3.6.10

அதிகாலையிலே ஆரம்பிக்கிறது

சாமக்குருவி கூவியது
அப்புறம் முழித்துக்கொண்ட
ஒற்றைச் சேவலும் கூவியது
சரி இனி விடிந்துவிடும் எனச்
சமாதானத்தோடு தூங்கப்போயின.
சூரியன் சிரித்துக்கொண்டது.

பாக்கெட் பாலை நீரூற்றி
பசும்பாலாக்கினான்
வித்தை தெரிந்த சமத்தன்
பசுமாடு சிரித்துக்கொண்டது.

6 comments:

கமலேஷ் said...

ம்,,ஒரு அதிகாலை கவிதை...ரொம்ப நல்லா இருக்குங்க...

ராம்ஜி_யாஹூ said...

nice poem, thanks for sharing

Uma said...

ரொம்பப் பொருத்தம்.

அன்புடன் அருணா said...

/இனி விடிந்துவிடும் /
விடியுமா???

Riyas said...

நல்லாயிருக்கு...

seemangani said...

எல்லோரும் சிரிக்க ஏமாற்ற்ற விடியல் நமக்குதானா???!!காலைக் கவிதை கவனம்!!! சொல்லிதருது நல்லா இருக்கு அண்ணே...