27.2.12

காவல்கோட்டத்தை காவல் காக்கும் ஜெயமோகன் - இடதுஎழுத்துக்கெதிரான சூழ்ச்சி.காவல் கோட்டம் மிகச்சிறந்த நாவலா,இல்லை ஆதிக்க ஜாதிகளுக்காதரவான மிகச்சிறந்தபரப்புரையா என்பது குறித்து விவாதிக்கு முன்னாடி விமர்சனங் களின் விமர்சனங்களை கூர்மையாக அனுகவேண்டியிருக்கிறது. தமிழகத்தில் பார்ப்பணர்களும், முதலியார்களும், வெள்ளாளர்களும் ஜாதிகுறித்து வைத்திருந்த மேட்டிமையைக் காட்டிலும் இடைப்பட்ட சாதிகள் கொண்டிருக் கும் துவேஷமும்  மிகப் பிரபலமானது. அது இன்றுவரை தொடரும் அவலம். தீராத வன்கொடுமைகளைத் தடுக்கவழியில்லாமல் அலைகிறது தேசம். அப்படியிருக்க  இரண்டு ஜாதிகள் குறித்த பெருமிதங் களை ஒரு வரலாறாக முன்வைக்கிற இந்த நாவலில் இருக்கிற இடதுசாரிக் கருத்துக்களுக்கு எதிரான  விஷயங் களை அம்பலப்படுத்துகிறார் தோழர் மாதவராஜ்.

முதலில் இந்த விமர்சனத்தை அமைப்புக்கு எதிரானதாக கற்பித்துக்கொண்டு கிளம்பிய விவாதங்கள்  மேம்போக் கானவை. பின்னர் அதற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு கிளம்பும் குரல்கள் மிகுந்த உள்நோக்கமுடையவை. இந்துத் துவா மீது மோகமும் இடதுசரிகள் மீது தீராத காழ்ப்புணர்ச்சியும் கொண் டிருக்கிற ஜெயமோகன் இந்த நாவலை ஆதரித்தும் மாதவராஜை எதிர்த்தும் குமுதம் பத்திரிகையில் எழுதியிருப்பது மிகப்பெரும் வேதனை கலந்த சூழ்ச்சி யாகும். அந்த வாதங்களின் கூடுதல்  கொச்சைத் தனங்களாக எழுத்தாளர்  ஜெய காந்தனையும்,  எழுத்தாளர் மேலாண்மைப் பொன்னுச்சமியையும்  சுட்டிக் காட்டுவது இந்த எழுத்துலகம் கூர்ந்து  கவனிக்க  வேண்டிய விமர் சனம். யாரையும் விருப்பு வெறுப்பின்றி  விமர்சனத்துக் குள்ளாக்கும் தோழர் என்பது  மாதவ ராஜைப் பற்றி அறிந்த அத்தணை தோழர்களும்  அறிவார்கள். சு.வெங்கடேசன் உட்பட.

அமைப்பை எந்த தனி நபருக்காகவும் விட்டுக்கொடுக்காத நெறியுடையவரும் அவர். இதை தோழர்  உரா. வரதராஜன் மரணம் குறித்த பதிவிலும், அதற் கெதிராக வந்த விமர்சனங்களிலும் சமீபத்தில் தோழர் கோணங்கி குறித்த பதிவிலும் காணலாம்.அமைப்பு ரீதியாக மேலாண்மை பொன்னுச்சாமியைக் கொண்டாடுகிற மாதவராஜ் படைப்பு ரீதியாக அவரை அதிகமாக விமர்சித் திருப்பதை தமுஎச வட்டத்தில் அணைவரும் அறிவார்கள். தோழர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கும் கூட இது நன்றாகத் தெரியும்.தன்னை ஒரு போதும் எழுத்தாளர்  ஜெயகாந் தனின் மருமகன் என்று அறிமுகப்படுத்தாதவர் என்பதை மிகநெருக்கமாக அவரை அறிந்த எல்லோரும் அறிவார்கள். எண்பது களிலே எழுதத் தொடங்கிய அவர் தொண்ணூறுகளில் தான் எழுத்தாளர் ஜெய காந்தனின் மருமகனானார். அப்படியிருக்க எழுத்தாளர் ஜெயகாந்தனையும் தோழர் மேலாண்மையையும் இந்த விவாதங்களில் உள்ளிழுப்பது சூழ்ச்சி நிறைந்த செயல்.

