5.2.09

பிஹு நடனம்.


மக்கள் கலை சேர்ந்து நிகழ்த்துவதும், சேர்ந்து ரசிப்பதுவதுமாகவே இருக்கிறது. அதுவும் பழங்குடிகளின் மத்தியில் தனி நடனம், தனிப்பாடல் என்பது உலகமெங்கும் இல்லவே இல்லை எனச்சொல்லி விடலாம். பிஹுநடனம் எல்லா பழங்குடிகளின் நடனம் போலக் குழு நடனம். அஸ்ஸாமியப் பழங்குடிகளுக்குச் சொந்தமான இந்த நடனம் அறுவடைக் காலத்துப்படல் அல்லது வசந்த விழாப்பாடல். அந்த மாநில அரசின் சுற்றுலா மற்றும் கலைத்துறையின் பிரதான கலையாகவும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு புல்லாங்குழல் அல்லது சின்ன நாதஸ்வரம் (சத்தக்குழல்), இரண்டு மூன்று முரசுகளோடு அதிர அதிரத்துவங்கும் அந்த ஆட்டத்தில் ஒருவர் பாட அதனோடு புல்லாங்குழல் சேரும். தாளங்கள் வேடிக்கை பார்க்கிற அமைதியில் பெண்கள் அபினயத்தோடு சுற்றிவரும் அந்த நேரம் இதமனதும் நளினமனதுமாகும். பாட்டு நின்றதும் முரசு அதிர பெண்கள் ஆடுவார்கள்.
ஆண் காதல் மிகுதியால் அழைக்கும்போது பெண் எனக்கும் உறவுகள் காவலாக இருக்கிறது என்று கூறுவாள். அவர்கள் கண்ணை மறைக்க நான் காற்றாக மாறுவேன் என்பான். அவள் புல்லாவேன் என்பாள் இவன் பசுவாவேன் என்பாள். உற்றுக்கவனித்தால் குரலில் ஒரு அமானுஷ்ய சோகம் இருப்பதை உணரமுடியும். தமிழகத்தில் இதே போல ஆணும் பெண்ணும் விரட்டவும் ஓடவுமான ஒரு லாவணிப்பாடல் உண்டு ஆலா மரம் உரங்க அடிமரத்தில் நானுறங்க என்று தொடங்கும் அந்தப்பாடல் ஞாபகத்துக்கு வருகிறதா ?.No comments: