9.6.10

மனசின் கடிவாளமற்ற பயணம்.



'ஒங்கப்பன மாதிரியே வளந்துட்டியேடா... அவம்லாடா சினிம நாடகம் கட்சிக் கூட்டம்னு அலைவான்.இந்த மேனா மினுக்கித்தனம் சோறு திங்க உதவாதுடா... எங்கூட கடயில வந்து இரு... ரெண்டே வருஷத்துல ஒன்னய இந்த ஊர்ருக்கே ராசாவாக்கி சிம்மாசனம் போட்டு ஒக்கார வக்கேன்...'என்று இப்போதும் திட்டுவார்.அதுவும் இந்த மழைக்குள் யாரோ சிநேகிதனைப் பார்க்க போனேன் என்று மனம் போன போக்கில் அலைகிறவனை  (மாமா) ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்.

பாவூர்சத்திரத்துக்குப் பக்கத்திலிருந்து கிளம்பி தூத்துக்குடிக்கு மழையோடும் தொட்டுக்கோ துடைச்சிக்கோ என்கிற அளவு காசோடும் போய் நனைந்து அலையும் மனிதனின் கதை.அந்த மழையோடு போய் அவன் சாதிக்க நினைத்தது எது தெரியுமா?. கல்லூரி நண்பன் கதிரேசனைப் பார்த்து நாலுவார்த்தை பேசி விட்டு வர நினைத்த அந்த சாதனைதான் வண்ணநிலவனின் 'மழை' ச்சிறுகதை. ஒரு மழை நாளில் முகம்தெரியாத மனிதர்களிடத்தில் விலாசம் தேடித்தெப்பலாக நனையும் அனுபவம் நம்மைச் சூழ்ந்துகொள்ளுகிற கதை இது.அந்த நேரத்தில் வரிசையாய் ஒவ்வொருத்தராய் வந்துபோகிறார்கள் பால்யத்திலும் பிராயத்திலும் தோளில் கைபோட்டலைந்த நண்பர்கள்.

பாடுசோலியில்லாமல் ஒரு நண்பனைப்பார்க்க மாத்திரம் இப்படி மெனக்கெடுவானா சாமான்ய மனிதன்.மெனெக்கெடுவது கவியுள்ளத்துக்கு மட்டும் சாத்தியம்.அங்கே வரவு செலவு தெரியாது, லாபம் நட்டம் நுழையாது பிரியங்கள் மட்டும் முறுக்கேறிக்கிடக்கும்.எந்த ஒரு துணைக்காரியமும் இல்லாமல் ஒரு நண்பனைப் பார்க்க மட்டுமே விடுப்பெடுத்து அலைந்திருக்கிறோமா என்கிற கேள்வி முள்ளாய்க் குத்துகிறது. அப்போதெல்லாம் அந்த மனுஷன் 'கோணங்கியை' நினைத்து நினைத்துப் பொறாமையாய் இருக்கும்.


கடல்புறத்தில் படித்து முடித்துவிட்டு.அந்த உப்புக்காத்தில், அலை இரைச்சலில்,கடலோர குடிசைக்குள் பவுலுப்பாட்டாவோடு தூங்க வைத்த வலுவான எழுத்து வண்ணநிலவனுடையது.அதை நானும் மாதுவும் கிறங்கிக் கிறங்கிப்பேசிக்கிடந்திருக்கிறோம் 42பி எல் எஃப் தெருவில்.ரஞ்சி,சாமிதாஸ்,பிலோமியின் பிரியங்களையும் கனவையும் அது கிடைக்காமல் போனபின் நிகழ்வை ஏற்றுக்கொண்டு பிரியம் மாறாமல் தொடரும் வாழ்க்கையையும் சிகரத்தில் ஏற்றிவைப்பார் வண்ணநிலவன். எண்பதுகளில் படித்த அந்த புதினத்தின் வாசனையை மணப்பாடு கடல்கிராமத்து மணலில் கால்வைக்கும் போது நீண்டமூச்சால் ள்ளிழுத்துக் கொண்டேன். அதன் பெருமைக்களைச் சொன்னபோது கூடவந்த வாண்டுகள் 'இங்க என்ன சினிமா எடுத்தாங்கப்பா ?' என்று கேட்டார்கள்.சினிமாவை விடவும் உன்னதமான இலக்கியம் இந்த மணல்துகள்களுக்குள் ஒட்டிக்கிடக்கிறது அது 'கடல்புரத்தில்' படித்தால் மட்டுமே உடனடியாக வெளிக்கிளம்பும் என்று சொன்னேன்.

