28.2.12

எப்போதேனும் நினைத்து வருந்தியிருக்கிறீர்களா ?( ஷாஜஹான் கவிதைகள் )

மிகச் சிறந்த கவிஞன்,மிகச்சிறந்த கதைசொல்லி,நெஞ்சுருக்கும் பேச்சாளன் நிஜமான பொதுவுடமைக்காரன்,ஆகச்சிறந்த ஹாஸ்யக்காரன். எல்லா வற்றையும் உள்ளடக்கிய சக மனிதன். தோழர் ஷாஜகானின் கவிதை இது.


எப்போதேனும் நினைத்து வருந்தியிருக்கிறீர்களா ?

நட்புக்கு நீங்கள் செய்த துரோகத்தை
நம்பிக்கைக்கு நீங்கள் செய்த அவமரியாதையை
அன்பில் மேல் நீங்கள் செலுத்திய வன்முறயை
தவிப்பின் மீது நீங்கள் விசிய அலட்சியத்தை
கலையின் மீது அள்ளிப்பூசிய பொய்மையை

வரலாற்றின் மேல் செய்த இருட்டடிப்பை
எளிமையின் மேல் கொட்டிக் கவிழ்த்த அதிகாரத்தை
உண்மையின் மேல் போர்த்திய அரசியலை
இயல்பின் மீதான மேலதிகாரத்தை
வெற்றிகளின் பேராலான தீரா வெறியை
தோல்விகளின் மீதான கேலிச் சிரிப்பை
கொல்லப்பட்டோர் பற்றிய அவதூறுகளை

சிறுமைப்பட்டோர் மீது காட்டாதிருந்த கனிவுக்கு
கனவுகள்மேல் காட்டிய ஆத்திரத்திற்கு
காலம் சகலத்தையும் மறக்கச்செய்யும்
கண்களில் கொட்டிய மணலாய் உறுத்தும்

இவை எதுபற்றியேனும் வருந்தியிருக்கிறீர்களா
எப்பொழுதேனும் ?
ஒரு பொழுதேனும் வருந்தியிருந்தால்
நீங்களும் மனிதன் என்னைப்போல

9 comments:

DhanaSekaran .S said...

மனதை மயக்கும் கவிதை வாழ்த்துகள்

Rathnavel Natarajan said...

அருமை.

நிலாமகள் said...

காலம் சகலத்தையும் மறக்கச்செய்யும்
கண்களில் கொட்டிய மணலாய் உறுத்தும்//

மிக்க‌ ந‌ன்றி தோழ‌ர்! ந‌ல்ல‌தொரு க‌விதையை வாசிக்க‌ / யோசிக்க‌ த‌ந்த‌மைக்கு! ந‌ண்ப‌ர் ஷாஜ‌ஹானுக்கு ஒரு புன்ன‌கைப் பூச்செண்டு!

ஓலை said...

Nachchunnu irukku. Nice.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

வணக்கம் உங்களின் பதிவு ஒன்றை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம்
நேரம் கிடைக்கும்போது படித்துச் செல்லவும் நண்பரே நன்றி
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_29.html

க.பாலாசி said...

மிக அருமையான கவிதை.. பகிர்வும்..

Anonymous said...

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

இரசிகை said...

pidichurukku...

கிச்சான் said...

அருமையாக இருக்கிறது என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும் ?
அன்புடன் கிச்சான்!