17.11.09

சச்சின் - தாக்கரே அவியல், பாப்லோ நெருடா - பால்பாயாசம்

''மும்பை இந்தியர்கள் எல்லோருக்கும் சொந்தமானது"இப்படிச் சொன்னதன் மூலம் நட்சத்திர மட்டை ஆட்டக்காரர் தெண்டுல்கர் பிரிந்துகிடக்கும் சிவசேனை மற்றும் மஹராஸ்ட்ர நவநிர்மான் கட்சிகளின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்.


'' இது சச்சினுக்கு நல்லதல்ல, இது போன்ற கருத்துக்களைக் கூறி அவர் தனிமைப்பட வேண்டியதில்லை, ஆட்ட மைதானத்தின் எல்லைக் கோட்டிலிருந்து வெளியேறி அரசியல் எல்லைக் கோட்டிற்குள் அநாவசியமாக நுழைகிறார் " என்று கூறி பகிரங்க மிரட்டலை தனது சாம்னா இதழின் வழியே பிரகடனப்படுத்துகிறார் பால்தாக்கரே.


மராட்டியம் மராட்டியர்களுக்கு, மும்பை சிவசேனைக்கு, மராட்டியத்தில் இருக்கும் அரசு காலியிடங்கள் மராட்டியர்களுக்கு,இப்படியே நீண்டுகொண்டு போய் இப்போது அரசியல் ரவுடிகளுக்கு மட்டும் தான் என்பதை சட்டபூர்வமாக்கவேண்டும் என்பதுபோல அறிக்கை விட்டிருக்கிறார். சச்சின் தனது விளையாட்டில் சேகரித்த ஓட்ட எண்ணிக்கையின் மூலம் இந்திய ரூபாயின் மேல் கணிசமான தொகைக்கு கருப்பு மை பூசியிருக்கிறார். அது எந்தக் காலத்திலும் விவாதப் பொருளாகாது. நீ அங்கே இருந்து சம்பாதித்துக்கொள் எனது ஏரியாவுக்குள் வராதே என்பதைப் போல மிரட்டல் வந்திருக்கிறது.


எல்லைகள் தாண்டக்கூடது எனும் பழைய law of retaining discremination விதியின் நடைமுறையை அர்த்தத்தை பால்தாக்கரே குண்டாந்தடியின் குரலில் கூறுகிறார். பிரிவினை வாதத்தின் உடனடி உதாராணம் பங்காளிச்சண்டை.


0


அது கிடக்கட்டும் .....


எல்லைகளுக்குள் அடங்காதவர்கள் கவிஞர்கள். அப்படி ஒருவன் புத்தகம் பற்றிச் சொன்னதைப் பாருங்கள். சிலிக்குயில் எனப் போற்றப்படும் பாப்லோ நெருதா. விருதுகளும், வெகுமதிகளும் ஆசையோடு 'என் தோழனே' என நீளும் சுரங்கத் தொழிலாளியின் கையில் ஒட்டியிருக்கும் அலுமினியத் துகள் என் கைக்கு வருவதையே விருதாகக் கருதுவேன் என்று சொன்னவன் பாப்லோ நெரூதா.


புத்தகமே,

என் கவிதைகள்

கவிதைகளைத் தின்பதில்லை.

புத்தகமே,

காலணியில் புழுதி படிய

சாலைகளில் நான் நடப்பேன்

நீ உன் நூலகத்துக்கு

திரும்பிப் போ.

வாழ்க்கையை நான்

வாழ்க்கையிலிருந்து

கற்றுக்கொண்டேன்.

காதலை

ஒரு முத்தத்திலிருந்து

கற்றுக்கொண்டேன்.


5 comments:

க.பாலாசி said...

மும்பை பற்றிய சச்சினின் கருத்தும், அதற்கான பால்தாக்கரேயின் கருத்தும் ஒன்றுக்கொன்று முரணானது. ஆனால் இரண்டு ஏட்டுச் சுரைக்காய்தான்.

பாப்லோ நெரூதாவின் ‘வாழ்க்கையை நான் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டேன்’ இந்த வரிகளை ரசிக்கிறேன்.

லெமூரியன்...(வரையரைகளுக்கப்பார்ப்பட்டவன்) said...

\\சச்சின் தனது விளையாட்டில் சேகரித்த ஓட்ட எண்ணிக்கையின் மூலம் இந்திய ரூபாயின் மேல் கணிசமான தொகைக்கு கருப்பு மை பூசியிருக்கிறார். அது எந்தக் காலத்திலும் விவாதப் பொருளாகாது. நீ அங்கே இருந்து சம்பாதித்துக்கொள் எனது ஏரியாவுக்குள் வராதே என்பதைப் போல மிரட்டல் வந்திருக்கிறது...//

ஊடகங்கள் தான் மக்களை எவ்வளவு பெரிய மாயைக்குள் சிக்க வைத்திருக்கிறது....மேலே நீங்கள் அடிக்கோடிட்டு காத்திருக்கும் அந்த வரிகள் கண்டிப்பாக எந்த ஊடகத்திலும் வரப் போதில்லை...
டெண்டுல்கர் கருத்து வழக்கம் போல் தேசியம் பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு பிதற்றும் ஒரு இந்திய குரல்.
இந்தக் கருத்தால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஆகி விடப் போவதில்லை. வேண்டுமென்றால் கோகோ கோலா கம்பெனி "சுத்தமான இந்தியன் டெண்டுல்கர் பருகும் கோலா பானத்தைப் பருகி இந்தியனாகுங்கள்" அப்டின்னு ஒரு விளம்பரம் போட்டு நம்ம காச சுரண்டுவாங்க.


\\விருதுகளும், வெகுமதிகளும் ஆசையோடு 'என் தோழனே' என நீளும் சுரங்கத் தொழிலாளியின் கையில் ஒட்டியிருக்கும் அலுமினியத் துகள் என் கைக்கு வருவதையே விருதாகக் கருதுவேன்........//

ரசித்த வரிகள்....கவிஞர்கள் எந்த வரையறைக்குள்ளும் அடைக்கப் பட முடியாதவர்கள். முற்றிலும் உண்மை.

மண்குதிரை said...

wow nalla irukku sir

pakirvukku nanri

அன்புடன் அருணா said...

அடடா...என்ன கவிதை! பூங்கொத்து பாப்லோ நெரூதாவுக்கும்,பகிர்ந்த உங்களுக்கும்.!

ஆ.ஞானசேகரன் said...

கவிதை சூப்பர்....