வேட்டைக்கு போவதும் விலங்குகளைக் கொள்வதுமான கற்காலத்தில் பேறுகாலத்துக்கென வீட்டிலிருந்தவள். உணவு சேகரித்தாள். கொல்லப்பட்ட உயிர்களிடம் மன்னிப்புக்கேட்க அதன் குட்டிகளை வளர்த்தாள். குட்டிகளுக்கு உணவுகொடுக்க பயிச்செடிகளை வளர்த்தாள். பயிச்செடிகளிலிருக்கும் தாணியம் உண்பதற்காணதென்பதைக்கண்டு பிடித்தாள். ஆதிபெண் அவளே கண்டுபிடிப்புகளின் தாய். விலங்குகள் கிடைக்காதபோழ்தில் தாணியம் சேகரிக்க பயிர்கள் விளைவித்தாள். அதன் வளர்ச்சிக்குத் தேவையான நீரை கொண்டு வர ஓடை, ஆறுகளின் திசைமாற்றினாள். தாணிய உற்பத்திகான 23 க்கும் மேற்பட்ட கருவிகள் கண்டுபிடித்ததும் அவளே. குகைய வீடாக்கியதும் வீட்டை ஊராக்கியதும் பெண்ணாளே ஆனது. இப்படி எல்லவற்றுக்கும் மூலகர்த்தாவான பெண்ணின் ஆளுமையைக்கீழே தள்ளியது யார் ? எப்போது? எனும் கேள்விகளுக்கு விடையாக நவீன அறிவிலின் தந்தை என அழைக்கப்படும் பேக்கனின் ( 1561-1626) கண்டுபிடிப்புகள் பதிலாக இருந்தது. 1951 ல் பாரிங்க்டனால் மொழிபெயர்க்கப்பட்ட அவரது புத்தகத்துக்கு " காலத்தின் ஆண்மை உதயம் " என்ற பெயரிட்டு மகிழ்ந்தது. தனது ஆணவத்தை நிலை நிறுத்திக்கொண்டது ஆண்கள் சமூகம். காடுகளும் பெண்களும் இணைபிரியாதவர்கள் வனப்பேச்சி, பிருக்ருதி, ரூபேஸ்வரி, பாமனி, வனதேவதை பூமாதா, எல்லாம் காடுகளோடு பெண்ணுக்குள்ள பந்தம் கூறும் ஆதாரப் பெயர்கள். மத்திய இந்தியாவில் உள்ள ஒருவகை மோஹ்வா பூக்கள், உண்பதற்கானது. பச்சையாகவும் வேக வைத்தும் காயவைத்துப் பொடியாக்கியும் சாறு எடுத்தும் என அதற்கு 20 க்கும் மேற்பட்ட பயன்பாடுகளுள்ளது. கர்நாடகப்பழங்குடியினர் 27 வகை இலைத்தாவரங்களை உணவாக உண்கின்றனர். அங்குள்ள 37 வகைத்தாவரங்கள் இருளர் எனும் பழுங்குடியினப் பெயர் கொண்டதகவே இருக்கின்றன. 1799 ல் கிழக்கிந்தியக்கம்பெனிக்கு விற்பதற்குமுன்னதாக இந்தியக்காடுகள் மசுபடாமல் கிடந்தது. தண்டவாளங்களுக் காகவும், கப்பல்களுக்காகவும் பிரிடிஷார் ஒரே வருடத்தில் 10000 தெக்குமரங்களை வீழ்த்தினார்கள். அப்போதுகூட அது பொதுவில்தானிருந்தது அதாவது பழங்குடியினரிடம். 1807 நவம்பர் 10 ஆம் தேதி கேப்டன் வாட்சன் இந்தியாவின் முதல் வன அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் காடுகளின் காவலரான உள்ளூர் மக்கள் விரட்டப்பட்டு, அரசு காடுகளை அழித்தது. காலனி ஆதிக்கம் அறிவியல் தேவை, நாகரீகம் உலகமயம் என இயற்கை நிமிடத்துக்கு நிமிடம் படுகொலை செய்யப்பட்டது. வராலாறு, வனவியல், பெண்கள், பாலின மேலாதிக்கம் தொடங்கி சிப்காட் வனப்பாதுகாப்பு இயக்கம், பசுமை பாதுகாப்பு இயக்கம் எனவும். இமயமலை தொடங்கி கேரளக்காடுகளில் வசிக்கும் மலை மாந்தர்களின் வாழ்க்கையை பறிக்கும் நீர்த்தேக்கத் திட்டங்கள் அதை எதிர்த்த கிளர்ச்சி எனவும். இந்த நூற்றாண்டின் மறுதலிக்க முடியாத பெயர் மேதா பட்கர் என நீள்கிறது ஒரு புத்தகப்புதையல். வந்தனா சிவா எழுதிய " உயிரோடு உலாவ " என்கிற அந்தப்புத்தகம். மனது மயக்கும் இசைபோலவோ, ஒரு கவிதைப்புத்தகம் போலவோ, ஒரு சிறுகதை தொகுப்பைப்போலவோ பாக்கென்று உள்ளிழுத்துக்கொண்டு ஓடுகிற புணைவில்லாத கட்டுரைதான் என்றாலும் கூட அவை எல்லவற்றையும் உற்பத்திசெய்துகொடுக்கிற அடர்ந்த வனமாக இந்தப்புத்தகம் விரிகிறது. சின்ன சின்ன சேதிகளில் வியப்பும், அறியாமையும் வந்து நின்று ஒரு புரிதலுக்கான பாதை காட்டுகிறது. படித்துக்கொண்டிருக்கும்போது இடைமறிக்கும் மனைவியின் மேல் வரும் எரிச்சலுக்கு மாறாக மரியாதை கூடுகிறது. துணி துவைக்கயில், காய்நறுக்கையில் வடியும் வேர்வையில் சிறிது பங்கெடுக்க ஆர்வம் வருகிறது. " உயிரோடு உலாவ " - வந்தனா சிவா.தமிழில் பூவுலகின் நண்பர்கள்.வெளியீடும் அவர்களே. விநியோகம் சவுத் விசன் |
12.7.09
அறிவியலால் இடமிழந்த பெண்ணும், இயற்கையும் - வந்தனா சிவாவின் " உயிரோடு உலாவ "
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
//காலனி ஆதிக்கம் அறிவியல் தேவை, நாகரீகம் உலகமயம் என இயற்கை நிமிடத்துக்கு நிமிடம் படுகொலை செய்யப்பட்டது. //
நல்ல பகிர்வு நண்பரே..