இப்படித்தான் என் நணபர் நடராஜனோடு சுற்றுலாப்போகும் போது தஞ்சைப்பெரிய கோயிலில் வைத்து, இந்த ஏரியாவில் எனக்கொரு சொந்தக்காரர் இருக்கிறார் என்று சொன்னேன். அவரும் சீரியஸ்ஸாக யாரெனக்கேட்டார். எங்க ஒர்க் பன்றார் வீடெங்கெ இருக்கு என்றெல்லால் தொண தொணக்க ஆரம்பித்து விட்டார்.திஜா என்கிற தி.ஜானகிராமன் எழுத்தாளர் இப்போ இல்லை என்று சொன்னதும் அடிக்க வந்துவிட்டார்.

1987 ல் வெளிவந்த 'கதை அரங்கம்' மணிக்கதைகள் தொகுப்பை இன்று அதிகாலையில், மீளவாசிக்கத் தேரம் கிடைத்தது. அப்போது அலையலையாய் பழைய்ய நாட்கள் இடறியது.அந்த தொகுப்பிலேதான் சு.சமுத்திரம்,நாஞ்சில்நாடன்,பிரபஞ்சன்,பாலகுமாரன் கதைகளோடு  கிராவின் கதையும் பூமணியின் கதையும் இருக்கிறது.பாண்டிச்சேரியிலிருந்து இடைசெவலுக்கு வந்த பெரியவர் கிரா சாத்தூரில் மெனக்கெட்டு இறங்கி நாங்கள் தங்கியிருந்த 42 பி எல் எஃப் தெருவுக்கு வந்து பேசிக்கொண்டிருந்த நாள் பளிச்சென வந்துபோனது.'ஒருநாளாவது மெனக்கெட்டு நண்பன் தேடிப்போகவேண்டும்னே' இப்படிச்சொன்ன  தம்பி கார்த்தி  நீண்ட இடைவேளைக்கப்புறம் நேற்றிரவு என்னைத் தேடிவந்தது  நெருடுகிறது.பலநாட்கள் சங்கத்துக்காகவும்,கட்சிக்காகவும் விடுப்பெடுத்து அலைந்தேன் என்கிற சப்பைக்கட்டு ஒரு புறமிருந்தாலும் நணபர்களுக்காக மெனெக்கெடும் வேட்கை கனன்று கொண்டேஇருக்கிறது.

22 comments:

செ.சரவணக்குமார் said...

அன்பு காமு அண்ணா..

இந்தக் காலையை ப்ரியத்துக்குரிய வண்ணநிலவனின் மழையில் நனையவைத்தும், நண்பனைத் தேடிச் செல்லும் உள்ளூர கனன்று கொண்டிருக்கும் வேட்கையைச் சொல்லியும்...

அற்புதமாகத் தொடங்கிவைத்திருக்கிறீர்கள்.

ஒரு காலை நேரத்தை வண்ணதாசன், வண்ணநிலவன், கி.ரா, தி.ஜா என்று எழுத்தாளுமைகளின் நினைவுகளோடு தொடங்குவது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது.

vasu balaji said...

