30.12.11

ஒரேதரம்....தொலைக்காட்சி சிறந்த பத்து
மொக்கைசினிமாக்களை வரிசைப்படுத்தும்.
இந்தியா டுடே சிறந்த பத்து
கொள்ளைக்காரர்களை வரிசைப்படுத்தும்,
பத்திரிகைகள் சிறந்த பத்து
பரபரப்பை வரிசைப்படுத்தும்,
குமுதம் சிறந்த பத்து
தொடைகளை வரிசைப்படுத்தும்,
அரசியல்வாதி சிறந்த பத்து
சூட்கேசுகளை பத்திரப்படுத்துவார்,
அம்பானிகள் சிறந்த பத்து
தனியார் திட்டங்களை வரிசைப்படுத்துவார்கள்,
அன்னா ஹசாரே சிறந்த பத்து
உண்ணாவிரதப்பந்தலை வரிசைப்படுத்துவார்,
சமூக வலைத்தளம் கூட
பத்து வரிசையை பற்றிக்கொள்ளும்
இவையெல்லாம் சேர்ந்து
வஞ்சித்த மக்களுக்கு வஞ்சனையின்
எண்ணிக்கையும் தெரியாது அவற்றைத்
தரப்படுத்தவும் நேரமிருக்காது
அவர்களுக்கு ஒன்றுமட்டும் தெரியும்
மேற்சொன்ன எல்லாமே ஒரேதரம் என்று.

7 comments:

வானம்பாடிகள் said...

கடைசி வரி நச் குத்து:))

santhamoorthi 09884513571 said...

super sir

பத்மா said...

pathu pathu nu en perthaan fulla :))
jokes apart fantastic sir

பத்மா said...

pathu pathu nu en perthaan fulla :))
jokes apart fantastic sir

விமலன் said...

எல்லாம் நம்து தலை எழுத்து என வரிசைப்படுத்தி சாமதான ஆகிக்கொள்கிற மனது வாய்க்கப்பெற்றவர்களாய் ஆகிப்போனபின்,,,,,,,இப்படித்தான்/

விமலன் said...

எல்லாம் நம்து தலை எழுத்து என வரிசைப்படுத்தி சாமதான ஆகிக்கொள்கிற மனது வாய்க்கப்பெற்றவர்களாய் ஆகிப்போனபின்,,,,,,,இப்படித்தான்/

saambaldhesam said...

அவர்களுக்கு ஒன்றுமட்டும் தெரியும்
மேற்சொன்ன எல்லாமே ஒரேதரம் என்று./ தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை ஜனநாயக முற்போக்கு இயக்கங்களுக்கு உண்டு...