4.7.10

காட்சிப்பிழை

அவர் எங்கள் சங்கத்துக்கு ஜென்ம வைரி. எங்கள் சங்கமும் அவருக்கு நம்பியார். தெருவில் எதிரெதிர் பார்த்துக்கொண்டாலும் முகமன் சொல்லாத ஒரு உர்ர் மனதுக்குள் உருமும் வழக்கம் பல வருடங்கள் நீடித்திருந்தது.
ஆடுகளத்தில் பாடுபொருள் மாறிக்கொண்டே வந்தது.சின்னவயது விளையாட்டைப் போல  பம்பரம், கோலி, கிட்டிப்புல், சாமியாடி, கள்ளம் போலீஸ்,சினிமா எனப் பருவங்களின் மாற்றத்தில் ஒன்றையொன்று மறக்கச்செய்தது. பிரச்சினைக்கான காரணங்கள் பழசாய்ப் போனது. அதுபோலத்தான் அவரும் நானும் ஒரு வார காலம் ஒரே கிளையில் பணிபுரியும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.மூன்றாம் நாள் எனக்காக பேருந்தில் இடம் போட்டுக்காத்திருந்தார்.  அன்றே  மதியம் சாப்பிடும் போது அவர் கொண்டு வந்த புளிக்காய்ச்சலையும்,அவியலையும் ஊட்டிவிடாத  குறையாக தட்டில் வைத்து நெகிழவைத்தார்.

நிகழ் அரசியல்,சினிமா,விலைவாசி,பணிச்சுமை கூடுதல் குறித்து போகும்போதும் வரும்போதும் பேசிக்கொண்டே
நெருங்கிப்போனோம்.ஆறாம் நாள் 'சில பழய்ய நினைவுகள் தித்திக்கிறது சில கசக்கிறது இல்லையா தம்பி என்று சொல்லி என் கண்ணுக்குள் பார்த்தார்.அன்று மாலை நானும் அவரும் மட்டும் தனித்திருந்தோம்.வழக்கமாக வரவேண்டிய பேருந்து பழுதானதால் ஒரு மணிநேரம் அலுவலகத்திலேயே காத்திருக்க நேந்தது.எதிர்த்தகடையில் ரெண்டு காபி கொண்டுவரச் சொல்லிவிட்டு வந்தார்.அந்த நேரம் தனித்திருந்த நான் சுவர்ணலதா பாடிய 'மாலையில் யாரோ மனதோடு பேச' என்கிற பாடலைப் பாடிக்கொண்டிருந்தேன் வந்தவர் அரவமில்லாமல் வாசலிலேயே காத்திருந்து கேட்டுவிட்டு முடிந்ததும் ஓடிவந்து கையப்பிடித்துக் கொண்டார்

'இவ்ளோ அழகாப்படுவியா தம்பி அதும் இந்தப்பாட்டு எனக்கும் அப்பிடிப்பிடிக்கும்'

என்று சொல்லிவிட்டு.பிடித்த பாடல் வரிகள் பிடித்த பாடகர்கள்,பிடித்த இசை அமைப்பாளர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார். நானும் சுமாராகப்பாடுவேன் எனச்சொல்லிவிட்டு அதேபாட்டை மனதொன்றிப்பாடினார்.என் எதிரிக்கும் ரசனையிருக்கும் என்கிற புரிதல் வர முப்பதாண்டுகள் கடந்துபோயிருந்தது.

நானாகவே வரைந்திருந்த அவரின் கரடுமுரடான ஜென்ம வைரியின் சித்திரம் மறைந்து போய் மிகமெல்லிய தென்றலாக நெருங்கிவந்தார்.எனக்கு பிடிக்காமல் இருந்த காபியின் மணம் இப்போது ஈர்க்கிற மணமும் கூடுதல் சுவையும் தந்தது.

20 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமை.

ஒருவருக்கு ஒருவர் பேசினால், விட்டு கொடுத்தால் எதனை அமைதி மகிழ்ச்சி கிடைக்கிறது. அழகாகப் பதிந்து உள்ளீர்கள்.

அம்பிகா said...

\\.என் எதிரிக்கும் ரசனையிருக்கும் என்கிற புரிதல் வர முப்பதாண்டுகள் கடந்துபோயிருந்தது.

நானாகவே வரைந்திருந்த அவரின் கரடுமுரடான ஜென்ம வைரியின் சித்திரம் மறைந்து போய் மிகமெல்லிய தென்றலாக நெருங்கிவந்தார்.\\
அருமை.
ஒரு அழகான கவிதை படித்த உணர்வு அண்ணா.

மாதவராஜ் said...

சில தருணங்கள் போதும், பெரும் காலத்தை அளந்து பார்க்க!

சில ரசனைகள் போதும், பெரும் வெறுப்புகளை தூக்கியெறிய.

வாய்க்க வேண்டும், அவ்வளவுதான்.

அற்புதமான சித்திரம், என் தோழனே!

