28.6.09

இன்னொரு சந்தாதாரர்.
" போன வாரம் மணியப்பாத்தேன்
ஆள் ரொம்ப குண்டாயிட்டான் பீர் ஜாஸ்தி குடிப்பான் போல,
இப்ப பாக்க முடியறதில்ல, அவளுக்கு கல்யாணம் ஆயிருச்சி.
கணேஷா, அவம் பெரிய அரிஸ்டாட்டில் மாதிரி
எப்ப வாயத்தொறந்தாலும் அரசியல் வாந்தி.
மச்சி வா இப்ப ஒரு புது கதெ, ஒரு நாள் பூரா பேசனும்,
பஸ் விருதுநகருக்கு உள்ள வாராது.
ரோட்ல எங்கயோ புதைபொருள் இருக்காம்,
பூரா தோண்டிக்கிடக்கு, கருமாதிமடத்தில நில்லு''
பக்கத்து இருக்கை வாலிபன்
தனது அலைபேசியில் காது சூடாகும்
அளவு பேசிக்கொண்டு வந்தான்.
விருதுநகர் வந்தது குதூகலித்துக் கொண்டார்கள்,
வந்தவன் பயணச்சீட்டு வாங்கினான்.
அலைபேசி ஒலித்தது.
இன்னொரு சந்தாதாரர்.
மறுகாதில் வைத்துப்பேசினான்,
மற்றவனும் அப்படியே.
பேசிப்பேசி அலுத்துபோய் தூங்கிப்போனார்கள்.
நேரில் பேசிக்கொள்ள நேரம் இல்லை.

3 comments:

ஆ.ஞானசேகரன் said...

//பேசிப்பேசி அலுத்துபோய் தூங்கிப்போனார்கள்.
நேரில் பேசிக்கொள்ள நேரம் இல்லை. //

நன்று.. நன்று..
தற்கால நினைவுகள்

அன்புடன் அருணா said...

இப்போல்லாம் இது நாள்தோறும் நடக்கும் கதையாப் போச்சு....

Anonymous said...

///பக்கத்து இருக்கை வாலிபன்
தனது அலைபேசியில் காது சூடாகும்///


நெறைய பேருக்கு காது தீஞ்சி போயிரும் போல சார் .... மொபைல் இதுக்கு தான் கண்டு பிடிச்சாங்களா ?? நம்ம மக்களுக்கு ஒரு கண்டுபிடிப்போட நல்ல விசயங்கள உபயோகிக்க தெரியலை ...