10.6.09

எனக்கொரு கவிதை வேண்டும்.
வலிகள் நிறைந்து, வார்த்தைகள் குறைந்து.
பிரபஞ்சத்தில் யாரவது ஒருவரேனும்
இனம் கண்டுகொள்ளும் அலங்காரமற்றதாய்
எனக்கொரு கவிதை வேண்டும்.

.
வலிகளின் மேல் ஈக்கள் மொய்க்காதுஎனில்,
எனக்கு ஈ விரட்டுகிற வேதனை மிச்சம்.


இப்போது எனக்கொரு கரம் வேண்டும்.
வனினூடாக எங்கிருந்தாவது வரும் அது.
ஈ விரட்ட அல்ல, தோளை இறுக்காமல்ஆற்றுப்படுத்த
எனக்கொரு கரம் வேண்டும்.


இருக்கவே இருக்கிறது, இன்றைய இரவு.
மேகம் உடுத்த நிலவு, அங்கிருந்து கசிகிற அன்பு
வார்த்தைகளற்றஉரையாடலில் கலைந்து போக
காத்திருக்கும் புதிய காலை.


நிலவைக்கானோம், பதறிப்போய் எழுந்து நடந்தேன்
இன்னொருத்தரோடு பேசியபடி அதே நிலவு.

15 comments:

மயாதி said...

யாருங்க அது இப்படி உங்களை ஏமாற்றிச் சென்றது? ( தமாசு கோபிச்சுப்புடதீங்கோ )
உங்களுக்கு இன்னொரு நிலவு கிடைக்கட்டும்

ஆ.ஞானசேகரன் said...

//வலிகளின் மேல் ஈக்கள் மொய்க்காதுஎனில்,
எனக்கு ஈ விரட்டுகிற வேதனை மிச்சம்.//

உங்களை வலிக்க வைத்த விஷமி யாருங்க

காமராஜ் said...

எழுதி முடிக்கிற வரை கவிதை கவிஞனுக்கானது.
பின்னரெல்லாம் அது வாசகருக்கானது,
அதாவது இன்னொரு கவிஞருக்கானது.
ஒரு நான்கு வரிகளை, பெரியகவிதயாக்கி விட்டீர்கள் மயாதி.
நன்றி.

காமராஜ் said...

வாருங்கள் ஞானசேகரன். ஐயையோ,
சண்டையிழுத்து விட்டுராதீங்கப்பா.

தமிழினி said...

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

அன்புடன் அருணா said...

//நிலவைக்கானோம், பதறிப்போய் எழுந்து நடந்தேன்
இன்னொருத்தரோடு பேசியபடி அதே நிலவு.//
ரொம்ப அழகா இருக்கு....

Venugopalan said...

கவிதை தேடுவது தப்பிக்கத் துடிப்பவரின்
இலக்கிய பாசாங்கு -
வலிகளும் வேதனைகளும்
கோருவது விசாரணையை,
கவிதையை அல்ல!

விசாரணையின்போது
சுட்டுவிரல் எதிரில் நீட்டிக் கொண்டிருக்கட்டும்
அதற்குப் பதில் வரும் இடைவெளியில்
நம்மைப் பார்த்திருக்கும் இதரவிரல்களுக்கான
பதில்கள் நம்மிடமிருந்து
வெளிப்படட்டும் நேர்மையாக....

யார் கண்டது

அதுதான்
தேடிக் கொண்டிருக்கும்
கவிதையாகவே இருக்கக் கூடும்!

எஸ் வி வேணுகோபாலன்

Karthikeyan G said...

Sir, ரெம்ப ரெம்ப பிடிச்சிருக்கு.

காமராஜ் said...

வணக்கம் வாருங்கள் தமிழினி,
இதோ உடனே படித்துவிடுகிறேன்.

காமராஜ் said...

மறுபடியும் கவிதையிலிருந்து ஒரு கவிதை.
என்றும் மாறாத தர்க்க பலத்தோடும்.
எங்கள் svv ன் வசீகரத்தோடும்.
நன்றாயிருக்கிறது தோழர்.
வணக்கம்...

காமராஜ் said...

நன்றி அருணா மேடம்.

காமராஜ் said...

வணக்கம் கார்த்திகேயன்.
எப்படியிருக்கிறீர்கள்.
நன்றி.

உயிரோடை said...

இந்த கவிதையில் அடுத்தடுத்த பத்தி கொஞ்சம் தொடர்ப்பில்லாதது போல இருக்கே. ஒரு வேளை நீங்க வேற ஏதாவது யோசித்து எழுதி இருக்கீங்களா தெரியவில்லை.

காமராஜ் said...

தொடர்பிருக்கிறது லாவண்யா.
எங்கிருந்தாவது வந்து ஆற்றுப்படுத்தும்
பின்னூட்டங்களுக்கான கவிதை இது.

காமராஜ் said...

தொடர்பிருக்கிறது லாவண்யா.
எங்கிருந்தாவது வந்து ஆற்றுப்படுத்தும்
பின்னூட்டங்களுக்கான கவிதை இது.