இவ்வளவு காலமாக இடதுசாரிகளால் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிற சாகித்ய அகாடமி விருதுகள் தோழர் மேலாண்மைக்கும், காவல் கோட்டத் துக்கும் கொடுக்கப் பட்டதால் புனிதமானதாக மாறிவிட்டதாக மயக்கம் கொள் ளக்கூடாது என்கிற தொனி இருந்தது. தகுதிக்குறியோர் பட்டியலில் இந்த எழுத்துலகம் மதிக்கிற உன்னத எழுத்தாளர்கள் விடுபட்டதையும் அவர் தனது முதல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஒரு  இயக்கவாதியாக  மட்டு மிருந்து அந்த குறிப்பை அணுகினால் எரிச்சல் வரலாம், வரும். நேர்மையான முறை யில் அணுகினால் அது அலாதியாகத்தெரியும். பெத்தானியாபுரம் முருகா னந்தம் என்கிற நபரின் கேள்விகளாக முன்வைக்கப்பட்ட வரலாற்று ரீதி யான,மற்றும் சமூக ரீதியான கேள்விகளை அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது.அதே கேள்விகளின் நீட்சிதான் மாதவராஜ் எழுதிய காவல் கோட்டம் விருதுகள் விழாக்கள் என்கிற மிகப்பெரிய விமர்சனம்.

இந்த விமர்சனத்துக்கு அமைப்பு ரீதியான கோபங்கள் வெளியேறும் என்பவை அறிந்த ஒன்று ஆனால்  அமைப் புக்கு எதிரான நபர்களிடமிருந்து எதிர்ப்பு வரு வது குதர்க்கமான ஒன்று. இருபத்தைந்து வருடங்கள்  முதலமைச்சராக இருந்த தோழர் ஜோதிபாசுவுக்கும் நேற்று கட்சியில் உறுப்பினரான ஒருவருக் கும் சமதையான அந்தஸ்து வழங்கும்  அமைப்புகள் இடதுசாரி அமைப்புகள். அப்படிப்பட்ட அமைப்பில் இருக்கிற  சட்டமன்ற வேட்பாளராக அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவர் வாளும் மலர்க் கிரீடமும் வாங்கிப் பெருமிதப்பட்டுக் கொள்வதை எந்த ஒரு இடதுசாரியும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அப்படி ஏற்றுக் கொள்ளாத ஆயிரக்கணக்கான  உண்மைத் தோழர்களின் பிரதிநிதித் துவக் குரலாக வந்ததுதான் இந்த நேர்மையான விமர்சனம்.

என்னைத்தவிர இங்கு எவன் எழ்துவதும் எழுத்தல்ல என்கிற கர்வத்தில் இருப்பவரும்,அதனால் தினம் வண்டி வண்டியாய் அம்பாரமாக இந்துத்வாக் குப்பைகளை  அள்ளிப் போடுபவரும், அந்தக் குப்பைகளின்மேல்  உட்கார்ந் திருகிறவருமான  ஜெயமோகன் இங்கு வந்து சாட்சி சொல்லவும்,நீதி சொல்லவும் இடதுசாரி அமைப்புகள் ஒன்றும் இளைத்தவை அல்ல. அதிகார மையங்களைச் சொரிந்து விடவும்,ஆதிக்க சாதிகளைப் பெருமிதப்படுத் துவதுமான அவர் போன்றவர்களின் எழுத்தை தோலுரிக்கிற பணி தான் இடதுசாரிகளின் முதற்பணி.  அப்படி யிருக்க அவர் வலிய வந்து  வெங்கடேசன் நனைகிறதாக ஒப்பாரி வைப்பது  ஆட்சேபகர மானது. தனது திண்ணை எழுத்துக்களிலும்,தனது கவிதை முன்னுரையிலும் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் காரர்  ஜெமோ என்று  ஆரம்பிக்கிற சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக  ஜெயமோகன் களத்தில் குதிப்பதும் அதை தோழர்கள் மௌனமாக ஏற்றுக் கொள்வதும் கவலை அளிப்பதான ஒன்று.

