14.4.12

சவ்தாக்குளத்தில் கெட்டிதட்டிப்போன சாக்கடை கலந்து கிடக்கிறது.


காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது,
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது.

இப்படி ஒரு திரைப்படக்கவிஞன் பாடிவிட்டுப்போனான்.காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே என இன்னொரு திரைப்பாடலும் உண்டு. ஆனால்,கிழக்குப்பக்கத்தில் மட்டுமே தெரு வைத்துக்கொள்வதற்கு அனுமதிக் கப்பட்டார்கள் ஒரு பிரிவினர். காற்றுக்கூட அவர்களை முதலில் தீண்டக் கூடாது எனும் கற்பிதம் ஒளிந்திருக்கும் நடைமுறை அது. ஆறுகள் எல்லாமே கிழக்கு பக்கம் பாய்வதால் முதலில் குளிப்பவன் நானாக மட்டுமே இருக்க வேண்டும் எனும் பெரிய்ய மனசும் கூட இதற்குக் காரணமானது. இதை நீங்கள் india untouched என்கிற ஆவணப் படத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். 

நீர் நிலைகளில் ஆடுமாடுகள் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருசரார் கடுமையாகத்தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.  சமீப காலம் வரை, அதாவது இருபதாம் நூற்றாண்டின் பாதிவரையில் குற்றாலத்தில் குளிக்க,பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சி தரும் வரலாற்றுச் சேதி.உலகஅதிசயங் களில் ஒன்றாக அறிவிக்கக் கோரி மின்னணு வாக்கு கோரப்பட்ட நமது பெருமை மிகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல பிற்படுத்தப் பட்டவர்களும் அனுமதிக்கப் படவில்லை. நுழைய முயன்ற மூக்க நாடார் நான்மாடக்கூடலின் ஒரு வாயிலில் வைத்துக் கழுத்தறுக்கப்பட்டார். எனவே புதிதாகப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு ஒரு முடிவெடுத்தது. சமுதாயக் கிணறுகள் என்கிற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி நீர் நிலைகளை உருவாக்கிக் கொடுத்தது. இதையும் அம்பேத்கர்,பெரியார்  உட்பட பல சாதிமறுப்பாளர்கள் எதிர்த்தார்கள்.அதையும் மீறி சட்டம் செயல்பட்டது. தாழ்த்தப்பட்ட வர்களுக்கென்று ஏற்படுத் தப்பட்ட தனி நீர்நிலைகளில் இரவோடு இரவாக மனிதக் கழிவுகளை அள்ளிப்போட்ட சம்பவங்கள் நடந்தது. 

2006 ஆம் ஆண்டு பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தலில்போது ஆவணப்பட படப்பிடிப்புக்காகப் போயிருந்தோம். பேருந்துநிலையத்தில் கீழே கிடந்த ஒரு பெரிய கல்லில் இருந்து இரண்டடித்தூரம் ஒதுங்கியே நின்றதொரு கூட்டம். விசாரித்தபோது தாழ்த்தப்பட்டவர்கள் அந்தக்கல்லில் உட்கார்வது அங்கிருக் கிற கள்ளர்களின் பெருமைக்கு இழுக்கு என்ற எழுதப்படாத சட்டம் இருக் கிறது.  உத்தப்புரத்தில் இன்னும் கூட ஒரு பயணிகள் நிழற்குடை அமைக்க முடியாமல் சாதிய ஆதிக்கத்தின் கீழ் மண்டியிட்டுக் கிடக்கிறது ஜனநாயகம். கிராமங்களில் கட்டப்படும் பெரும்பாலான நிழற்குடைகள் இரவோடு இரவா கச்  சிதிலமடைந்து போவதற்கு ’கீழத்தெரு பயலுகள்ளாம் நமக்குச் சமதையா உக்காரவா’ என்கிற ஆதிக்க மனோபாவம் தவிர வேறுகாரணங்கள் இருக் கவே முடியாது. இதியத் தொண்மங்களில் மறைந்தும் புதைந்தும் கிடக்கும் அதிர்ச்சியும் அதிலிருந்து மீண்டெழுந்த ஆச்சரியமும் சொல்லப்படாத வரலாறுகளாகும்.

