம். இரண்டாவதாக அவர்சொன்னது கிராமங்களின் மண் வளங்களையா, இல்லை இயற்கையின் வசீகரத்தையா, இல்லை மனிதர்களையா என்று தெரியாத மர்மங்கள் இருக்கிறது.

அவர் சொன்னது இயற்கையும் மண்ணும் சார்ந்ததாக இருந்தால் அவை இப்போது அழிந்து கொண்டிருக்கிறது.மனிதர்கள் குறித்து என்றால் அவை ஒவ்வொன்றும் ஒரு நாடாக இருந்தது, இருக்கிறது என்பதுதான் நிஜம்.தமிழகம் முழுக்க உள்ளாட்சித்தேர்தல் காய்ச்சல் பரவி கொதித் துக்கொண்டிருக்கும் நேரத்தில் மஹாத்மாவின் பிறந்த நாள் வந்திருக்கிறது. புலால் விற்பனை நிலையங்களும், மதுபானக் கடைகளும் பூட்டிக் கிடக்க்கிற இந்த ஒருநாள் இந்த அரசு அவருக்கு போடுகிற ஒரு கூளைக்கும்பிடு அவ்வளவுதான். நகரங்களில் இந்த இரண்டுவகைக் கடைகள் பூட்டிக்கிடக்க கிராமங்களில் இந்த இரண்டும் தங்குதடையின்றிக் கிடைக்கும் விசித்திரம் நிறைந்த தேசம் இது.

பஞ்சாயத்துராஜ் என்கிற திட்டம்  உண்மையில் மிகவும் உன்னதமானது. அதிகாரப்பரவல் கடைக்கோடி கிரமத்தானுக்கும் போய்ச் சேரவேண்டும் என்கிற திட்டமும் அதற்கான சட்டமும் உருவாவதற்காக பாடுபட்ட கனவுகண்ட அத்துணை சிந்தனையாளர்களும் போறுதற்குறியோர். கொக்கோ கோலாவுக்கு தண்ணீர்தர இந்தியாவின் பிரதமரும்,தமிழக முதல்வரும் ஒத்துக்கொண்டு கையெழுத்திட்ட பின்னாடிக்கூட சம்பந்தப்பட்ட கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் அதை நிரகரிக்கமுடிகிற அதிகாரம் படைத்தது பஞ்சாயத்துராஜ்.
செருப்பு அணிந்துகொண்டு ஆதிக்கசாதித் தெருவில் நடந்தால் உயிர்போகும் அபாயம் இருக்கிற கிராமசபைகளின் தலைமை நாற்காலியில் ஒரு தலித் உட்கார வழிவகை செய்கிற இந்த ஏற்பாடு புரட்சிகரமானது. அதை உள்வாங்கிக்கொண்டு அமல்படுத்திய ராஜீவ்காந்தி தனது இமாலயத் தவறுகளுக்கு பரிகாரம் தேடிக்கொண்ட செய்கை இது.

கிராமங்கள் ஆதிக்க சாதியினரிடமும்,ஆண்டைகளிடமும்,பண்ணையார்களிடமும் சிக்கிக்கொண்டு திக்கித்திணறுகிற போது வாரமல் வந்த மாமணி இது. சாலைகள்,கண்மாய்,ஆறுகள்,வீடுகள்,வீட்டுக்குள் கழிப்பறைகள்,வறுமை தீர வேலைவாய்ப்பு, என்று வறிய மனிதர்களின் கைகளுக்கு நேரடியாக இந்திய அரசின் திட்டங்கள் பகிர்ந்தளிக்க வழிவகை செய்கிற நேர்த்தியான ஏற்பாடு இது. இன்னும் சொல்லிச் சொல்லி சிலாகிக்க ஆயிரமாயிரம் நற்பண்புகள் கொட்டிக்கிடக்கிற திட்டம் இந்த பஞ்சாயத்து ராஜ். எப்படி காமராஜர் காலத்து கல்விச் சாலைகள் இந்தியக் கிராமங்களின் முகங்களைப் புரட்டிப்போட்டதோ அதே போல, அதன் அடுத்த அத்தியாயம் இது. ஆனால் இதைக்கொண்டாட மேட்டிமை வாதிகளும் ஊடகங்களும் தயாராக இல்லை என்பதில் உண்மையான மேல்கீழ் அரசியல் இருக்கிறது.