நாவலின்மீது ஜெமோ ஆதவரவாகவோ எதிராகவோ கருத்துச்சொல்லுவதை புரிந்துகொள்ளலாம்.மாதவராஜின் கேள்விகளுக்கு ஜெமோ பதில் சொல்லுவதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. மாதவராஜை நோக்கி ஆரம்பக் கட்ட வாசகராக இருக்கிறார் என்கிற எள்ளலை முன்வைக்கிற ஜெயமோகனுக்கு மிகுந்த  பெருமிதத் தோடு நாங்கள் சொல்லிக்கொள்ள ஒன்றிருக்கிறது. இந்துத்துவ,முதலாலித்துவ,ஜாதித்துவ பெருமைகளைத்  தூக்கிப் பிடிக்கும் நீங்கள் முதுநிலை வாசகராக இருக்கும் பட்சத்தில் நாங்கள் அதற்கு எதிரான எந்த இடத்திலும் இருப்போம். அது பற்றி எங்களுக்கு எள்ளளவும் வருத்தம் இல்லை. ஆனால் நாங்கள்  பாதிக்கப் பட்ட மக்கள் பக்கம் இருக்கிறோம். அவர்கள் அறிகிற பாஷைய எழுதுகிறோம் என்கிற பெருமிதம் எங்களுக்கு இருக்கிறது. அது தவிர்த்த எந்த அதிகார மையத்தின் சான்றிதழும் எங்களுக்கு அநாவசியமானது.

6 comments:

Rathnavel Natarajan said...

முதலில் இந்த விமர்சனத்தை அமைப்புக்கு எதிரானதாக கற்பித்துக்கொண்டு கிளம்பிய விவாதங்கள் மேம்போக் கானவை. பின்னர் அதற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு கிளம்பும் குரல்கள் மிகுந்த உள்நோக்கமுடையவை

அருமையான பதிவு. நன்றி.

ஹரிஹரன் said...

காவல்கோட்டம் பற்றி விறுப்பு வெறுப்பில்லாமல் விமர்சனம் செய்துள்ளார் மாதவராஜ். எழுதியவர் தமுஎசவின் செயலாளர் என்பதற்காக அவர் எழுத்துக்களை புகழவில்லை, அதுபோல் தனிநபர் விமர்சனம் செய்யவில்லை.

வாள், கிரீடம் போன்றவற்றை பெருமையுடன் ஏற்றுக்கொள்வது ஒரு இடதுசாரி எழுத்தாள்ருக்கு பெருமையல்ல்.

ஜெயமோகனின் ‘பல்லக்கு’ ஒன்று போதும், எதற்காக அவர் ஏங்குகிறார்.

விமலன் said...

வணக்கம் தோழர்,இன்னும் நிறைய தூரம் பயணிக்கவேண்டியதிருக்கிறது என்றே நினைக்கிறேன்.
எழுத்தை விமர்சிப்பதை தனிநபருக்கு எதிரான விமர்சனமாகவும்,
அவர் சார்ந்திருக்கிற அமைப்புக்கு எதிரான விமர்சனமாகவும்,
தனி நபருக்கு எதிரான விமர்சனத்தை அவருடைய எழுத்துக்கு எதிரான விமர்சனமாகவும் எடுத்துக்கொள்கிற உயர்நவிர்ச்சி ம்னோபான்மை இங்கு வந்துவிட்டதாகவே படுகிறது.அது சரி சகலமும் கலந்த சமூகத்தில்தானே நாமும் இருக்கிறோம்/நன்றி வணக்கம்.வாழ்க இலக்கிய உலகம்/

விமலன் said...

வணக்கம் தோழர்,இன்னும் நிறைய தூரம் பயணிக்கவேண்டியதிருக்கிறது என்றே நினைக்கிறேன்.
எழுத்தை விமர்சிப்பதை தனிநபருக்கு எதிரான விமர்சனமாகவும்,
அவர் சார்ந்திருக்கிற அமைப்புக்கு எதிரான விமர்சனமாகவும்,
தனி நபருக்கு எதிரான விமர்சனத்தை அவருடைய எழுத்துக்கு எதிரான விமர்சனமாகவும் எடுத்துக்கொள்கிற உயர்நவிர்ச்சி ம்னோபான்மை இங்கு வந்துவிட்டதாகவே படுகிறது.அது சரி சகலமும் கலந்த சமூகத்தில்தானே நாமும் இருக்கிறோம்/நன்றி வணக்கம்.வாழ்க இலக்கிய உலகம்/

நிலாமகள் said...

எந்த அதிகார மையத்தின் சான்றிதழும் எங்களுக்கு அநாவசியமானது//

சுள்ளாப்பான‌தொரு வீச்சு!

Tamil Ayyanar said...

பெத்தாணீயாபுரம் முருகானந்தம், மாதவராஜ், காமராஜ் என்று சிலர் இல்லை என்றால் இந்த இயக்கங்களின் மந்தை மனோபாவத்தை யாரும் விமர்சிக்காமல் இதனையே நடைமுறையாக ஏற்று வாழ பழகியிருப்பார்கள் போலும்.

நம்பிக்கையளித்த மூவருக்கு செவ்வணக்கங்கள்