19.6.11

சுருங்கும் உலகம்


வீட்டில் நாலுபேர்
வீதியில் இருபது வீடுகள்
பகுதியெங்கும் மனிதர்கள்
ஆங்காங்கே இரும்புக்கோபுரம்
எல்லோர் கையிலும் அலைபேசி
எப்போதும் பேசிக்கொண்டே
இருக்கிறது உலகம்.
தொலைதூரக் குரல்களில்
பொங்கிப் பிராவகம் எடுக்கிறது
அன்பும் சிரிப்பும்
சவுதியில் அடிக்கும் வெயிலின்
தகிப்பை உடனுக்குடன் தெரிய முடியும்
சென்னையில் பெய்யும் மழையின்
சத்தத்தை அப்படியே கேட்கமுடியும்
ஆனாலும்
இந்த இரண்டு வருடத்தில்
எதிர்வீட்டுக்காரரிடம்
பேசமுடிந்த வார்த்தைகள்
இரண்டே இரண்டு
கல்யாணம் வச்சிருக்கேன்

சந்தோசம் ’

அவசியம் வரணும்

சரி’

5 comments:

A.R.ராஜகோபாலன் said...

ஆஹா
அமர்க்களமான
கவிதை
தூரத்தில் இருப்பவர்களை
துரிதத்தில்
புரியும் நாம்
அருகே
அமர்பவரின்
அருமை
அறியாதிருக்கிறோம்

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
நிஜம் இது தான்.
வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

உண்மைதான் தோழர்.
எதிரில் தென்பட்டால் இன்னொரு வார்த்தையும் இருக்கிறது:
'எப்படியிருக்கீங்க?'

க.பாலாசி said...

நிதர்சன உண்மை...

எதிர் வீட்டுக்காரர பார்த்தா, வண்டியிலப்போறப்ப விநாயகருக்கு வைக்கிற சல்யூட் மாதிரி ஒண்ணு.. சோலி முடிஞ்சது...

அருமை...

சுந்தரா said...

இன்றைய நிலைமையை நிதர்சனமாய்ச் சொல்கிறது கவிதை.