15.7.10

ரோஷக்காரி சின்னம்மாக்கிழவியும் ஒளிந்து பாடிய சங்கீதக்காரனும்.

தங்கையா வீட்டுக்கலயாணம் முடிந்து,பந்தி முடிந்து,மொய்க்கலயம் நிறஞ்சு அந்த ரெண்டு பத்தி வீட்டை புதுமாப்பிளை பெண்ணுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு ஊர்மடம் தேடிப் போய்விட்டார்கள்.ரேடியாச் செட்டு போடவந்த ஜானகிராம் சவுண்டு கண்ணன்ண்ணும்.மூடிவைத்துவிட்டு முடக்கிக்கொண்டார். எதுத்த வீட்டு கடவில் இருட்டில் ஒரு உருவம் பதுங்கிப் பதுங்கி நின்னது.ஒண்ணுக்கிருக்க வந்த கனகமணி சத்தம் போடவும் ஊர்கூடி பிடித்துவந்து வெளிச்சத்தில் பார்த்தால் சின்னம்மாக் கிழவி.களவாங்கிற வளசலுமில்ல,சுவர்தாண்டுகிற வயசுமில்ல பதுங்கி நிக்கவேண்டிய மர்மமென்ன என்று துருவித்துருவிக்கேட்டதில் 'எல்லாருந்தூங்குனாப்பெறகு எப்படியு குழாயுக்குள்ள இருந்து பாட்டுப்படிச்ச ஆம்பளயு பொம்பளயு எறங்கி வருவாகல்ல அதப்பாக்கத்தான் ஒளிஞ்சு நின்னேன் என்று சொன்னதற்குப்பிறகு ஊர் முழித்துக்கொண்டது.புதுமாப்பிளையும் பொண்ணும் தூங்கிவிட்டார்கள்.




கல்யாணவீடுகளில் படிக்கும் ஒலிபெருக்கி எங்கூர் மக்களுக்கு புரியாத புதிராகவே இருந்த காலம்.அண்ணாமலைக் கிழவனோ,முத்தையாக் கிழவனோ சொன்னால்தான் சரியென்று ஒத்துக் கொள்வார்கள். அவர்களிருவரும் தான் ஊர்நாடு போய்த்திரும்புகிறவர்கள். அண்ணாமலைக்கிழவன் ஐந்தாம் வகுப்பும், முத்தையாக்கிழவன்ஆறாம் வகுப்பும் தொட்டுவிட்டு வந்த படிப்பாளிகள்.ரெண்டு தலைமுறையாகவே முத்தையாக்கிழவன் குடும்பத்துக்கும் சின்னமாக்கிழவி குடும்பத்துக்கும் ஆகாது.பிரச்சினை ரொம்பப்பெரியது. வீட்டுக்கொட்டாரத்தில் நின்றிருந்த வேப்பமரம் யாருக்கென்கிற சண்டையில் விரிசலாகிப்போனது அடுத்தடுத்த வீடு ரெண்டும்.'முத்தையாகெழவன் அளந்து வுட்ற அறகொற லாப்பாண்ட கீல்னு கேக்க நா என்ன கேனச்சிறுக்கியா' என்று சொன்ன சின்னம்மாக் கெழவி ஒண்ணா நம்பர் ரோஷக்காரி.மண்டைக்குள்ளே தான் ஆளிருக்கு என்பது முத்தையாக்கிழவனின் வாதம்.இம்புட்டுக்கானு மண்டைக்குள்ள அத்தம்பெரிய ஆளு எப்படி இருப்பாக,குழாய்க்குள்ளதான் என்பது சின்னம்மாக்கிழவியின் சந்தேகம்.



லாப்பாண்டு=law point
கீல்னு= சரியென்று ஒத்துக்கொள்ள.
வலசல்=பங்காளிகள் சம்பந்திகளடங்கியகுழு

26 comments:

சீமான்கனி said...

ஐ நான்தான் பஸ்ட்டு...

ஈரோடு கதிர் said...

சரிண்ணே...

எறங்கி வந்தாங்களா, இல்ல பாட்டுப்பாடிட்டு அவங்களும் உள்ளேயே தூங்கிட்டாங்களா

க ரா said...

சரிதான்.

சீமான்கனி said...

//அண்ணாமலைக்கிழவன் ஐந்தாம் வகுப்பும், முத்தையாக்கிழவன்ஆறாம் வகுப்பும் தொட்டுவிட்டு வந்த படிப்பாளிகள்.//

சின்ன வயசுல நாங்களும் பல கேழவிகல இப்பித்தான் ஏமாத்துவோம் அவர்களின் அறியாமையை நினைத்து அப்போது நையாண்டி பண்ணத்தான் தோன்றியது...ஆனால் இப்போது அப்படி இல்லை அண்ணே...

என் பெரியம்மா (அதிகம் படிக்காதவங்க) ஒருநாள் "டே தம்பி இந்த செல்போன்ல நூறு ருபாய் இருக்காம் உங்க பெரியத்தா (பெரியப்பா)ஒழிச்சு வச்சுருக்காரு அத எடுத்து குடுன்னு சொன்னாங்க...முதலில் சிரிப்பு வந்தாலும் பிறகு அவருக்கு புரியவைத்தேன்.நன்றி அண்ணே...

ராம்ஜி_யாஹூ said...

சுப்ரமணிய புரம் சினிமாதான் ஞாபகம் வந்தது.

சுத்த பத்தமா இருக்க இல்ல. பின் வாசல் வைக்காத வீட்டுக்கு வரவே கூடாது.

மதுரை சரவணன் said...