வாழ்த்துகள்
காமராஜ்,
மிகவும் அருமையான பகிர்வு. நீங்கள் சுருக்கமாகத் தந்திருக்கிருக்கிறீர்கள். புத்தகம் முழுவதையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்துகிறது.
பகிர்விற்கு நன்றி.
(பதிவில் நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன. சரி செய்துவிடுங்கள் தோழரே)
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
//அறிவியல் தேவை, நாகரீகம் உலகமயம் என இயற்கை நிமிடத்துக்கு நிமிடம் படுகொலை//
செருப்பிற்கு பதிலாய்
நாகரீகமாக ‘ஷூ’
கொண்டு அடிக்கிறது...
வணக்கம் ஞானசேகரன்
கருத்துக்கு நன்றி.
வாருங்கள் வாசுதேவன்
இரண்டு முறைவாசித்த பின்னும்
இன்னும் புரியாத இடங்கள்
நிறைய்ய இருக்கிறது.
பதிவிட்ட பின்னர் உற்றுக்கவனித்தால்
நிறைய்யவே இருக்கிறது எழுத்துப்பிழை.
அவசர சாப்பாட்டில் சிதறுகிற பருக்கைகள் போல்.
நன்றி வாசுதேவன்.
கதிர் ரொம்ப நன்றி
அறிமுகத்துக்கு நன்றி
வெளீயீட்டார்களின் முழு முகவரி
எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்
வந்தனா சிவாவுக்கு என் வாழ்த்துக்கள்!!
நன்றி ஜோ.
விநியோக உரிமை:
ஓயாசீஸ் புக்ஸ்,
17, கச்சேரி சாலை,
மயிலாப்பூர்,
சென்னை. 14
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி தேவம் மாயம் சார்
அருமையான பதிவு, அருமையான புத்தகம்,
கோடானு கோடி நன்றிகள் நண்பரே, நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு.
குப்பன்_யாஹூ
வாருங்கள், வணக்கம் குப்பன் யாஹூ சார்.
கருத்துக்கு ரொம்ப நன்றி.
இந்த வலப்பக்கத்தில் இனைந்ததற்கு
சந்தோசம் அன்பு தேவன்மாயம்
அரிய தகவல்கள் தாங்கிய அந்த புத்தகத்தை அறிமுகப்படுத்திய தங்களுக்கு என் நன்றிகள். தொடருங்கள்... தொடர்வோம்...
தங்களைப் பற்றி ஆ.ஞானசேகரன் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதனால் தான் தங்கள் வலைப்பக்கம் வரமுடிந்தது. அவருக்கும் எனது நன்றிகள்.
நல்ல புத்தக பரிந்துரை. கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன்.
வாருங்கள் குடந்தை அன்புமணி.
ஞானசேகரனுக்கு நீங்கள் இடும்
பின்னூட்டம் வழியாக உங்கள் வலைப்பக்கத்துக்கு
வந்து போவேன். இனி தவறாமல் வருவேன்.
கருத்துக்கும் நன்றி.
வாருங்கள் கிருஷ்ண பிரபு
வணக்கம். வந்தமைக்கும் கருத்துக்கும்
நன்றி
நான்கு நாட்கள் கணினிப் பக்கம் வரவில்லை
அன்புமணி, இன்ப அதிர்ச்சி. பார்த்துவிட்டு
மீண்டும் வருகிறேன்
Vandana Shiva's work is an exercise in essentialism.It is no onder that you like it as marxists also indulge in essentializing everything.
The record of the erstwhile USSR and Mao's China in environmental issues is well known. They did nothing to prevent pollution or protect the natural resources.
Whom should we blame for that - capitalism, science or socialism.
Post a Comment