11.6.10

பஞ்சாலையிலிருந்து ஒரு மாலை விடுதலை

கூடடையும் குதூகலத்துடன்
சாப்பாட்டுக் கூடையோடு
திரும்புகிறது பொழப்பின் மாலை.

தூக்குவாலியும் வயிறும்
காலியாய்க்கிடக்க ததும்புகிறது
வீட்டுமுற்றத்தில் காத்திருக்கும்
பிஞ்சுவிரலும் பீடிவாசமும்.

தலையில் படர்ந்திருக்கும்
பஞ்சுத்துகள்களை ஒதுக்க மனசில்லாமல்
பேருந்து ஏறுகிறது நூலாம்படை வாழ்க்கை.

பயண நெரிசலில் உரசும்போது
பறக்கிறது தாவணி நாட்களின் பொறி.
நடத்துனரின் விசிலொலியில்
ஒளிந்திருக்கிறது மாரியப்பனின்
சிருங்காரச் சீழ்கையொலி.

பள்ளிக்கூடப் புத்தகமும்
டீச்சர் கனவும் பரணில் கிடக்க
நிகழ்வுகளும் நினைவுகளும்
மாறி மாறிசுழல்கிறது
இரவுபகலெனும் அன்றாடங்களில்.

18 comments:

சீமான்கனி said...

Me the 1st......

சீமான்கனி said...

//பள்ளிக்கூடப் புத்தகமும்
டீச்சர் கனவும் பரணில் கிடக்க
நிகழ்வுகளும் நினைவுகளும்
மாறி மாறிசுழல்கிறது//

நிஜ வாழ்க்கையின் நிலையான நிகழ்வுகளை சொல்கிறது...பழைய நியபகங்களோடு...கவிதை சிறப்பாய்...

உயிரோடை said...

//பள்ளிக்கூடப் புத்தகமும்
டீச்சர் கனவும் பரணில் கிடக்க
நிகழ்வுகளும் நினைவுகளும்
மாறி மாறிசுழல்கிறது
இரவுபகலெனும் அன்றாடங்களில்//

ம்ம்ம் எல்லோருக்கும் க‌ல்வி எதாவ‌து செய்ய‌னும் ந‌ம் போன்றோர்

அன்புடன் அருணா said...

/பள்ளிக்கூடப் புத்தகமும்
டீச்சர் கனவும் பரணில் கிடக்க
நிகழ்வுகளும் நினைவுகளும்
மாறி மாறிசுழல்கிறது
இரவுபகலெனும் அன்றாடங்களில்./
இப்படி நிறைய கனவுகள் மூட்டை மூட்டையாக ஒவ்வொருவர் வீட்டுப் பரணிலும்!

Unknown said...

கனத்து கிடக்கும் மனசு பரட்சி செய் என்கிறது
கனத்து கிடக்கும் வயிறு புரட்டிப் போடுகிறது...
பிணத்து நாத்தமென வாழ்க்கை..

vasu balaji said...

/வீட்டுமுற்றத்தில் காத்திருக்கும்
பிஞ்சுவிரலும் பீடிவாசமும்./
/பேருந்து ஏறுகிறது நூலாம்படை வாழ்க்கை./
/பயண நெரிசலில் உரசும்போது
பறக்கிறது தாவணி நாட்களின் பொறி./
/பள்ளிக்கூடப் புத்தகமும்
டீச்சர் கனவும் பரணில் கிடக்க
நிகழ்வுகளும் நினைவுகளும்
மாறி மாறிசுழல்கிறது /

புழுதிப் புயலில் சிக்கின காகிதம் மாதிரி தறி கெட்டு தத்தளிக்குது. தூசு உறுத்தாம கண்ணை இறுக்கி மூடினாலும் நெஞ்சு முழுதும் நெரிஞ்ஜி முள். முத்தாய்ப்பு வைக்கும் பா.ரா.வின் வரிகளுக்கான காத்திருப்புடன்

பாலா.

ராம்ஜி_யாஹூ said...

கவிதை அருமை.
ஆனால் பஞ்சாலை தொளிலார்களும் விவசாயிகள் போலவே தாங்கள் பாடு பட்டு பெரும் கூலியை டாஸ்மாக்கில் செலவழிக்கும் பொழுது, நெஞ்சு பொறுக்குது இல்லையே.

க.பாலாசி said...

சிறைக்கு அகப்பட்ட விடுதலை வாழ்க்கையிது. கனவுகள் காணுகின்ற விடியாத பொழுது... முள்ளென தைக்கத்தான் செய்கிறது...

vasan said...

2020 ல் இந்தியா வல்ல‌ர‌'சாகும்'
இந்திய‌ ம‌க்க‌ள் விலைவாசியால்
வ‌றுமையில் 'சாவ‌ர்'
என்றுத‌ணியும் இந்த‌ ஊழ‌ல்?
என்று ம‌டியும் எங்க‌ளின் ம‌ட‌மை?
ஆங்கிலேய‌ வியாப‌ரிக‌ளுக்குப் பின் நாட்டை
சுர‌ண்டுப‌வ‌ர்க‌ள் ராட்டை சுழ‌ற்றிய‌ வாரிசுக‌ளும்,
இன்ன‌பிற‌ இன‌, மொழி வாரிசுக‌ளும் தான்.

ஹேமா said...

வாழ்வு சிலசமயம் கட்டாயக் கைதியாக்குகிறது.கனவுகள் பரணில்தான்.

ஈரோடு கதிர் said...

இதில் எதை ரசிக்க..

எல்லாமே மனதைப் பிசைந்து பிசைந்து வலிக்கச் செய்யும் போது

செ.சரவணக்குமார் said...

கவிதையும் புகைப்படமும்..

சொல்ல வார்த்தைகளில்லை..

வீடுகள் தோறும் ஒரு பரண் இருக்கிறது. நிறைய கனவுகளைச் சுமந்துகொண்டு..

இல்லையா காமராஜ் அண்ணா.

நேசமித்ரன் said...

காமு சார்

வாழ்வின் எல்லா தகனங்களும் மயானத்தில் நிகழ்வதாய் இருந்தால் எத்துணை நிறைவாய் இருக்கும் வாழ்வு

கொஞ்சம் ஆலைகளில் கொஞ்சம் அடுக்களைகளில் பாலைவனத்தில் படுக்கைகளில்
பாட வாய்த்திருக்கிறது
எங்களுக்கு கேட்கவும்

Unknown said...

அருமையான பதிவு..

அ.முத்து பிரகாஷ் said...

பிஞ்சு விரலின் பீடி வாசம் ...
பரணில் கிடக்கும் தோழர் வாழ்க்கை ...
மாற்றம் தேடும் உங்கள் வரிகள் ...
கனத்து போய் ரத்தச் சிவப்பாகிறது மனசு ...

காமராஜ் said...

சீமான்
அருணா
செந்தில்
பாலாண்ணா
ராம்ஜி
பாலாஜி
வாசன் சார்
ஹேமா
கதிர்
சரவணன்
நேசன்
ஆறுமுகம் முருகேசன்
கடக்குட்டி நியோ ( பிஞ்சு விரல் அப்றம் பீடி வாசம், ரெண்டு பேர் )

அணைவரினது அன்புக்கும்
நன்றி.

காமராஜ் said...

நன்றி லாவண்யா

விஜய் said...

நெகிழவைக்கிறது கவிதை

வாழ்த்துக்கள்

விஜய்