பத்மா said...

open mind open mind என்று எப்போதும் சொல்லிகொள்வேன் ...சில வேற்றுமை காணும் போது.. நாம் ஒன்றும் முற்றும் துறந்தவர்கள் இல்லையே காமராஜ் சார்? கோபம், வெறுப்பு, பிடிக்காமல் இருத்தல் போன்ற உணர்வுகள் மனதில் தோன்றுதல் தவிர்க்க முடியாமல் போகலாம் ..அதையும் மீறி நீங்கள் மனதை கண்டு கொண்டீர்களே அது அழகிய கணம்..
ரொம்ப சந்தோஷமா இருக்கு படிக்க .
அது போகட்டும் உங்கள் குரலை கேட்க ஆவலாய் உள்ளோம் .ஒரு பாடலை பதிவு செய்யுங்களேன் ப்ளீஸ்

vasu balaji said...

படிப்பதே பெரும் சுகமாப்போச்சு. சின்னச் சின்னதாய் மனதில் தோன்றிய மாற்றங்கள் எவ்வளவு சுகமான அனுபவம்.ம்ம்.

கண்ணகி said...

பல சமயங்களில் நாம் முன்முடிவுகளின்படிதான் நடக்கிறோம். ஒருவரைப்பிடிக்காதபோது அவர் எது செய்தாலும் பிடிப்பதில்லை..அப்படித்தான் இதுவும்...அழ்கான் வெளிப்படுத்தல்..

பா.ராஜாராம் said...

ஆஹா! சொல்லவே இல்ல..

கச்சேரிக்கு மாடியில் கூடும்போது உம்ம கச்சேரிதான், ஊறுகா :-)

பத்மாவும் ரொம்ப நல்லா பாடுவாங்க. கேட்டுருக்கீங்களா? இல்லைன்னா.. கேட்டுப் பாருங்களேன் காமு.

லிங்க்: http://engalblog.blogspot.com/2010/05/blog-post_12.html

க ரா said...

அருமை காமு சார். நம்மளோட ரசனைகள் மத்தவங்களோட ஒத்துபோக ஆரம்பிக்கறப்போ மனசு நட்பு பாரட்ட ஆரம்பிச்சுரும். அழகாக சொல்லிருக்கீங்க காமு சார்.

Unknown said...

எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு கேரக்டர்கள் இப்படி வந்து கொண்டே இருக்கிறார்கள்..

அன்புடன் அருணா said...

பொதுவா ஆரம்பிக்கும் நட்புகளை விட இப்படி எதிரிகளுடன் ஆரம்பிக்கும் நடபு கொஞ்சம் அல்ல நிறைய மகிழ்ச்சியைக் கொடுக்கும்.உணர்ந்திருக்கிறேன்!

Unknown said...

கடினமான கற்பனை சுலபமாக விலகிவிட்டது. உங்கள் எழுத்து ஒரு சிற்பமே!

VijayaRaj J.P said...

வெறுப்புடன் வாழ்வதை விட
விருப்புடன் வாழ்வது
சுகம்தானே,காமராஜ்.

அருமையான பதிவு.

ஈரோடு கதிர் said...

காட்சிப் பிழைகள் கலைந்து போகும் நேரம் சுகமானது, உங்கள் எழுத்து போலவே

நேசமித்ரன் said...

இப்படித்தான் வாழ்வில் புரிதலின் பிறழ்வால் திரிந்து போன நிமிடங்களை மீட்டெடுக்க வாய்க்கிறது தாமதமாகவேனும்

லெமூரியன்... said...

அருமையான ஒரு நிகழ்வு...!
ரசிச்சு படிச்சேன்....! :-)
சில நேரம் மாற்று கருத்தோடு உள்ளவங்க கூட நம்மோட ரொம்ப நெருக்கமாயிடுவாங்க...!

சீமான்கனி said...

சுவையான நிகழ்வு ரசனையான பகிர்வு வாழ்த்துகள் அண்ணே...

க.பாலாசி said...

எவ்வளவு பெரிய அனுபவம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. ஒரு படிப்பினையும்கூட. பலகாலங்கள் வைரியாக இருப்பவர்கள் பழக நேரிடின் இதுபோல அனைத்தும் மறைந்து புதிதாய் மலரும் நட்பு.

Mahi_Granny said...

தங்களின் பதிவுகளை எல்லாம் படித்துவிட்டு இதற்கு எல்லாம் பின்னூட்டம் இட நமக்குத் தெரியாது (என் தமிழ் அப்படி) என போய் விடுவேன் பிரமிப்பில் . இன்று தங்கள் நண்பர் பா. ரா. தந்த உற்சாகம் தைரியத்தைக் கொடுக்கிறது. தங்களின் எழுத்து நிறையவே பிடிக்கும் .

Mahi_Granny said...

வயது கூட கூட மனம் ஒரு நல்ல பக்குவத்திற்கு வந்து விடுகிறது.

Karthick Chidambaram said...

நல்ல பதிவு
//என் எதிரிக்கும் ரசனையிருக்கும்// - சரியான வார்த்தைகள்.