5.4.11

சமூகச் சீர்கேடுகளைக் கிண்டல் செய்யும் தேர்தல் பகடிகள்


ஈரானில் 2009 ஜூன் 12 ல் நடந்த தேர்தலில் அதிபரின் சார்பில் போடியிட்ட மஹ்மூத் அஹ்மதியினைக்கிண்டல் செய்த தேர்தல் பகடிகள் இவை.நமது
நாட்டில் நடக்கிற நடப்புகளோடு ஒப்பிட்டால். அவர்களின்  பிரச்சினை யெல்லாம்  ஜூஜுபி.

1) அம்மா வீட்டுக்குப்போயிருந்த மனைவி கணவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

” அன்பே தக்காளி மட்டும் வாங்குங்கள் அவசரப்பட்டு உருளைக் கிழங்குகளை வாங்கிவிடவேண்டாம்,தேர்தல் நெருங்குகிறதல்லவா நமது வீட்டுக்கு அதிகப்படியான உருளைக்கிழங்குகள் வரும்”.

 =காதலோடு மனைவி.

தேர்தல் நேரத்தில் அகமதிநெஜானி இலவச உருளைக்கிழங்குகள் வழங்குவதாக  வந்த செய்தியை கிண்டல் பண்ணி வந்த பகடி.

0

2) ஏன் முசாவியைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு அவரது ஆதரவாளர்கள் அடித்த பிட் நோட்டீஸ்.

  அவர் வயோதிகர்,அதனால் நீண்ட நாட்கள் அவரது கொடுங்கோலாட்சியைப்பொறுத்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தமில்லை

  அவரது மனைவி ஒரு படித்தவர்,அவர் ஒரு பேராசிரியை,ஆதலால் வேலை      நேரத்தில் அவரைத்தொந்தரவு செய்யமாட்டார்

  அவர் ஒரு போதும் அவரது உறவினர்களுக்கு அரசாங்க உத்தியோகத்துக்கு சிபாரிசு செய்யமாட்டார்

0

வலையில் சுட்ட அயல் தேர்தல் பகடிகள் மண்ணின் மணத்துக்கு மாற்றபொபட்டிருக்கிறது.

3) இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந் தார்கள். முதலாமவர் கீழே பார்த்துக்கொண்டே சொன்னார் " பாருங்க நான் ஆயிரம் ரூபாயைக் கீழே போட்டேனென்றால் பத்து வாக்காளர்கள் சந்தோஷப் படுவார்கள்"  என்றார்

இரண்டாமவர் சொன்னார்  ""நான் ஐயாயிரம் ரூபாயைக்கீழே போட்டேனென்றால் பத்துப்பேர் சந்தோஷப் படுவார்கள்" என்றான்.

இதைக்கேட்டுக்கொண்டிருந்த பைலட் பவ்யமாகக்கேட்டார்  " ஒட்டுமொத்த தமிழ்நாடே சந்தோசப்பட நான் ஒன்று சொல்லட்டுமா"

" சொல்லு சொல்லு"  என்றார்கள்

”ஒங்க ரெண்டுபேரையும் தூக்கிக்கீழே போட்டால் போதும் ” என்றார்.

0

4) தேர்தல் பிரச்சாரத்துக்கு போய்விட்டு நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்த வேட்பாளர் இருட்டில் ஒரே கூட்டமாக இருப்பதைப் பார்த்து வண்டியைத் திருப்பி அங்கே போகச் சொன்னாராம். போனப்பின்தான் தெரிந்தது அது பேய்களின்மாநாடு என்று. வந்தது வந்தாச்சு ஓட்டுக் கேட்டு விட்டுப் போவோம் என்று முடிவானது. லைட்டப்போட்டு மைக்கைப்பிடித்தார் வேட்பாளர்.

6 comments:

அன்புடன் அருணா said...

/”ஒங்க ரெண்டுபேரையும் தூக்கிக்கீழே போட்டால் போதும் /
அதைச் செய்யுங்க முதல்லே!!!

கே.ஆர்.பி.செந்தில் said...

சிரிச்சு மாளல..

வானம்பாடிகள் said...

கடைசிது நடக்குமா. அப்படி நடந்தாலும் யாராவது 4 பஞ்சத்துக்கு ஆண்டிங்க தலைல உழுந்து இதுங்க பொழச்சிக்கும்.:))

ஓலை said...

அட்டகாசம். அருமை.

காமராஜ் said...

எல்லோருக்கும் வணக்கம்.
என்னை அதிகம்,சிரிக்கவைத்த அந்த ஜோக்கை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை.தெம்புமில்லை.

சுந்தர்ஜி said...

/”ஒங்க ரெண்டுபேரையும் தூக்கிக்கீழே போட்டால் போதும் /
அதைச் செய்யுங்க முதல்லே//

நன்றி அருணா.

மன்னியுங்கள் காமராஜ். பளு அதிகம். அதிகம் படிக்கமுடியவில்லை.