தனது அறுபத்துமூன்றாம் வயதில் தீராத சந்தேகத்தோடு கேட்ட கேள்வி இது. ஒரு முப்பதாண்டுகாலம் பணி முடித்து ஓய்வு பெற்ற ஆசிரியையின் கேள்வி இது. ஆறு பிள்ளைகளுக்கு தாய். ராணுவ மேஜரின் மனைவி. அந்தத்தெரு பெண்களின் ஆலோசகர். இப்படிப்பல பெருமைகலுக்கும் விழுமியங்களுக்கும் சொந்தக்காரரான ஒரு மூத்தகுடிமகள் " அப்ப ஒலகம் உருண்டையாவா இருக்கு, கடவுள் மனுஷனப்படைக்காம வேற யார் படச்சது? என்னும் கேள்வியை முன்வைத்தார். ரொம்பத் தாமதமான கேள்வி. முப்பதாண்டு கல்விப்பணியில் அவர்கள் தன் மாணவர்களுக்கு வரிவடிவில் உள்ள எழுத்துக்களை மட்டும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். அந்த வரிவடிவங்கள் அவருக்குக்கூட புரியாமல் போயிருக்கிறது. விஞ்ஞானம் வேகமாக நிலவுதாண்டிப்பயணம் செய்கிற இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், விரல் நுனியில் உலகைக்கொண்டுவரும் சாட்டிலைட் தொடர்புகள் மலிந்துகிடக்கிற இப்போதுகூட அவர்களுக்கு அந்தச் சந்தேகம் தீரவில்லை என்பது ஒரு சோகமான செய்திதான். இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒருவருக்கு இந்தசந்தேகம் வந்ததன் விளைவே பரிணாமக்கொள்கை. தத்துவங்களின் தந்தையானதும், கண்டுபிடிப்புகளுக்கு ஊற்றுகண்ணாக உருவானதும் டர்வினின் பரிணாமக்கொள்கை. இதே நாளில் பிறந்த அவர் அதற்கு முன்னால் பிறந்து மடிந்த பலகோடி உயிர்களின் வரலாற்றை மறு ஆய்விற்கு எடுத்துவந்து தனது சோதனைக் கூடத்தில் குவித்தவர். பாசிபடிந்து கிடந்த மூட நம்பிக்கைகளைத் துடைத்து சுத்தமான சிந்தனைகளைத் திறந்து விட்டவர்.நினைக்கவேண்டிய அறிவியல் புரட்சியாளர் பிறந்த நாள் இன்று. |
12.2.09
மனித குல வரலாற்றை கண்டுபிடித்தவர்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
Post a Comment