3.4.11

நகைச்சுவை நடிகர் வடிவேலு சாத்தூருக்கு வந்தார்.


சுருளிராஜனுக்குப் பிறகு எல்லோர் மனதிலும் பசை போட்டு ஒட்டிக்கொண்ட நகைச்சுவைக் கலைஞன் வடிவேலு. தனது நகைச்சுவையில் சமூகத்தின் அடித்தள மக்களின் குமுறல்களை பகடியாக்கும் கருத்தை அடிநாதமாக வைத்துக்கொண்டவர்.அறிவார்ந்த நகைச்சுவையாக தெரிவு செய்து தன்னை ஒரு மேல் மட்டத்தவனாக காட்டிக்கொள்ளாத வெள்ளந்தி நடிகன் வடிவேலு. பாரவண்டியின் மேக்காலாக அழுத்துகிற புறச்சூழலைக் கடத்திவிட ஒரு பத்து நிமிடம் வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்தால் மனசு இதமாகும். சிலபொழுதுகளில் கண்ணில் நீர்கோர்க்கிற வரை சிரிக்கமுடிகிற அவரது நகைச்சுவையை ரசிக்காத மனிதர்களே இருக்க முடியாது.

அவர் நேற்று சாத்தூருக்கு வந்தார்.ஒரு கட்சியின் பிரச்சார பீரங்கியாக இல்லாமல் ஒரு சிரிப்பு பீரங்கியாக அவரைப்பார்க்க அலைபாய்ந்தது. மேலே ஒட்டிக்கொண்டிருந்த இலக்கியம்,அரசியல்,வங்கி ஊழியன் என்கிற பகட்டுக்களை உதறிவிட்டு எம் சகோதர சகொதரிகளோடு கூட்டத்துக்குள் கறைந்துபோக சித்தமாயிருந்தேன். ஆண்களை விடப் பெண்கள் கூட்டம் அதிகாமக இருந்தது. ஆறு மணிக்கு வருவார் என்ற வாக்குறுதி ஏழறை வரை நீட்டித்தது. சாத்தூர் எட்வர்டு மேநிலைப்பள்ளிக்கு எதிரில் உள்ள கைவண்டி தள்ளுவண்டி வியாபரிகள் அவர்கள் எந்தக்கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பூரித்துப் போயிருப்பார்கள். ஒரு அறை மணிநேரத்தில் இருநூறு சம்சா வை விற்றுத்தீர்த்த தள்ளுவண்டிக்காரரின் அருகில்தான் நானும் நண்பர் கணேசனும் நின்றிருந்தோம்.

தேதிமுக பிரமுகர் ஒருவர் கூடுகிற கூட்டத்தைப் பார்த்துக் கடுப்பாகி ”எலெக்சன் கமிஷன் காரன் என்ன..........றானா ” என்று கெட்ட வார்த்தையில் வசைபாடிக் கொண்டிருந்து விட்டு எத்தல் ஹார்வி ரோட்டிலிருக்கும் டாஸ்மாக்குக்குள் நுழைந்துவிட்டார். அந்தக் கூட்டத்திலிருந்த  எளந்தாரிகள் பத்துப்பேர் கிரிக்கெட் ஸ்கோரையும் ஓடிப்போய் பார்த்துக்கொண்டு அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமாக இருந்தார்கள்.நேரம் நெருங்க நெருங்க தெற்கே இருந்து வருகிற ஓவ்வொரு வாகன வெளிச் சத்துக்கும் கூட்டம் ஆரவாரம் செய்தது. ஏழுமணிக்கெல்லாம் ஆண்கள் பகுதியில் கூட்டம் அதிகரித்தது. எல் ஐ சி மேலாளர்,சத்யா ஓட்டல் சிப்பந்தி, நாலைந்து பஞ்சாயத்து தலைவர்கள்,ஐஓபி சிப்பந்திகள் எனத் தெரிந்த முகங்களாக நெருங்கி வந்தார்கள். அவரவர்க்கு ஒரு கட்சி பிடிப்பு இருந்தாலும் அவரது நகைச்சுவைக்காக வந்தோம் என்றார்கள்.

சத்தூரையே தூக்குகிற ஆரவாரத்தோடு வடிவேலுவின் வாகனம் வந்தது. பாதுகாப்புக்காக பிடித்திருந்த கயிற்றை கீழே போடும்  படிக்கேட்டுக் கொண்டார் தாய்மார்களை எதிரே வர அழைத்தார். அவன் இவன் நாயே பேயே என்றெல்லாம் யாரையும் திட்டவில்லை அவரது வழக்கமான மொழியிலேயே ரெண்டு நிமிடம் பேசிவிட்டு அங்கிருந்து கடந்துபோனார். அதனாலேயே யாருக்கும் ஓட்டுப்போடப் போவதில்லை என்கிற தன் மன உறுதியை தளரவிட்டுவிடாமல்,” வாடி இன்னும் இருபது க்றோஸ் அடைச்சாத்தான் நாளைக்கு காக்கிலோ கோழி எடுக்க முடியும்” என்று சொல்லிவிட்டு தீப்பெட்டியாபீசுக்குள் போன  அம்மாவின்  கையைப் பிடித்துக்கொண்டு போன பத்துவயதுச் சிறுமியிடம் இருந்த சந்தோசம் போலக்கூட்டம் கறைந்து போனது.

