14.9.10

குரலின் சுரத்தில் சரம் கோர்க்கும் நினைவுகள்.

ஒரு முன்மதிய நேரத்து
குளிர் நினைவுகளை ஊடறுக்கும்
தூரத்து வேலிக்குயிலின் தேடலும்
கூட்டி விட்டுக்கூட வரும்
தனிமையின் ராகத்தோடு.

பின் தொடரும் வாகனச் சலனங்களில்
பிரிந்து போய் சக்கரம் முன்னும்
நினைவுகள் பின்னுமான பயணத்தில்
சுகந்தப் புல்லாங்குழல் ஊடிசையாய்
சுதி சேர்க்கும் கருவேலம் பூக்கள்.

ஈரம் கோர்த்த பகற்பொழுதின்
கடிகார நகர்வில் இனிப்புத்தடவி
இழுத்துச் செல்லும் அளவான ஆல்கஹாலும்
அன்புகோர்த்த நட்பின் வார்த்தைகளும்.

எல்லாவற்றையும்...
எங்கிருந்தோ கேட்கும் சுவர்ணலதாவின்
சினிமாத் தனிமைப் பாடல்களின் வழி
மீளக்கொண்டுவரலாம் வாழ்வின்
ரசம் மிகுந்த நேரங்களை.

22 comments:

இராமசாமி கண்ணண் said...

நல்லதொரு நினைவஞ்சலி.. ஒரு நல்ல பாடகியை தமிழ் சினிமா இழந்து நிற்கின்றது.. ஒரு நல்ல மனுஷியை அவரது குடும்பம் இழந்து நிற்கின்றது.. எனது வருத்தங்களும்...

பத்மா said...

இதை அன்றே நான் எதிர்பார்த்திருந்தேன் ..

கலைஞர்களுக்கு என்றுமே மரணம் கிடையாது ..

மாலை மட்டுமென்ன எப்போதுமே நம் மனசோடு பேசியபடியே தான் அந்த தங்கக்கொடி

பத்மா said...

எவ்ளோ அழகா எழுதிருக்கீங்க சார்

தூரத்திலிருந்து வியந்து மாய்கிறேன் ..

நியோ said...

சார்! நான் படித்ததேலேயே மிகச் சிறந்த அஞ்சலிப் பதிவு. சற்று முன்னர் தான் 'போறாளே பொன்னுத் தாயி' கேட்டு நெகிழ்ந்து போயிருந்த நிலையில் உங்கள் கவிதை மேலும் மனதை நெகிழச் செய்கின்றது.தங்கள் வரிகள் மீளக் கொண்டுவருகின்றன குயிலின் குரலின் கானங்களை!

நியோ said...

தங்கள் தமிழ் மணப் பட்டை வேலை செய்ய வில்லை .. என்னவென்று கவனியுங்கள் தோழர்!

வானம்பாடிகள் said...

சுவர்ணலதாவின் குரல் போலவே வருடிக்கொடுக்கும் ஆறுதல் அஞ்சலி. நன்றி காமராஜ்

D.R.Ashok said...

//சுவர்ணலதாவின் குரல் போலவே வருடிக்கொடுக்கும் ஆறுதல் அஞ்சலி. நன்றி காமராஜ் //

அப்படியே வழிமொழிகிறேன்...

அம்பிகா said...

\\இதை அன்றே நான் எதிர்பார்த்திருந்தேன் ..

கலைஞர்களுக்கு என்றுமே மரணம் கிடையாது ..

மாலை மட்டுமென்ன எப்போதுமே நம் மனசோடு பேசியபடியே தான் அந்த தங்கக்கொடி\\

உண்மைதான்

நிலாமதி said...

குயில் பறந்து விட்டாலும் அவர் விட்டுச்சென்ற இசை மனதை விட்டு அகலாது. அவருக்கு அஞ்சலிகள்.

க.பாலாசி said...

மனதை சாந்தப்படுத்தும் குரல் அது... அவரை பிரிந்த வேளையிலும் அவரது குரலே துணையாக நிற்கிறது...

காமராஜ் said...

வணக்கம் கண்ணன்,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

ஆமாம்.பத்மா மேடம்.சொர்ணலதா வின் குரல் கொஞ்சம் அலாதியானது.
'குயில் பாட்டு ஓ வந்ததென்ன'
'உன்னை எதிர்பார்த்தேன்'
'உளுந்து வெதக்கையிலே'
'போறாளே பொன்னுத்தாயி'
'மாலையில் யாரோ'
'புன்னை வனப்பூங்குயிலே'

இப்படி எக்கச்சக்கமான ராகங்கள். ஏன் நான் ஏரிக்கரை மேலிருந்து கூட சொர்ணாவின் குரலோடு இருக்கிறது.

குரல் இன்னும் நம்மோடு இருக்கிறது.

காமராஜ் said...

//எவ்ளோ அழகா எழுதிருக்கீங்க சார்

தூரத்திலிருந்து வியந்து மாய்கிறேன் ..//

இது வஞ்சப்புகழ்ச்சியா ?

அதிகமாத்தெரியட்டும் என்று மடக்கி மடக்கி எழுதி கவிதைபோலக் காட்டியிருக்கிறேன்.அவ்ளோதான். புத்தர் சொல்வதைப்போல அத்னதன் ஆவி அதனதன் அளவு. நம்ம அழகுன்னு போட்டுக்கலாம்.

காமராஜ் said...

நியோ said...

சார்! நான் படித்ததேலேயே மிகச் சிறந்த அஞ்சலிப் பதிவு. சற்று முன்னர் தான் 'போறாளே பொன்னுத் தாயி' கேட்டு நெகிழ்ந்து போயிருந்த நிலையில் உங்கள் கவிதை மேலும் மனதை நெகிழச் செய்கின்றது.தங்கள் வரிகள் மீளக் கொண்டுவருகின்றன குயிலின் குரலின் கானங்களை!

September 14, 2010 9:38 AM
Delete
Blogger நியோ said...

தங்கள் தமிழ் மணப் பட்டை வேலை செய்ய வில்லை .. என்னவென்று கவனியுங்கள் தோழர்!//

அன்பின் தோழர் நியோ.
தொடர்ந்த உங்கள் வருகைக்கும் கருத்துச்செரிவூட்டலுக்கும் அன்பே பிரதி. என்னன்னு சொல்ல மூன்று முறை மாற்றிப்பார்த்துவிட்டேன் பதிவுப்பட்டை சரிசெய்யப்படவில்லை. சரிபண்ணிவிடலாம். நன்றி தோழர் நியோ.

காமராஜ் said...

நன்றி பாலாண்ணா.

காமராஜ் said...

வாருங்கள் D.R. அசோக்.
வலையில் இணைந்தமைக்கும் வருகைக்கும் நன்றி.

காமராஜ் said...

நன்றி அம்பிகா.

காமராஜ் said...

நன்றி நிலாமதி.

நன்றி பாலாஜி

ஆ.ஞானசேகரன் said...

நல்ல நினைவஞ்சலி தோழரே..

அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தங்கள்

Gayathri said...

rombha arumayaa azhagaa irukku.avanga pogala irukanga namakulla

காமராஜ் said...

அன்பின் ஞானசேகரன் நலமா நண்பனே ?

வாருங்கள் காயத்ரி. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vimalannblogspot.com said...

kuil onru niamkadathu....,