//சண்டையில் விரிசலாகிப்போனது அடுத்தடுத்த வீடு ரெண்டும்.'//
இது கதை அல்ல நிஜம்.. வாழ்த்துக்கள்

லெமூரியன்... said...

ஹா ஹா ஹா..!
வாய்ப்பே இல்ல...!
மிகவும் ரசித்த பதிவு...!

vasu balaji said...

இப்படி ஜனங்க கூட இல்லாம இங்க என்ன பொழப்பு பொழைக்கிறோம்.:(

ஹேமா said...

சிரிக்க வச்சுட்டீங்க.தூக்கம் நின்மதியா வரும் இண்ணைக்கு !

நேசமித்ரன் said...

இந்தா வாறேன் வெத்தல போட்டு துப்புறதுக்குள்ள ஓடீறாது ஒரு மாத்த
(மாசம்)

வந்து பேசிக்கிறேண்டி மாப்பிள்ளைகளாண்ட்ருக்கேன்

ஒங்களுக்குஞ்சேத்துதேன்....

:)

காமராஜ் said...

ஈரோடு கதிர் said...
சரிண்ணே...

எறங்கி வந்தாங்களா, இல்ல பாட்டுப்பாடிட்டு அவங்களும் உள்ளேயே தூங்கிட்டாங்களா

அவிங்களும் தூங்கிட்டாங்க கதிர்.

காமராஜ் said...

இராமசாமி கண்ணண் said...
சரிதான்.//

நன்றி கண்ணன்

காமராஜ் said...

seemangani said...
//

என் பெரியம்மா (அதிகம் படிக்காதவங்க) ஒருநாள் "டே தம்பி இந்த செல்போன்ல நூறு ருபாய் இருக்காம் உங்க பெரியத்தா (பெரியப்பா)ஒழிச்சு வச்சுருக்காரு அத எடுத்து குடுன்னு சொன்னாங்க...முதலில் சிரிப்பு வந்தாலும் பிறகு அவருக்கு புரியவைத்தேன்.நன்றி அண்ணே...//


வாங்க தம்பி கனி.
வருகைக்கு அன்பும் வணக்கமும்.

காமராஜ் said...

ராம்ஜி_யாஹூ said...
சுப்ரமணிய புரம் சினிமாதான் ஞாபகம் வந்தது.

சுத்த பத்தமா இருக்க இல்ல. பின் வாசல் வைக்காத வீட்டுக்கு வரவே கூடாது//

இது வேறயா, ராம்ஜி தோழர்...

காமராஜ் said...

மதுரை சரவணன் said...
//சண்டையில் விரிசலாகிப்போனது அடுத்தடுத்த வீடு ரெண்டும்.'//
இது கதை அல்ல நிஜம்.. வாழ்த்துக்கள்//

நன்றி சரவணன்

காமராஜ் said...

நன்றி இளயவனே

காமராஜ் said...

வானம்பாடிகள் said...
இப்படி ஜனங்க கூட இல்லாம இங்க என்ன பொழப்பு பொழைக்கிறோம்.
:(

//

நன்றி பாலாண்ணா

காமராஜ் said...

நேசமித்ரன் said...
இந்தா வாறேன் வெத்தல போட்டு துப்புறதுக்குள்ள ஓடீறாது ஒரு மாத்த
(மாசம்)

வந்து பேசிக்கிறேண்டி மாப்பிள்ளைகளாண்ட்ருக்கேன்

ஒங்களுக்குஞ்சேத்துதேன்....

:) //

வாங்க நேசன் நன்றி. அவ்ளோ வெத்தலயா ?

காமராஜ் said...

ஹேமா said...

//சிரிக்க வச்சுட்டீங்க.தூக்கம் நின்மதியா வரும் இண்ணைக்கு !//

நன்றி ஹேமா,

Unknown said...

அக்காலங்களில் வெள்ளந்தி மக்களாக இருந்த கிராமத்து ஆட்கள் இப்ப டிவி பெட்டி வந்தவுடன் நிறைய மாறித்தான் போய்விட்டனர்..

க.பாலாசி said...

எத்தன விதமான மனுஷங்க... படிக்கறச்சயே மனசுக்குள்ள எல்லாமே நிழலாடுது.. டி.வி. பொட்டிய புதுசா பாத்தப்ப கொஞ்சநாளு உள்ளற ஆடுறவங்கள்லாம் இறங்கி வருவாங்கன்னு நானும் நினைச்சதுண்டு...

Mahi_Granny said...

லாப்பாண்டு, கீல் . நல்ல வேளை விளக்கம் இருந்ததது. இந்த மொழி உங்களுக்கு மட்டுமே நல்லா வருது

VELU.G said...

எதார்த்தமான நடையில அருமையா இருக்குங்க

அன்புடன் அருணா said...

நான் கூட ரொம்ப நாள் குழாயுக்குள்ள இருந்துதான் ஆடிப்படுறாங்கன்னு நினைச்சுருக்கேன்!!!

பா.ராஜாராம் said...

பாலாண்ணா..

// இப்படி ஜனங்க கூட இல்லாம இங்க என்ன பொழப்பு பொழைக்கிறோம்.:( //

இதேதான் பாலாண்ணா, காமு.

☼ வெயிலான் said...

சின்ன விஷயம் தான். என்ன அழகா, எவ்வளவு சுருக்கமா சொல்லிப்புட்டீங்க.
அருமைண்ணே!

உங்க எழுத்துக்களைப் படிக்க படிக்க ஊர் நினைவுகள் சாஸ்தியாகிக்கிட்டே வருதுண்ணே!