புழுங்கிக் கிடந்த நேற்றைய பொழுதை வீசித்துறத்திய காற்றும், நீர் தெளித்து குளிர்வித்த மழையும், தொலைத்த தூக்கத்தின் எச்சமும், துரத்தும் வேலையின் மிச்சங்களும், ஓய்வு தேடும் மனமும், உழைப்பை வேண்டும் கணங்களும் அலைக்கழித்த ஒரு காலைப் பொழுதின் ப்ரியமான அழைப்பா? புத்தகங்களை மட்டுமே நட்பாய்க் கொண்டு வளர்ந்த மனம் நாடுகிறது. ஆம்! விடுப்பெடுத்தாவது எங்களில் ஒருவனைத் தேடி வாயேன் என்கிறார்கள் சாண்டில்யனும், திஜாவும்,தேவனும் இன்ன பிறரும். ஏக்கத்துடன் தொடங்குகிறது இன்றைய பொழுது. சுகமாய், சுமையாய்..உபயம் காமராஜ்

vasu balaji said...

எட்டு நொடி இடைவெளி சரவணா. எனக்கும் உனக்கும் இடையில்தான் எத்தனை தூரம்? உன்னையும் என்னையும் எண்ணத்தால் இணைத்த இந்த மனுஷனை என்ன செய்ய:)

அழகிய நாட்கள் said...

தோழர் காம்ஸ்,
நண்பர்களுக்காக அலைந்த நாட்கள் என்று ஒன்று இருந்தது இருபது வருடங்களுக்கு முன்பாக.. வாழ்வியல் நிகழ்வுகளான கல்யாணத்திற்கு, கருமாதிக்கு, எழவுக்கு, சடங்குக்கு,காதுகுத்துக்கு, கிடா வெட்டுக்கு, அந்த கறிச் சாப்பாட்டுக்கு என்று அலைந்து திரிந்திருக்கிறேன். இலக்கிய ரீதியிலான பயணம் நேர்ந்ததில்லை. உங்களது இந்தப்பதிவு மிகவும் நேர்த்தியானது.

vijayan said...

பெங்களுருக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார் என்று கேள்விப்பட்டு 20km தூரத்திலிருக்கும் ராமமூர்த்தி நகர் சென்று விட்டல் ராயரையும் அவரது திருமதியையும் சந்தித்து நல்வரவு சொல்லிவந்தேன்.

Unknown said...

நெகிழ்ச்சியான பதிவு. நன்றி.

நேசமித்ரன் said...
This comment has been removed by the author.
நேசமித்ரன் said...

காமு சார்

வாய்க்கப் பெற்றவர்களாக இருப்பதும் கொடுப்பினை

எழுத்தில் காணும் மனிதர்களை ,களத்தை தேடுவதும் எழுதியவனைத்தேடுவதிலும் ஒரு ருசி இருக்கத்தான் செய்கிறது

பொன்னியின் செல்வனின் ஆரண்யக்காட்டுக்குள் மான்கள் தொடர்ந்திருக்கிறேன்

வண்ணதாசன் சந்தித்ததும் கைகளை மட்டும் பற்றிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்றது அப்படியான நினைவுகள்

கிளர்த்திப் பார்ப்பதில் பா.ரா,சரவணா, காமு...

off the record ;)

வில்லங்கோஷ்டிய சேர்ந்தவிங்கய்யா

காமராஜ் said...

மனசுக்குப்பிடித்த எழுத்தோடும் எழுத்தாளனின் வர்ணனைதோய்ந்த வாழ்விடங்களோடும் பயணம் ஆவது தான் அச்சு ஊடகத்தின் மிகப்பெரும் கொடுப்பினை.மோகமுள் பாபுவுக்கும் யமுனாவுக்கும் நாம் வரைந்து வைத்த சித்திரத்தை யாரும் மீட்டுக் கொடுக்கமுடியாது.யமுனாவீட்டுக்கூடத்தில் கிடந்தாடும் ஊஞ்சல், மாமா போடுகிற வெத்திலைச்செல்லமெல்லாம் மனதின் immortal ஓவியமாக மினுங்கும் சரவணன்.

நன்று.

