5.11.09

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்.

ஒருகாலை வேலையில் கலைஞர் தொலைக்காட்சி சந்தித்த வேளை நிகழ்சியில் கண்ணதாசன் நற்பனிமன்றத்தலைவர் ஒருவரின் நேர்கானல் ஒளிபரப்பாகியது. அவர் பல முரணான தகவல்களைப் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போனார். அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய பிறகுதான் தமிழ் மக்கள் இந்து மதம் என்ற ஒன்று இருப்பதாக அறிந்தார்களாம். அதிர்ச்சியாக இருக்கிறதா இன்னும் கேளுங்கள்.


உழைக்கிற மக்கள் திரளில் உள்ளவர்கள் படித்து பெரிய பெரிய சாப்ட்வேர் நிறுவன அதிகாரிகளாக மாறிவிட்டாகளாம் அதனால் விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்கவில்லையாம். விஞ்ஞானம் நாற்று நட, கதிரறுக்க,என விவசாய எந்திரங்களைக் கண்டு பிடித்து விட்டதாகவும் கருத்து தெரிவித்தார். விவசாயம் நசிந்து வருவதற்கு பல காரணிகள் இருக்கிறது என்பதை மறைத்து பொதுவாகவே பல பிரபலங்கள் கூட இதையேதான் சொல்லுகிறார்கள்.கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது உண்மையா.? இல்லை.


இந்திய அரசு நிர்ணயித்திருக்கிற குறைந்த பட்சத் தினக்கூலி என்பது ரூ231.69பைசா. அதைக் கொடுக்க விவசாயிகளெல்லாம் தயாராகக் கையை நீட்டிக் கொண்டிருந்தது போலவும் அவர்கள் அதையெல்லாம் வேண்டமென்று உதறித் தள்ளிவிட்டு ஊதாரித் தனமாக விவயாக் கூலிகள் அலைகிற மாதிரியும் ஒரு மூட நம்பிக்கை பரப்பி விடப்படுகிறது. பெண்களுக்கு தினம் நாற்பது முதல் அறுபது ரூபாயும் ஆண்களுக்கு அறுபது முதல் எண்பது ரூபாயும் தான் விவசாயக் கூலியாகக் கொடுக்கப்படுகிறது. இந்த அறுபது ரூபாயை வைத்துக்கொண்டு என்னென்ன வாங்கிவிட முடியும்?. ஒரு படி நெல் அதுவும் பொக்குநெல் அதிகம் கேட்டதற்காகத்தானே வெண்மனியில் கருகியது நாற்பது உயிர்.


நிலப்பிரபுத்துவ முறையும், பண்ணையடிமை முறையும் ஆழ வேரூன்றிக் கிடந்த காலங்களில் பழைய கஞ்சியையும் ஊறுகாயையும் கொடுத்து மாட்டை விடக் கேவலமாக மனிதர்களிடம் உழைப்பை உறிஞ்சிய காலம் விவசாயிகளுக்கு பொற்காலம். விவசாயக் கூலிகளுக்கு ?. விவசாய இடுபொருள், உரம் இவைகளின் விலைகளை வெளிநாட்ட்டு முதலாளிகள் நிர்னயிப்பதும். விளைந்த பொருட்களின் விலையை உள்ளூர் முதலாளிகள் நிர்ணயிப்பதுமான சிக்கல்களில் விவசாயிகளின் கோவணங்கள் உருவப்படுகிறது. அதை மீட்கக்கிடைக்கும் மாண்யத்தையும் கடல்தாண்டிய உத்தரவுகள் தடுக்கிறது. இது பற்றி யோசிக்கத்தெரியாத, பேசத்தெரியாதவர்களின் அரை வேக்காட்டு பொருளாதாரத் தத்துவமே இப்படித்தான் இருக்கும்.


இன்னொரு வெடிகுண்டை வீசினார் அவர். அதுதான் ஹாலில் இருந்த என்னைத் தூக்கிவாரித் தெருவில் போட்டது. இப்படி,இப்படியேதான் இந்த உலகம் மாற்றங்களைச் சந்திக்கிறதாம் " மாற்றம் என்ற சொல்லைத்தவிர மற்றதெல்லாம் மாறிவிடும்" இதைக்கூட கவிஞர் கண்ணதாசன் தான் சொன்னாராம். அதுபடிதான் நடக்கிறதாம். அப்படியானால் அந்த தாடிக்கார மனுஷன் காரல் மார்க்ஸ் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் ஒலிநாடாவுக்கு உரை எழுதினாரா ?

13 comments:

குப்பன்.யாஹூ said...

ஆம் நண்பரே, அவரின் பொய் பேச்சை நானும் கேட்டு கேட்டு சிரித்தேன்.

அந்த நிகழ்ச்சியில் எப்போதும் ஒரு மறை முக அரசியல் இருக்கும்.

சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் திமுக விற்கு எதிராக அறிக்கை விட்டதும், செட்டியார் இனத்தாரை அரவணைக்க கண்ணதாசன் புகழ் பாடும் பேட்டி,

காங்கிரசை குளிர்விக்க சுபவீ நேருவின் புகழ் பாடுகிறார், நேருவின் இறுதி நாட்கள் என்றும், நேரு போனதும் காஸ்மீர் இருண்டு விட்டதும் என்றும்....

ஆ.ஞானசேகரன் said...

நல்ல வேளை நான் பார்க்கவில்லை நண்பா

லெமூரியன் said...

அந்த தொலைகாட்சி ஒரு மூன்றாம் தர பத்திரிக்கைக்கு சமமானது. இந்தமாதிரி கூத்துக்கள் அங்கு எப்பொழுதுமே நடக்கக் கூடியதுதான். நகைச்சுகை நிகழ்ச்சியை ரசிப்பது போல் ரசித்து சிரித்துவிட்டு போகவேண்டியதுதான்.

மண்குதிரை said...

sirippaakaththaan irukkiRathu

:-)

சந்தனமுல்லை said...

/" மாற்றம் என்ற சொல்லைத்தவிர மற்றதெல்லாம் மாறிவிடும்" இதைக்கூட கவிஞர் கண்ணதாசன் தான் சொன்னாராம்/

!!!!

anto said...

மாமா! எப்படித்தான் நீங்களும் மாது அண்ணனும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளாய் தேர்ந்தெடுத்து பார்க்கிறீர்களோ.....?

அன்புடன் அருணா said...

ஹாஹாஹாஹா....இதென்ன கலாட்டா!

ஆரூரன் விசுவநாதன் said...

பூனை இளைச்சா எலி மச்சான் மச்சாங்குமா.......என்று எங்கள் பகுதியில் ஒரு சொலவடை உண்டு.

கேள்வி கேட்க ஆளிள்ளாத குறைதான் தோழர்......

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் நண்பரே பார்வை மிக தவறாக இருக்கிறது

காமராஜ் said...

நன்றி குப்பன் யாஹூ.
நன்றி ஞானசேகரன்
நன்றி லெமூரியன்

காமராஜ் said...

நன்றி
மண்குதிரை
சந்தனமுல்லை
ஆண்டொ

காமராஜ் said...

நன்றி
அருணாமேடம்
ஆரூரான்
வெண்ணிற இரவுகள்

தாரணி பிரியா said...

சிரிப்பாவும் ஆச்சரியமாவும் தான் இருக்கு. நம்மை எல்லாம் அடிப்படை அறிவு கூட இல்லாதவங்களா நினைச்சுகிட்டு இருக்காங்க போல