அந்த ஆராவாரமும்,கைதட்டலும்,விசிலும் வெறும் உணர்ச்சிகள் மட்டு மில்லை ஒரு கட்சிக்கானதாகவும் தோணவில்லை. எல்லோருக்குள்ளும் யாரையோ ஒரு ஆளைத் தேடுகிற ஆர்வம் மறைந்து கிடக்கிறது. தங்களின் சோகங்களைக் கடத்திவிடுகிற ஒரு தோளைத்தேடியபடியே காத்திருக்கிறது பாமரக்கூட்டம். அவர்கள் தேடுகிற சாயலில் ஆள் கிடைக்கிற வரை கூடிக்கூடி கலைந்து போய்க்கொண்டே இருப்பார்கள். கிடைக்காமலா போகும் ?

24 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

nice post.,

காவேரிகணேஷ் said...

காமராஜ்,பதிவு அழகாய் உள்ளது, வார்த்தைகள் நாசூக்காய், தைத்தது போல் உள்ளது அவலங்களை.
நீங்கள் சாத்தூரா?
வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது.

blogpaandi said...

சிறந்த பதிவு.

காமராஜ் said...

நன்றி கருண்.அன்புக்கு நன்றி.

காமராஜ் said...

நன்றி காவேரி கணேஷ்.

காமராஜ் said...

இங்கே கே கே எஸ் எஸ் ஆர் ஆர் தான் அடிக்கடி ஜெயிப்பார்.பட்டி தொட்டி முழுக்க அவர் அறிமுகமானவர். இந்த மாவட்டம் முழுவதும் வெற்றி வாய்ப்பு வரவேண்டும் என்பதற்காக அவர் அருப்புக்கோட்டைக்கு மாறிக்கொண்டார்.அதிமுக வேட்பாளர் வெளியூர்.வாய்ப்பு திமுகவுக்குத்தான்.

காமராஜ் said...

நன்றி blogpaandi

ராம்ஜி_யாஹூ said...

மிக அருமையாக வர்ணித்து எழுதி உள்ளீர்கள்.
இதே போன்றே பழைய தேர்தல்களில் டி ராஜேந்தர், பாக்யராஜ், வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு கூட்டம் கூடியது நாம் அறிந்ததே

ராம்ஜி_யாஹூ said...

கடவுள் காக்க, வடிவேலுவின் நையாண்டியில் இருந்து வைகோ தப்பித்தார்

செ.சரவணக்குமார் said...

அருமை காமு அண்ணா. பதிவின் இறுதிப் பாராவின் ஒவ்வொரு வார்த்தையும் கச்சிதமாக நம் மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கிறது.

ஜோதிஜி said...

மிக மிக அற்புதமான சொல்லாடல்.

அடித்தட்டு மக்களின் எதார்த்தம் இப்படித்தான் என்பதை உணர வைத்த எழுத்துக்கள்.

kashyapan said...

அவர்கள் தேடுகிற சாயலில் ஆள் கிடைக்கும் வரை கூடிக்கூடி கலைந்து கொண்டே இருப்பார்கள்.கிடைக்காமலா பொகும்! Fine shot indeed!---காஸ்யபன்

வானம்பாடிகள் said...

இது இது!!. மாஸ் மெண்ட்டாலிட்டி இதுதான். ஏதோ ஒரு காரணத்துக்காக கூடுற கூட்டத்தை ஆதரவு என்றும் எதிர்ப்பு என்றும் காரணியாக்கினால் ஏமாற்றமே மிஞ்சும். அருமை காமராஜ்.

vasan said...

மக்க‌ள் காம‌ராஜ், ஜீவா போன்ற‌ த‌ன்ன‌ல‌மற்ற‌ த‌ல‌வ‌ர்களையெல்லாம், தோற்க‌டித்த‌ பாவ‌ம் தான் இப்ப‌டிப்ப‌ட்ட ம‌க்க‌ளை அர‌சியலுக்கு கொண்டுவந்திருக்கிற‌து. மேடை பேச்சிலேயே, மய‌க்கி, ஏமாற்றி ஆட்சிக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ளின் இன்றைய‌ நிலை. காமெடி வ‌டிவேலு ஸ்டார் பேச்சாள‌ராம்!! கொடுமைய‌ட‌ சாமி.