ஆனால் ஐயோ....அப்படிப்பட்ட அதிகாரத்தை அறுபது ரூபாய் மதுவுக்கும் ஐம்பது ரூபாய் பிரியாணிக்கும் அடகுவைக்கிற நடைமுறையை என்னவெனச் சொல்லுவது. ஊர் ஊராய்ப் போய்ப்பாருங்கள் மதுவின் வாடைக்குள்ளும்,நூறு இருநூறு ரூபாய் லஞ்சக்காசுக்காகவும் பஞ்சாயத்துராஜ் தனது அருமை பெருமைகளை இழந்துகொண்டிருக்கிறது. அந்தப்பெட்டிக்கடையில் ரெண்டுபேர் பேசிக்கொண்டிருந்தார்கள். ’’மொத்தம் 647 ஓட்டு அதுல நம்ம நாயக்கமாரு ஓட்டுமட்டும் 418 ஓட்டு. அவன் 113,இவன் 52,அப்புறம் அல்ரசில்றயெல்லாம் சேத்து மிச்சம் 64 ஓட்டு.நம்ம பயக அத்தனபேரு ஒட்டுமொத்தமா போட்ருவான்.நம்ம தான் இந்த தடவையும்’’.என்று.
மாஞ்சு மாஞ்சு நாளும் பொழுதும் செலவழித்து கொண்டுவந்த இந்த திட்டத்தை பெட்டிக்கடையில் பொழுதுபோகாத ஒரு ஜாதிவெறியன் சீரழிப்பான் என்று நினைத்துப் பார்த்திருப்பார்களா?

ஜனநாயகமும், பஞ்சாயத்துராஜும் திரும்பத் திரும்ப இந்த கடவுளால் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பது தான் இந்த தேசத்தின் பெரும் சோகம்.இதை இந்த அழிமாண்டத்தை சமர்செய்து சீர்செய்யப்போகிற ஒருவனும் இன்னும் பிறக்கவில்லை அவர் அந்த அரக்கர் ஒருநாள் பிறக்காமலா போவார் ?

11 comments:

Rathnavel said...

அருமையான பதிவு.
மக்களுக்கு அவர்களின் பலம் தெரியவில்லை.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள் திரு காமராஜ்.

வைரை சதிஷ் said...

அருமையான பதிவு.

காமராஜ் said...

Rathnavel said...
அருமையான பதிவு.
மக்களுக்கு அவர்களின் பலம் தெரியவில்லை.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள் திரு காமராஜ்//

ஐயா ந்னறி.

காமராஜ் said...

நன்றி திரு சதீஷ்.

இரசிகை said...

thevaiyanu pathivu..

ஓலை said...
This comment has been removed by the author.
ஓலை said...

Arumaiyana varigal nanbare!

காமராஜ் said...

நன்றி ரசிகை.

காமராஜ் said...

ஓலை said...
Arumaiyana varigal nanbare!//

ரொம்ப நன்றி நன்பரே.

விமலன் said...

நல்லபதிவு.வாழ்த்துக்கள்.பஞ்சாயத்ராஜ் சீரழிவது கிராமங்களில்,ஒட்டு மொத்தமாக,,,???

கிச்சான் said...

மக்களக்கு அந்த பதவி இன் மதிப்பும் அதிகாரமும் தெரியாமல் இருக்கத்தான்
குவாட்டரும் ,கோழி பிரியாணியும் ,பணமும் கொடுக்க படுகிறது அண்ணா !!!


அன்புடன் கிச்சான்!