17.7.09

கெட்டவார்த்தைகளாலும் இதழ் விரியும் ஃபாண்டசிப்பூக்கள்


விடுமுறைநாட்களை தேடிக்காத்திருக்கும் அவர்களுக்காக ஊரின் பொப்துப்பிரதேசங்கள் பல காத்திருப்பது தெரியுமா?. பொட்டல்கள், குட்டிச்சுவர், ஆலமரம், பிள்ளையார் கோவில் கல்மண்டபம், கண்மாய்த் தண்ணீர் எல்லாமே குழந்தைகள்தங்கள் மேல் புரண்டு விளையாடத் திறந்துகிடக்கும். பொங்கல், பூஜை, கொடை தவிர்த்த நாட்களிலும், நேரங்களிலும்கோவில் பிரகாரங்கள் வெறிச்சோடிக்கிடப்பது இவர்களைத்தேடித்தான்.



மொட்டைப் பொட்டலில் பூவும், பிஞ்சும், காயும் கனியும், விளைந்து கிடப்பது விளையாட்டுக் காலங்களில் மட்டும் தான். நிற்கக்கூட இடமில்லாத சைக்கிள் ரிக்சாவில் குழுமியிருக்கிற அவர்களைப் பார்த்துக் கண்ணீர்வடிக்காத கவிதை இல்லை ஆனால் அந்த நகரும் புதருக்குள் இருந்து கொண்டு குதூகலாமாய் கத்திக்கொண்டு போகிற அவர்களிடம் இந்த தேசத்தின் காயங்களுக்கெல்லாவற்றிற்கும் மருந்திருக்கிறது.



மறைந்த எழுத்தாளர் தணுஷ்கோடி ராமசாமி " கிராமத்து ஏழைச் சிறுவர்களுக்கென்று யாரும் விளையாட்டுப்பொருள் வாங்கித் தருவதில்லை. அதனால் அவர்கள் கண்ணில் காண்கிற எல்லாவற்றையுமே விளையாட்டுப்பொருளாக மாற்றுகிறார்கள்". என்று தனது தோழர் நாவலில் குறிப்பிடுகிறார். இதையே UNICEF நிறுவணமும் தனது ஆய்வில் உறுதிசெய்கிறது. வண்னத்துப் பூச்சியின் இறகை பிய்த்துப் போடாத குழந்தைப்பருவம் இல்லையென்று சமயவேலின் கவிதை சொல்லுகிறது.


சோளத்தட்டையின் நுணியில் மாட்டியிருக்கும்

மயிராலான சுறுக்குக் கயிற்றில்

மட்டிக்கொண்டுசாமியாடக்காத்திருக்கும்

வேலியோரக்கரட்டாண்டி.



இப்படிக் காமராஜும் கூட கவிதை செய்யலாம். விளையாட்டுப் பருவத்தை நினைவில் சுமந்தபடி. ஃபாண்டசிப்பூக்கள் பூக்கிற அனதப் பருவத்திலிருந்து தான் உலகமகா இலக்கியத்துக்கான, விதைகள் துளிர்க்கிறது. மாரிச்செல்வியின் வீட்டுக்கொல்லையில் பல கனவுமரங்கள் கிளைவிட்டுக்கிடக்கும், அதில் பூத்துக்கிடக்கிற பூவில் அதிகமாக விளையாட்டுப் பொருளும் கொஞ்சம் நெல்லுச்சோறும், ரொம்பவே கெட்டவார்த்தைகளும் கிடைக்கும். அவளை நாங்கள் " கேமராக்காரி " என்றுதான் கூப்பிடுவோம். ஆரம்பப்பள்ளியின் பதிவேட்டில் மட்டுமே அவளுக்கு மாரிச்செல்வியெனும் பெயர் இருக்கிறது அடுத்து கல்யாணப்பத்திரிகையில் தான் அவள் திரும்பப்பார்த்தாள். அவளை நாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.

13 comments:

குடந்தை அன்புமணி said...

எழுத்தாளர் தணுஷ்கோடி ராமசாமி அவர்கள் சொல்லியிருப்பது உண்மைதானே. அதிகபட்சம் மரப்பாச்சி பொம்மை தான் இருக்கும். பனநொங்கு மட்டையைக் கொண்டு சக்கரங்கள் செய்து விளையாடுவது, மரக்கிளைகளை ஒடித்து கவ்வைக் கட்டை செய்வது, கிட்டிப்புல்,ஓட்டைச் சில்லை வைத்து தப்பா, ரைட்டா என்று பாண்டி விளையாடுவது என்று இன்னும் என்று நிமிடத்துக்கொரு ஆட்டமாக தொடருமே... ம்... பழைய நினைவுகளை ரொம்பவே கிளறிவிட்டீர்கள்...

கேமராக்காரிக்காக காத்திருக்கிறோம்...

காமராஜ் said...

ரொம்பசந்தோசமாயிருக்கு அன்புமணி
கருத்துக்கு நன்றி

ஈரோடு கதிர் said...

இனிய சிநேககிதமே...

என் அன்பை இதில் பகிர்ந்துள்ளேன்

http://maaruthal.blogspot.com/2009/07/blog-post_20.html

ஏற்றுக்கொள் தோழமையே...

நன்றிகளுடன்
கதிர்

நிகழ்காலத்தில்... said...

அடர்கருப்பு

ஒளியின் அடக்கம் அது

வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

தங்களுக்கு ஒரு விருது... என் கடைக்கு வரவும்...
http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_21.html#links

ஆ.ஞானசேகரன் said...

//கிராமத்து ஏழைச் சிறுவர்களுக்கென்று யாரும் விளையாட்டுப்பொருள் வாங்கித் தருவதில்லை. அதனால் அவர்கள் கண்ணில் காண்கிற எல்லாவற்றையுமே விளையாட்டுப்பொருளாக மாற்றுகிறார்கள்".//

ஆகா உண்மைதான் தோழா...

குடந்தை அன்புமணி said...

தங்களின் சாமக்கோடங்கி இடுகை இவ்வார குங்குமத்தில் வெளிவந்திருக்கிறது தோழரே... வாழ்த்துகள்.

காமராஜ் said...

நன்றி எங்கள் அன்புத்தோழர்
கதிர்

காமராஜ் said...

நன்றி அன்புமணி உங்கள்
வலைக்கு வருகிறேன்

காமராஜ் said...

வாருங்கள் நிகழ் காலத்தில்
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி.

காமராஜ் said...

குங்குமம் இதழுக்கும்
என் மனமார்ந்த நன்றி

காமராஜ் said...

வாருங்கள் அன்பு ஞானசேகரன்
வருகைக்கு நன்றி

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்