அன்புடன் அருணா said...

/அவர்கள் தேடுகிற சாயலில் ஆள் கிடைக்கிற வரை கூடிக்கூடி கலைந்து போய்க்கொண்டே இருப்பார்கள். கிடைக்காமலா போகும் ?/
கிடைத்து விடுமா என்ன??

Jayadev Das said...

இவரு விஜயகாந்தை குடிகாரன் என்ற கருத்தை எல்லா இடத்திலும் பதிவு செய்கிறார், ஆனால் சாராயத்தை தடை செய்யாத, சாராய வருமானத்தையே நம்பி ஆட்சி நடத்தும் கட்சிக்கு பிரச்சாரம் செய்கிறார். நல்ல தமாஷ். ஒன்னுமில்ல, கருணாநிதி ஆட்சியால் காலா காலத்துக்கும் அனுபவிக்கப்போகும் கொடுமைகளுக்கெல்லாம் அருமருந்து இவரோட காமடியாகத்தான் இருக்கப் போகிறது, இவரோட படத்து வன்தட்டுகளையும் எல்லோருக்கும் இலவசமா கொடுத்துவிட்டு, உங்களோட கொள்ளையை தொடருங்கள் தி.மு.க வினரே!! இன்று 1.76 லட்சம் கோடி, இன்னும் எத்தனை லட்சம் கோடிகள் காத்திருக்கின்றனவோ நீங்கள் கொள்ளையடிப்பதற்கு!!

Jayadev Das said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

ஹரிஹரன் said...

வடிவேலுவை களத்தில் இறக்கியதன் மூலம் விலைவாசிஉயர்வு,ஊழல் போன்றவற்றை திசைதிருப்பி தனிமனித விமர்சனத்தில் திமுக இறங்கியிருக்கிறது.

பா.ராஜாராம் said...

இது புதுசா இருக்கு காமு. சமீபமா வடிவேல் குறித்தான வேறு வேறு வாசிப்பனுபவமாக இருந்தது. இது ஆறுதல் அளிக்கிறது.

எப்படி பார்க்கத் தொடங்கினோமோ, அப்படியே எப்பவும் பார்க்கத்தான் ஆசையாக இருக்கிறது. இல்லையா?

ஓலை said...

Arumaiyaana alasal nanbare!

B.MURUGAN said...

தேர்தலில்,திமுக வெற்றிப்பெற்றால் வடிவேலு வடிவேலு வாகயிருப்பார்,அப்படியில்லாமல்ப்போனால்; நிஜ வாழ்கையிலும் கைப்பிளை,வீரப்பாகு,நாய்சேகர் போல ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.23னாம் புலிகேசியின் கதி மே13 னாம்தேதிக்குப்பிறகு தெரியும்

Jayadev Das said...

இன்னும் நீங்க அப்பாவியாவே இருக்கீங்களே. ஒரே நிமிஷத்துல அம்மா தாயே பரமேஸ்வரி என்று சொல்லிக்கிட்டு போய் காலில் விழ கைப்புள்ள க்கு எவ்வளவு நேரம் பிடிக்கும், அல்லது உன் பக்தியை மெச்சினேன், பக்தா உன்னை மன்னிதருளுகிறேன் என்று சொல்ல காளிமுத்துவை தனது சபா நாயகராக்கிய அம்மாவுக்கு எவ்வளவு நேரமாகிவிடும்? எந்த மரத்தில் பழங்கள் இருக்கோ அங்கே பறவைகள் தஞ்சமடையும், சீசன் முடிஞ்சா எடத்தை காலி பண்ணிக் கொண்டு அடுத்த மரத்துக்குக்க் போய்க் கொண்டே இருக்கும். திரைத் துறையில் இருப்பவர்களும் அப்படித்தான். ஆளுங் கட்சிக்கு ஒத்து ஊதிக் கொண்டேதான் இருப்பார்கள், ஆட்சி மாறிவிட்டால் அந்த கட்சிக்கு மாறிவிடுவார்கள். இது அம்மாவுக்கும் தெரியும், மஞ்சள் துண்டுக்கும் தெரியும், வடிவேலு மற்றும் சினிமாக்காரங்க எல்லோருக்கும் தெரியும். தெரியாத அப்பாவி நீங்களும் நானும்தான்!!

பத்மா said...

அழகா எழுதிருக்கீங்க பதிவு ...மெதுவா படிக்கறதுக்கு சாரி

இரசிகை said...

ippothaan vaasiththen.

sirantha pathivu. azhakaana yezhuthaalukai.

ippo kooda vadiveluvai thiraikalil kaanamal thedum manam kondavarkal athikam.athil naanum oruththi.

veetil oru kadinamaana soozhnilai nilavum pothu kooda,thambi avaroda yethavathu oru punchai solli,nimishaththil maathiduvaan.

vaazhthukal.