22.12.11

சுடச்சுடத்தேநீர் மற்றும் அரசியல்


எல்லா நேரமும் குளிரும் பனியும் கவிழ்ந்திருக்கிறது.
தேநீர்க்கடைகளில் கூட்டம் குறைந்த பாடில்லை.
ஒருகுவளையின் கடைசி மிடறுகுடிக்குமுன்னே
ஆறிப்போகிறது சுடேற்றும் திரவம்.
ஒவ்வொரு மிடறு உள்ளே போகும் போதும்
வெளியேறுகிறது அவரவர்க்கான அரசியல் அறிவு.
ஞொம்மால இருக்குற சேட்டங்கடையெல்லாம் நொறுக்கணும்
என்கிறான் தமிழ்ப் பற்று மிகுந்த சுத்தத் தமிழன்.
சிங்கப்பூர்ல நம்மூர்க்காரன் ஒரு அமைச்சர் தெரியுமா
தொடை தட்டும் ஆண்ட பெருமைத் தமிழன்.
இதையெல்லாம் கேளாது பசிமிகுந்து வாய் பார்த்து
நெடுநேரம் கையேந்தி நிற்கிறான் ஒரு வறிய தமிழன்.
எதுவும் பேறாது என்று திரும்பும் அவன் குனிந்து
ஒரு எச்சில் சிகரெட்டை எடுத்து பற்றவைக்கிறான்
இப்போதைக்கு இதுபோதும்
வயிற்று எரிச்சலுக்கும் வாடைக்குளிருக்கும்.

6 comments:

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நல்லாயிருக்கு சொற்சித்திரம்... எப்படி இருக்கீங்க?

ரொம்ப நாளாச்சு பேசி... பேசணும்

அன்புடன்
ராகவன்

வானம்பாடிகள் said...

நல்லாருக்கு காமராஜ்

Rathnavel said...

நிஜம் தான்.

க ரா said...

நல்லாயிருக்கு காமு சார்...

sasikala said...

உண்மை தான்

Vel Kannan said...

எல்லாவரிகளிலுமே ஒரு மறைமுக அரசியல்(இனம் , மொழி பொருளாதார அரசியல்) இருப்பதாக கருதுகிறேன்
சார், ரொம்ப நல்லா இருக்கு