19.1.12

சல்மான்ருஷ்டியின் வருகையும் ஜெய்ப்பூர் இலக்கியத்திருவிழாவும்

எதிர்வரும் 20 ஆம் தேதி தொடக்கம் 24 ஆம் தேதிவரை ஜெய்ப்பூரில் நடக்க விருக்கும் ’ ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா 2012 ’ ஆசியாவின் மிகப்பெரிய இலக்கியச் சந்திப்பு. இதில் பங்கேற்க உலகின் 100  இலக்கிய   ஆளுமை கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.சமூகத்தின் பிரதான நிகழ் பிரச்சினைகளின் மீதான  சொற்பொழி வுகள் மற்றும் நேர்காணல்கள்  ஒழுங்கமைக்கப் பட்டிருக்கின்றன.

எழுத்தாளர் பாமா,கவிஞர் சேரன்,கவிஞர் சச்சிதானந்தன்  குல்சார்,  ஜாவித்அக்தார், சல்மான்ருஸ்டி, கபில்சிபல், ஓம்ப்ரகாஷ்வால்மீகி ஆகிய தெரிந்த  பெயர் களும் பலதெரியாத பெயர்களுமான இலக்கிய உலகத்தை ஒன்றாகப் பார்க்கமுடிகிற நிகழ்வு இது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் அதிகமாகப்பங்குகொள்கிறார்கள். இதுதவிர இசைத்துறை,நாடகத்துறை,மற்றும் திரைத்துறை பிரமுகர்களும் பங்குகொள்கிறார்கள்.

இதுவரை நடந்த அகில உலக இலக்கியசந்திப்புகளில் 7000 பார்வையாளர்கள் வரை கலந்துகொண்டதாக புள்ளிவிபரம்  சொல்லு கிறது. இந்த முறை கூடுதலாக 2000 பார்வையாளர்களை எதிர்பார்க்கிறது.ஆனால் சால்மன் ருஷ்டி எழுதிய சாத்தானின் வேதம் கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டு கடந்தும் பூதாகரமாகிறது. மத உணர்வுகளைப்புண்படுத்திய சல்மான்ருஷ்டி இந்தியாவுக்குள் வரக்கூடாது என உபி மதவாத அமைப்பு கடுமையாக எதிர்க்கிறது. அவர் ஒரு இந்தியர் எனவே அவரது விசாவை முடக்கிவைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை எனக்கைவிரிக்கிறது அரசு. ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்வர் கெல்லாட் கைபிசைந்து கொண்டிருக்கிறார். இந்த எதிர்ப்பு எதிரும் புதிருமான பரபரப்பு விளம்பரத்தையும் புயல் வேகத்தில் அதிகரிக்கிறது.

இந்த விழாவின் ஆரம்ப நிகழ்வே பக்தி இலக்கியமும் இந்தியாவும் என்கிற தலைப்பிலிருந்துதான் துவங்குகிறது. இலக்கியம் மனிதனில் இருக்கிற கரடுதட்டிப்போனவைகளை உதிர்த்து இலகுவாக்குகிற விஞ்ஞானம். ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவுக்குள், ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குள் நுழையத்தடை சர்வ சாதாரண நிகழ்வாக இருக்கிற இந்த இந்தியக் கட்டமைப்பில் இது போன்ற தொரு செய்தி பெரிதாக எந்தத் தாக்கத்தையும் செய்துவிடப் போவதில்லை. ஆனாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என எழுதிய  பூங்குன் றனாரரின் வரிகளும்,சாரே சகாஞ்சே அச்சா என்கிற சேர்ந்திசையும் மிகப்பெரும் இலக்கியாந்தஸ்து மிக்கவை. . தனது இறுதி ஊர்வலத்துக்காகக் கூட இந்தியாவுக்குள் நுழைய முடியாத ஓவியர் எம்.எஃப்.உசேனும் ஒரு மகாகலைஞன்.ஆனாலும் வரது ஆவிகூட இது மாதிரியான ஒதுக்குதலை ஒத்துக்கொள்ளாது.

3 comments:

kashyapan said...

காமரஜ் அவர்களே! இந்த நிகழ்ச்சிக்கு ஒருமுறை மறைந்த கந்தர்வன் அழைக்கப்பட்டிருந்தார். சல்மான் ருஷ்டியின் புத்தகத்தை ராஜீவ் காந்தி தான் தடை செய்தார்.எதிர்ப்பு இருந்தது. ஏன் தடை செய்தார்? இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்க .இப்பொது ருஷ்டியின் வருகையை தடை செய்ய்வெண்டும் என்று கெலாட் கோருகிறார். உ.பி. தேர்தலை மனதில் கொண்டு .---காஸ்யபன்

ஹரிஹரன் said...

எல்லாக் கருத்துக்களுக்கும் இடம் அளிக்கவேண்டும் அது சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதையாக இருந்தால் என்ன? வீரமணி எழுதிய கீமாயணாம் இருந்தால் என்ன.
பழைய செய்தியாக இருந்தாலும் சமீபத்தில் தான் வாசித்தேன், தலிபான் ஆட்சியில் இருந்தபோது ஆப்கனில் பேப்பர் பேக் ற்கு தடை செய்தார்களாம். பேப்பர் என்றால் அது குரானைக் குறிக்கிறதாம். அதில் பேக் செய்தால் அப்புத்தகத்தையே கிழிக்கிறமாதிரியாம். என்ன செய்யறது.

tamil said...

உங்கள் கட்சியும், அமைப்பும் ஏன் மெளனம் காக்கின்றன என்பதை விளக்குவீர்களா.