2.1.12

விளம்பர முதல்வாதம்.

                                                        ( நிழற்படம் : ஆண்டனி-சாத்தூர்)

ஆடுகளத்தில் இறங்க
விளையாட்டுமட்டும்
தெரிந்திருந்தால் போதாது.

மேடு பள்ளத்தை சமப்படுத்த
வெறும் மண்வெட்டிகள்
மட்டும் கானாது.


கூட்டத்தோடு வேட்டைபோனால்
விளையவைத்து அறுத்தால்
பங்கு உண்டு அப்போது.
இல்லாதவற்றைக்கூறு போடும்
பங்குவர்த்தகம் இப்போது.

இலக்கிய,இலக்கணங்கனங்கள்
தகுதிதரம் கொண்டுதயாராகும்
வியாபாரிக்கு வெறும் சரக்குமட்டும்
கையிருந்தால் விற்காது

சரக்குமுறுக்கா
செட்டியார் முறுக்காவெனில்
விளம்பரமே எப்போதும் முறுக்கு

ஆடுகளத்தில் இறங்க
விளையாட்டுமட்டும்
தெரிந்திருந்தால் போதாது.

8 comments:

விமலன் said...

வித்தையும் தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது.எல்லாவற்றிலும்/

Rathnavel said...

நிஜம் தான்.
விளம்பர காலம்.
விளம்பரம் தான் மேலோங்கி நிற்கிறது. உண்மை ஒதுங்கி நிற்கிறது.
வாழ்த்துகள்.

காமராஜ் said...

நன்றி விலமலன்

காமராஜ் said...

Blogger Rathnavel said...

//நிஜம் தான்.
விளம்பர காலம்.
விளம்பரம் தான் மேலோங்கி நிற்கிறது. உண்மை ஒதுங்கி நிற்கிறது.
வாழ்த்துகள்.//

நன்றி அய்யா...

கே.ஆர்.பி.செந்தில் said...

//வித்தையும் தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது.எல்லாவற்றிலும்//

ஆமாம்...

ஹைதர் அலி said...

பஞ்சு மிட்டாய் சுமக்கும் படம் ஆயிரம் சேதிகளை சொல்லுகிறது சகோதரரே

அ. வேல்முருகன் said...

இல்லாத சரக்கை இருக்கும் சரக்காக வைத்து வியாபாரம் நடப்பதால் விலை விண்ணை முட்டுகிறது,

ஆம் வியாபார நுணுக்கம் அல்லது முறுக்கு

சரியாக சொன்னீர்

அ. வேல்முருகன் said...

இல்லாத சரக்கை இருக்கும் சரக்காக வைத்து வியாபாரம் நடப்பதால் விலை விண்ணை முட்டுகிறது,

ஆம் வியாபார நுணுக்கம் அல்லது முறுக்கு

சரியாக சொன்னீர்