3.1.12

456+456

ஆங்கிலப்பள்ளிகளில் சுதந்திரம் தொலைத்து
பொதிசுமக்கிறதாய் நானும்.
அரசுப்பள்ளிகள் போட்டிகள் நிறைந்த தொழில்
நுட்பத்துக்குதகுதியற்றதென நீயும்.
வேஷ்டி விலகி,கையிருப்புச்சிதறி
மதுக்கடை வாசற் புழுதியில் கிடப்பவனை
அருவருப்பாய்க்கடந்துபோகும் நீயும்
அடுத்தவனிடம் கைநீட்டி கையூட்டு
வாங்கிய பஞ்சுமெத்தையில் புரள்வதொரு
பொழப்பா என்று அவனும்.
சொறிவதும் சொறிவதைப்புகழ்வதுமே
பொதுஇலக்கியமென இவனும்.
அழுக்கையும் அழுது புலம்பும் கண்ணீரையும்
படியெடுப்பதே அழகியலற்ற எழுத்தென அவனும்
அவரவர்க்கிசைவாக திருப்புகிறது சுக்கானை.
அவரவர்க்கிசைவான கூட்டமும் கூடுகிறது.

2 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

தமிழின் தலையெழுத்தும், தமிழனின் தலையெழுத்தும் மெல்ல மாற்றப்படுகிறது...

Rathnavel said...

அருமை.