28.7.10

நா.வே.அருள், கவிதைகள்.

ஒரு, இருபதாண்டுகளுக்குமேல் கவிதைப்பரப்பில் புளங்கிவரும் ஒரு
கவிஞர். சில கவிதைத்தொகுப்புகளை மெளிதான குரலில் ஆனால் தீர்க்கமாக பதிந்து வைத்தவர்.ரொம்ப எளிமையன வார்த்தைகளில் நமக்கு சுட்டிக்காட்டிய வாழ்வின் அடிக்கோடிட்ட    கணங்கள்.சென்னைப்பெருநகரிலிருந்து சொன்ன கவிதைகள் இவை.
எங்கள் அன்புத்தோழன் நா.வே.அருள்.அவரின் ஆயுதம் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள்.

ஊசி வாங்கலையோ... ஊசி...
--------------------------------------
ஒரு வேட்டுச்சத்ததில்
பறவைகளின் அலறல்களால்
பயம் சிதறிக்கிடக்கும் தோப்புகள் எங்கும்..

குழந்தைகளை
மார்பில் ஏணைகட்டித் தூக்கிவரும்
இடையறாத இவர்களின் பயணம்
எப்போது முடிவுறும் ?

கயிறுகட்டித்தொங்கும் டப்பாவில்
காய்ந்து கிடக்கும்
உணவுப்பருக்கைகள்

பூனையை வேட்டையடிப்
புசித்து விடுகிறார்கள்
தானியக்கிடங்குகளிலோ
பெருச்சாளிகள்கடவுளின் ரத்தம்
------------------------

பயம் கவ்விய நானும்
பத்துவயது மகனும்
பூங்கா இருட்டுக்குள்
புகுந்து ஓடினோம்

மகனே
இரவுக்குள் பிடிபடலாம்
இன்றிரவு நாம்
பதுங்கும்
காட்டுப்புல்தான் கடவுள்

நிலவொளியில்
புல்நுனியில்
மின்னிய பனித்துளிகள் பார்த்த
மகன் கேட்டான்
"இது கடவுளின் ரத்தமோ"

சுற்றுலா
------------

அவன்காலில் இவன் கைகள்
இவன் கையில் அவன் கழுத்து
அவன் வாயில் இவன் மூக்கு
இவன் மூக்கில் அவன் விரல்கள்

வேறொன்றுமில்லை
இவர்கள் நகரப்பேருந்தில்
பயணம் செய்கிறார்கள்.0

21 comments:

செல்வராஜ் ஜெகதீசன் said...

Good poems.
Thanks for Sharing.

வானம்பாடிகள் said...

மூன்றும் அருமை. சுற்றுலா:)). பகிர்வுக்கு நன்றி

Karthick Chidambaram said...

Good thoughts and poetic.

Thanks for sharing.

VELU.G said...

நல்ல கவிதைகள்

மிகவும் ரசித்தேன்

நன்றி சார்

க.பாலாசி said...

//பூனையை வேட்டையடிப்
புசித்து விடுகிறார்கள்
தானியக்கிடங்குகளிலோ
பெருச்சாளிகள்//

கடைசியொன்றும் இதுவும் மனதில் நிலைத்துவிட்டது... நல்ல கவிதைப் பகிர்வு ரசித்தேன்...

charliecharlie2007 said...

அருளிடம் எனக்குப் பிடித்த விசயமே ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியும் எளிமையும்தான். ஆனால் அவர் ஆழமானவர், மிக ஆழமானவர், அவர் கவிதையைப் போலவே...
இக்பால்

நேசமித்ரன் said...

நல்ல கவிதைகள்

பகிர்வுக்கு நன்றி காமு சார்

பா.ராஜாராம் said...

அருமையான கவிதைகள். பகிர்விற்கு நன்றி காமு!

காமராஜ் said...

வாங்க செலவராஜ் ஜெகதீசன்.
உங்களின் தொடர்ந்த வருகைக்கும்,
ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

காமராஜ் said...

பாலாண்ணா..நலமா.?

காமராஜ் said...

கார்த்திக் சிதம்பரம் வணக்கம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

நன்றி வேலு சார்.

நன்றி பாலாஜி,

வாங்க தோழர் இக்பால் நன்றி.

காமராஜ் said...

நேசனுக்கும் நேசமுள்ள பாராவுக்கும்
நன்றி.வெள்ளிக்கிழமை விசேஷமா அங்கே?

அன்புடன் அருணா said...

பகிர்வுக்கு நன்றி காமராஜ்!

ஆறுமுகம் முருகேசன் said...

நல்ல கவிதைகள்.. பகிர்வுக்கு நன்றி..

இராமசாமி கண்ணண் said...

நல்ல கவிதைகள்.. பகிர்வுக்கு நன்றி சார் :)

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா

அனைத்தும் அருமை
நல்ல பகிர்வு மிக்க நன்றிங்க

சீமான்கனி said...

நகரப்பேருந்து "நச்" பகிர்வுக்கு நன்றி அண்ணே...

மதுரை சரவணன் said...

அருமை. நகரபேருந்து..நரக உந்து. வாழ்த்துக்கள்

யாநிலாவின் தந்தை said...

பகிர்ந்தமைக்கு நன்றி தோழா..
எளிமையான மனிதரின் அருமையான கவிதை வரிகள்..
அவரையும் இணையத்திற்கு அழைத்து வாருங்கள்....

vasan said...

'அருள்' வ‌ந்த‌ ஆளுக்கிட்ட‌
"ஆயுத‌ம்" கிடைச்சா?
விலாசித் த‌ள்ளிட்டாருள்ள‌!
மூன்று க‌விதையும் மூன்று புள்ளிக‌ள்
ஃ ஆயுத‌ எழுத்தா? எழுத்து, ஆயுத‌மா?