அப்படியொரு பிரபலமான இடம் மராட்டிய மாநிலத்தின் மஹத் எனும் நகரில் உள்ள சவ்தார் குளம். அது நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியமும் சுற்றுலா ஈர்ப்பும் கொண்ட நீர்நிலை. நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்ட வர்கள் அதை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டத்தை ஒருங்கி ணைத்தார் அம்பேத்கர். 1927 ஆம் ஆண்டு மார்ச் மதம் 20 ஆம் தேதி சுமார் பத்தாயிரம் தாழ்த்தப்பட்டவர்களைத் திரட்டி ஊர்வலமாக அழைத்துப்போனார். ஊர்வலத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தை நாடினார்கள், ஊர்வலத்தை குலைக்க மறைந்திருந்து கல்லெறிந்தார்கள், பின்னர் நேரடி யாகத் தாக்கினார்கள். என்றாலும் எதிர்த்தாக்குதல் ஏதும் இல்லாத சத்தியாக் கிரஹமாக முடிந்தது அந்தப்போராட்டம். சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்த காலத்தில் நடந்ததால் இரு கோடுகள் தத்துவத்தின் சிறு கோடாய்க் காணாமல் போனது சவ்தார் ஏரிச்சம்பவம் .

இதையெல்லாம் இந்தக் கனிணி யுகத்தில் மீளப்பேசி முகஞ்சுழிக்க வைக்க வேண்டுமா எனும் கேள்வியும் வரும். நகரங்களில்  இருந்து கொஞ்சம் ஒதுங்கி விட்ட இது, இந்த சதுக்க பூதம் இன்னும் கிராமங்களில் புதுக்கருக்கு மாறாமல் வாழ்கிறது என்பதை வெகுமக்களோடு படித்தவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும். இருநூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்கள் இருக்கும் மாவட்டத்தில் இரண்டே இரண்டு ஊர்களில் மட்டுமே பொதுமயானம் இருக்கிறது என்று சென்ற ஆண்டு பணிநிறைவு பெற்ற ஒரு கிராம நிர்வாக அலுவலர் சொன்னார்.

முன்னமிருந்த அடக்குமுறைகள் அளவு இப்போதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள ஆங்காங்கே ஆதரவுக்கரங்கள் நீளுகின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் நடைபெறும் திண்ணியங்கள், மேலவளவுகள், கயர்லாஞ்சிகள், சென்ன கரம் பட்டிகள், இருஞ்சிறைகள்,பரமக்குடிகள் ஆதிக்கத்தின் இருப்பைச்  சொல் லுவதற்கு கொத்துக்கொத்தாய் உயிர்ப்பலி கோருகிறது.சாண்ஏறுகிற சதீய வழுக்குமரத்தில் கிலோமீட்டர்க் கணக்கில் பின்னுக்குப்போக வேண்டியிருக் கிறது. அந்த நேரமெல்லாம் அம்பேத்கர் வந்து நின்று என் மக்களை இன்னும் அதே நிலையில் விட்டுப் போகிறேனே என்று சொல்லிய இறுதி வார்த்தைகள்  திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஆகவே அவரது  தேவை இன்னும்  அதிகரிக்கிறது. அவரது செயல்பாட்டாலும் சிந்தனைகளாலும்,தியாகத்தாலும் கிடைத்த புரட்சியாளர் பட்டம் இன்னும் தீராத வன்கொடுமைகளின் பொருட்டு மேலும் மேலும் மதிப்பு மிக்கதாகிக் கொண்டிருக்கிறது.

12 comments:

காமராஜ் said...

டாக்டர் அம்பேத்கர் என்று சொல்லி அவரைத்தற்கால அரசியல்வாதிகளின் வரிசையில் தள்ளிவிடுகிற சூட்சுமம் நடக்கிறது.

