27.8.10

சகஜ மீட்பர்கள்

அந்தப் பகல்நேரச்சென்னைத் தொடர் வண்டியில் இடம் பிடித்துக் கொள்ள சிரமமில்லாமல் இருந்தது தம்பி அருணும்,முதலாளி செல்வாவும் நெல்லையிலிருந்தே வந்ததால் இது சாத்தியாகியது. முதலாளி செல்வா முதலாளி யில்லை. நம்ம ஒரு போதும் முதலாளியாகப் போவதில்லை நாமெல்லாம் ஆயுட்காலக் கடனாளிகள்,அதானாலயாக்கும் ஒருத்தருக்கொருத்தர் முதலாளின்னு சொல்லிக்கலாம் என்கிற அவரின் definition எனக்குப்பிடித்திருந்தது.பிறகென்ன ஒரு இருபது வருட காலமாக அவருக்கு நான் முதலாளி,எனக்கு அவர் முதலாளி.அவரைப்பற்றியதான ஒரு பெரும் பதிவுக்கு வாத்தைகளும்,விஷயங்களும் குவிந்துகிடக்கிறது அதைப் பின்னாட்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

வண்டி நகர்ந்த பின் டீ விர்கிறவர்கள்,வெள்ளரிக்காய் விற்கிறவர்கள் கடந்துபோய்க் கொண்டிருந்தார்கள்.மாதுவும் அருணும் இன்னொரு பெட்டிக்கு இடம் தேடிப் போய்விட்டார்கள். ஜூனியர் விகடனில் திருப்பூர் எம் எல் ஏ பழைய்ய தோழர் கோவிந்தசாமியின் பேட்டியைப் படிக்கச் சொல்லிக்கொடுத்தார்.படித்துப்பார்த்தேன் ஆளும் கட்சியின் ரகரகமான ஆட்டைகளில் அது ஒரு டைப்பாக இருந்தது.பெரும்பாலும் இதுமாதிரியான பொறணிப்பத்திரிகைகளை ஊர்மடத்து ஆண் பொறணி,ஓடைகுப்போகிற பெண்கள் பொறணியாகவே பார்க்கத்தோன்றும்.சில நேரம் அவசியமான செய்திகளும்கூட வரலாம்.

குழந்தைகள் பாட்டி இருக்கைக்கும்,தாயின் இருக்கைக்குமான இடைவெளிகளை ஆடுகளமாக்கிக் கொண்டு
அங்குமிங்கும் ஓடினார்கள்.துலுக்கபட்டி நிலையம் நெருங்கும்போது முதலாம் திருநங்கை வந்தார்.எல்லோரையும் தொட்டு சங்கோஜப் படவைத்து காசு வசூலித்தார்.அவரைப்பார்க்க உள்ளூர் நங்கைபோலத்தெரிந்தது எனது இருக்கைக்கு வந்ததும் ஒதுங்கிப்போய்விட்டார்.சற்றுநேரத்திற்கெல்லாம் இரண்டாவது நபரும் வந்தார்.தோள்பட்டையை உலுக்கி துட்டுக்கேட்டார்.இல்லையென எனச்சொன்னதற்கு

"நாங்கெல்லாம் பாவப்பட்ட பிறவிகள்,எங்களுக்கு காசுகொடுத்தா ஒங்களுக்கு புண்ணிய'மென்று சொன்னார்.

மனிதகளில் என்ன பவம் புண்ணியம் ஒங்கள நீங்களே ஏன் தாழ்த்திக்றீங்க

இருக்றதத்தான சொல்லமிடியும் இந்தப்பொழப்ப பாத்திகளா

நீங்களும் ஒழைக்கலாம்

'ஆமா ஆபீஸர் உத்தியோகமா காத்துக்கிட்டுருக்கு,அங்க பாருங்க ஒலகமே எங்கள ஒரு மாதிரியாப்பாக்கு ஒருத்தர் ரெண்டுபேரு யோக்கியமா இருந்தா ஒண்ணும் பண்ணமுடியாது,வந்துட்டாங்க'

படபடவென்று பேசியபடி அடுத்த இருக்கைக்குப்போய் கைதட்டிக்கொண்டு நின்றார்.ரயிலின் இரைச்சல்,பயணிகளின் பேச்சுச்சத்தம்,டீ விற்கிறவர்களின் பெருங்குரல் எல்லாம் ஒலியிழந்து மௌனத்துக்கு திர்ரும்பிக் கொண்டிருந்தது. ஒரு நிமிட நேர இறுக்கத்தை உடைத்துக்கொண்டு குழந்தைகள் ரயிலுக்குள் ரயில் ஓட்டிகொண்டிருந்தார்கள்.

10 comments:

ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing, nice

வானம்பாடிகள் said...

பயண சுவாரசியம்:)

அம்பிகா said...

சுவராஸ்யமான பயணம், பகிர்வு.

Mahi_Granny said...

பார்க்கிற விசயமெல்லாம் பகிர்வாகிறது உங்களைப் போன்றவர்களுக்கு . நல்லாயிருக்கு.

முனியாண்டி said...

நன்றி காமராஜ் சார். அடிக்கடி இந்த பக்கம் வாங்க. உங்கள் சகஜ மீட்பர்கள் என்னையும் உங்களுடன் பயனப்பட வைத்துவிட்டது நன்றி.

க.பாலாசி said...

இரயில் பயணங்கள்ல முக்கியமா நான் கவனிக்கறது இந்த திருநங்கைகளைதான். தாங்கள் சொன்னது எனக்கும் சொல்லத்தோன்றும், ஏதோவொரு குற்றவுணர்வும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்கிறது.

ஈரோடு கதிர் said...

||ரயிலுக்குள் ரயில்||

அடடா, மனது என்னமாய் இன்னொரு உலகத்துக்குள் போய்வருகிறது

சீமான்கனி said...

பயணம் ஒவ்வொன்றும் பாடம்....நன்றி அண்ணே...

kashyapan said...

மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழித்தடத்தில் முன்பெல்லாம் இப்படி ஒரு அனுபவம் வாய்த்ததில்லை.ஜூலைமாதம் நான்பயணம் செய்தபோது விருதுனகரில் ஒரு பெண் ஏறினார்.காவலர் ஒருவர் அந்தப்பெண்ணின் கன்னத்தில் அறைந்து வெளியெற்றினார். அதிர்ந்துவிட்டேன். அவரிடம் என் அதிருப்தியைக் கூறியபோது பெட்டியில் களவாண வருகிறார்கள் என்றார். அதே பெண் சாத்தூரில் எங்கள் பெட்டிக்கு வந்தார்.அவரிடம் பெச்சுக் கொடுத்தேன்.தொழர் பிரியா,மற்றும் ரோஸ் பற்றியும் குறிப்பிட்டேன்.மத்திய பிரதேசத்தில் திருநங்கை ஒருவர் நகர் மன்ற தலைவராக பணியாற்றுவது பற்றி கூறினேன்.ஆர்வத்தோடு கெட்டவர் நான் என்ன செய்ய? என்று விரக்தியில் பேசினார்.ஜனநாயக மாதர் சங்கத்தை தொடர்பு கொள்ளும்படி அவரிடம் கேட்டுக் கோண்டேன்.....இந்தக் கிழவனால் வெறு என்ன செய்யமுடியும்?...காஸ்யபன்.

காமராஜ் said...

hats off comrade kashyapan.