மண்ணின் மைந்தர்கள் கோஷத்தோடு முளைத்த பால்தாக்கரேயின் உடனடி எதிரிகளாக அப்போது தமிழர்களும்தொழிற் சங்கங்களும் மலையாய் நின்றார்கள். பால் தாக்கரே மிகப்பெரிய தொழிலதிபர்களின் கூட்டாளியானார். விளைவு இன்று சிவசேனா எனும் சின்ன நாஜிப்படை வேரூன்றிவிட்டது. மும்பையில் பெயருக்குக் கூட இடதுசாரித் தொழிற்சங்கம் இல்லாமல் பொட்டல் காடாக்கிவிட்டது சிவசேனா. தனக்குப்பிடிக்காத எல்லாவற்றையும் கட்சியின் கொள்கையாக்குவது பாசிசம். சில நாட்களுக்கு முன்னால் சிவசேனா குண்டர்கள், வெளி மாநிலத்தவரை விரட்டியடித்த காட்சிகளை செய்தியாக மேய்ந்துகொண்டிருந்தது ஜனநாயக இந்தியா. அதுபோல வட்டள் நாகராஜ் எனும் ரவுடிக்கூட்டம் பெங்களூரிலிருந்து தமிழர்களை விரட்டியடித்தது. அதைத்தொடர்ந்து காவிரிப் பிரச்சினை இன்னும் தீராத பிரச்சினையாகவே இருக்கிறது. கிறித்தவ சிறுபாண்மையினரைத் தாக்குவதில் ஒரிஸ்ஸாவோடு கர்நாடகம் போட்டிபோட்டு கிட்டத்தட்ட எண்பது எளிய உயிர்களை நரபலியிட்டது. தங்களது அகண்ட வெறிக்கனவை நிஜமாக்குவதற்கு அப்பாவிச்சிறுபாண்மை இனத்தை இட்டுக்கட்டி நரகாசுரனாக்குகிறது. அறிவியல் மங்கிக்கிடக்கும் இந்த தேசத்தில் ஒரு பாட்டில் தண்ணீரும், ஒரு லிட்டர் பாலும் ஒரே விலைக்கு விற்கிறது. இந்தச் சமூக கொடூரத்தை எதிர்த்துப் போராட மறந்து இந்திய மக்கள் தங்களின் அண்டை வீட்டு எளியோரை விரட்டியடிக்கத் துடிக்கிறார்கள். கட்டியிருக்கிற கோவணம் காவிக்கோவணமாக இருந்தால் போதுமென்கிற மடமையை மதம் என்று நம்பிக்கிடக்கிறது. இதோ எடியூரப்பா ( வட்டள் நாகராஜின் வாரிசு) வின் ராமராஜ்ஜியம் பெண்களுக்கு காவிப்பர்தாவை மாட்டிவிடுகின்ற அங்கீகரிக்கப்பட்ட தாலிபானாக மாறிக்கொண்டிருக்கிறது. பேருந்துகளில் கூட இரண்டு வெவ்வேறு மதத்தவர்கள் பயணம் செய்யமுடியாத மிருக மனோபாவம் அரசுமுத்திரையோடு அரங்கேறுகிறது. ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவிற்கு நாய்கள் பயணப்பட்டால் நடக்கிற சண்டைக்கும் இதற்கும் எந்த வித்தியசமும் இல்லை. அறிவார்ந்த எல்லோரும், பெருகிவரும் இந்தக் கனிபல் நடைமுறைகளைக் கண்டிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. தவறினால் சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல கடவுச்சீட்டுக்கு மணுச்செய்துவிட்டுக் காத்திருக்க வேண்டிய சூழல் வரலாம். |
8.2.09
சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல கடவுச்சீட்டு கேட்கும் காலம் தூரமில்லை
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எதிரிக்கு இடம் கொடுக்கக் கூடாதென்று துரோகிக்கு துணை போகக் கூடாது.
கயவன் கருணானிதி - துரோகி
வப்பாட்டி ஜெயலலிதா - எதிரி
இதுல சந்துல சிந்து பாடுற சோமாறிகள், கொட்டைதாங்கிகள் தொல்லை வேற
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)
வணக்கம் நண்பரே,
உங்களை எப்படியென்று அழைப்பது?,
அது கிடக்கட்டும்.
வருகைக்கு நன்றி.
ஆனால்...
ஒரு சிறு தவறு.
நீங்கள் வழி தவறி வந்துவிட்டீர்கள்.
நியாயமான கருத்துகள். நாளைய காதலர் தினத்துக்கு இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்க இருக்கின்றனவோ.. பார்ப்போம்..!
Post a Comment