காமராஜ் said...

டாக்டர் அம்பேத்கர் என்று சொல்லி அவரைத்தற்கால அரசியல்வாதிகளின் வரிசையில் தள்ளிவிடுகிற சூட்சுமம் நடக்கிறது.

மாசிலா said...

வணக்கம் காமராஜ்.
சமுதாயத்தின் சக மனிதனை மிருகத்தை விட கேவலமாக நடத்தி தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் ஈனப்பிறவிகள் அனைத்து சமுதாயத்தின் தரத்தையும் தாழ்த்தி நம் அனைவரையும் தலை குனிய வைக்கின்றனர்.

மதம், கடவுள், சாத்திரம், சாதிகள், சம்பிரதாயம் என்கிற பெயரில் சிறுபான்மை இனம்-குலவழிப்பு ஆயுதங்களை உருவாக்கி, சமுதாயத்தை பிளவு படுத்தி, ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியும் பாசிச பார்ப்பனர்கள் கிளப்பிவிட்ட பூதங்கள் இன்னும் ஓயவில்லை. தேவை தொடர்ந்த விழிப்புணர்வு.
பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி காமராஜ்.

ந.பெரியசாமி said...

இன்றைய நாயகனின் வரலாற்று பக்கங்களை திரும்ப திரும்ப நினைவூட்டப்படுதல்தான் நாளைய மனிதர்களையும் சுயமரியாதைக்காரர்களாக வாழவிடச்செய்யும்...

ஹரிஹரன் said...

அம்பேதக்ரை இன்னும் தாழ்த்தப்பட்ட சாதிக்காரனாகவே பார்க்கும் ம்னோபாவம் மக்களிடையே நீடிக்கிறது.

ஒவ்வொரு வரிகளும் சொரனையேற்படுத்துகிற மாதிரியிருக்கிறது. எனக்கு கேள்வி தோன்றியது ஏன் எல்லா ஊரிலும் கீழ்ச்சாதிய பயலுவ என்கிறார்கள். ஆறுகள் கிழக்கு நோக்கி ஓடுகிறதால் என்ற விளக்கம் அருமை.

காமராஜ் said...

வாருங்கள் மாசிலா வணக்கம். ஆம் தொடர்ந்த விழிப்புணர்வு தேவையாயிருக்கிறது.

காமராஜ் said...

நன்றி தோழர் பெரியசாமி.

காமராஜ் said...

நன்றி,தோழர் ஹரிகரன்

காமராஜ் said...

வாருங்கள் மாசிலா வணக்கம். ஆம் தொடர்ந்த விழிப்புணர்வு தேவையாயிருக்கிறது.

kashyapan said...

காமராஜ் அவர்களே! புனே திரைப்படக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.இயக்குனர் மிருணாள் சென் சிறப்புவிருந்தினர்." 1947க்கு முன் இந்தியனிடம் உன் எதிரி யார் என்றால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்பான். இன்று கேட்டால் பிராமணன் "இட ஒதுக்கீடு "என்பான். சூத்திரன் "பிராமணனும் இடஒதுக்கீடும் "என்பான் தாழ்த்தப்பட்டவனோ வாய் மூடி கிடக்கிறான். உங்கள் திரைப்படைப்புகள் அந்த மோனித்து கிடப்பவர்களின் மொழியைப் பேசவேண்டும்" என்றார்.பேச ஆளில்லை.பேசுபவ்ர்களும் மிகச்சிலர். இன்று அவர்கள் பலராகி வருகின்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்கை எடுப்பதால்---காஸ்யபன்

காமராஜ் said...

தோழர் காஸ்யபன்வணக்கம்.ஆகச்சரியான புரிதல்.மிகவும் அரிதான தகவல்.

காமராஜ் said...

தோழர் காஸ்யபன்வணக்கம்.ஆகச்சரியான புரிதல்.மிகவும் அரிதான தகவல்.