காமராஜ் said...

//ஆம்! விடுப்பெடுத்தாவது எங்களில் ஒருவனைத் தேடி வாயேன் என்கிறார்கள் சாண்டில்யனும், திஜாவும்,தேவனும் இன்ன பிறரும். ஏக்கத்துடன் தொடங்குகிறது இன்றைய பொழுது. சுகமாய், //

bala anna.

சீமான்கனி said...

நிஜம்தாண்ணே...நானும் ஒருகாலம் மதுரைக்கும் சென்னைக்கும் அலைந்ததுண்டு...ஆனால் அந்த காலம் அதை மட்டுமே விரும்பியது...ஏனோ தெரிய வில்லை நிறைய முறை முள்ளாய் குத்தியும்..இன்னும் எனக்கு அதை விட்டு விலக மணம் வரவில்லை...
நல்ல பகிர்வு அண்ணே...வாழ்த்துகள்...

காமராஜ் said...

நன்றி சரவணன்
நன்றி பாலாண்ணா

காமராஜ் said...

ஆமாம் நாராயணன். நட்புக்காக அலைந்த நாட்கள் இன்னும் தித்திப்பாய் இனிக்கிறது.

காமராஜ் said...

ரொம்ப அருமை. பூரிப்பாக இருக்கிறது விஜயன்.காரியார்த்தமான உறவும் பயணமும் நெஞ்சில் நிற்பதில்லை.

காமராஜ் said...

நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.

காமராஜ் said...

//பொன்னியின் செல்வனின் ஆரண்யக்காட்டுக்குள் மான்கள் தொடர்ந்திருக்கிறேன்

வண்ணதாசன் சந்தித்ததும் கைகளை மட்டும் பற்றிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்றது அப்படியான நினைவுகள்//

நேசன்....
எனக்கும் அப்படியொரு வாய்ப்புக்கிடைத்தது.சமீபத்தில் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அப்பாவோட நாவல் வெளியீட்டு விழாவில் சக எழுத்தாளர்களையும் முன்னத்தி ஏர்களையும் ஒரு சேரப்பார்த்த அனுபவம். முதன்முதலாய் சமயவேலை அப்போதுதான் பார்த்தேன். தூரத்திலிருந்து .

காமராஜ் said...

நன்றி கனி.

தாராபுரத்தான் said...

வாய்விட்டு படித்துப் பாருங்க..தமிழின் சுவை தெரியும்.

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான பகிர்வு காமு.

// வானம்பாடிகள் said...
எட்டு நொடி இடைவெளி சரவணா. எனக்கும் உனக்கும் இடையில்தான் எத்தனை தூரம்? உன்னையும் என்னையும் எண்ணத்தால் இணைத்த இந்த மனுஷனை என்ன செய்ய:)//

இப்படியெல்லாம் நெகிழ்த்திப் பார்க்க ஒரு இடம், ஒரு மனசு, ஒரு தருணம் வேணும்தான்...

இல்லையா காமு?

மழை பொழிகிற நேரம் மட்டும் புளியம் பூ வாசனையை எது கொண்டு சேர்க்கிறது?

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்.

வண்ணநிலவன், வண்ணதாசன், கலாப்ரியா, கோணங்கி, எஸ் ராமக்ரிஷ்ணன், காமராஜ், மாதவராஜ், லேகா, அய்யனார், காலங்களில் நாம் வாழ்கிறோம் என்பதே மிகப் பெரிய பெருமை.

I cant read your blog in office (cant control the tears in my eyes),

க.பாலாசி said...

நான் இப்பதான் மோகமுள்ள வாசிக்கவே ஆரம்பிச்சிருக்கேன். அப்டின்னா பார்த்துக்கோங்க.. இன்னும் வளராத இந்த குழந்தையை...

நட்பூ... என்பதுதான் நட்புக்கான பொருளாக இருக்கும்...

Jegan said...

Nice picture, believe it is manapadu, in tuticorin dist