15.4.12

இன்னும் கிடைக்கவில்லை வியர்வையின் விலை

வாகனங்களின் வயிற்றை நிரப்பும்
அதே அம்மாவின் வேலை
பெட்ரோல் மணக்கும்
சீருடைதரித்த பங்க் பெண்களுக்கு.

நூற்றுக்கணக்கில் நுழையும்
வாகன வகைகளில் தம்பி கேட்ட
சைக்கிளின் ஜாடை எதிலும் இல்லை.

பூழுவைக்கடந்து செல்லும் பாவனையில்
விரைந்து வந்து நிரப்பிப்போகும்
பெண் காவலரின் சீருடையில் மணக்கும்
சீமைச்செண்டு வாசனை.

வெறித்த பார்வைகளை உதறிவிட்டு
சுற்றிச்சுழலும் எண்களைத்தொடரும்
கண்களுக்குள் கிடக்கிறது ரொம்பப் பசியும்
கொஞ்சம் கொல்லபட்டி கருப்பசாமியின் நினைவும்.

முப்பதுநாளும் அலுத்து உறங்கிப்போகும் அம்மா
ஒண்ணாம்தேதிமட்டும் கொட்டக்கொட்ட முழித்திருப்பாள்.
அவளை அறிந்தே அருகில் போய் உட்காரும்
முதலாளியின் வசவுக்கு வாங்கிய சன்மாணம்.

எனவே இன்னும் கிடைக்கவில்லை
ஒருமாதம் சிந்திய வியர்வையின் விலை.

1 comment:

நிலாமகள் said...

அவளை அறிந்தே அருகில் போய் உட்காரும்
முதலாளியின் வசவுக்கு வாங்கிய சன்மாணம்.//

என்று தான் கிடைத்தது வியர்வைக்கான நியாய விலை?!