3.6.09

பகல்நேரம்
எல்லாப்பேருந்துகளும் போனபின்னும்
காத்திருப்பதாகப்பவனைபண்ணியபடி
தொலைக்காட்சிப்பெட்டிக்குமுன்
பகல்கடத்தும் பச்சை சட்டைக்காரரும்
குழந்தைகள் நிறைந்த பகுதியில்
குரலை உயர்த்திச்சுண்டி இழுக்கும்
திண்பண்ட வியாபாரியும்.
சபலக்கண்கள் தேடியபடியே மேலாடை
சரிசெய்யும் வேற்று ஊர் பெண்ணும்.
கடலை விற்பதாகப் பாவணை பண்ணியபடி
கஞ்சா விற்கிற தள்ளுவண்டிக்காராரும்.
வெயிலும், வெள்ளரிக்காயும்
காவல் துறையும் ஜேப்படித்திருடர்களும்
நிறைந்ததெங்கள் பேருந்து நிறுத்தம். .

3 comments:

ச.தமிழ்ச்செல்வன் said...

சரி.அதனாலே?

ஆ.ஞானசேகரன் said...

பேருந்து நிறுத்தம். . பற்றி அனைத்து சரிதான்...

உயிரோடை said...

ஒரு பேருந்து நிலையத்தை அப்படியே கண்பார்வைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள்