6.2.09

விடுதல்கள்



பொங்கல் வைக்க, பூஜை பண்ண


ஆடறுக்க, அன்னதானம் பண்ண


கூட்டம் கூட்டமாய் வரும்


பக்தகோடிகளைக் காப்பாற்ற முடியும்போது‭


வாசலிலேயே வரிசையாய்த் தட்டேந்தும்


பிச்சைக்காரர்களைக் கைவிட்டதெப்படி.

o

12 comments:

மாதவராஜ் said...

படம் மனதைப் பிசைகிறது!

அன்புடன் அருணா said...

சாமிக்குப் படைப்பவர்கள் கொஞ்சம் இதைப் பற்றிச் சிந்தித்தால் போதுமே...
அன்புடன் அருணா

ஜீவா said...

பிச்சைக்காரர்களைக் கைவிட்டதெப்படி.//

சவுக்கடி கேள்வி ,பதில் யார் சொல்வது ?????

தோழமையுடன் ஜீவா
pls reply on mail or chat :jeeva1@gmail.com

காமராஜ் said...

திரு வெயிலான்,
திரு சபாரத்தினம்,
திரு.கோவி.கண்ணன்,
திரு.ஷான் நல்லையா,
திரு.அபுசுலைஹா
திரு.செந்தழல் ரவி
உங்களின் அன்பான வருகைக்கு
மிக்க நன்றி

Anonymous said...

படமும் கவிதையும் சரியான பொருத்தம். கேள்விக்கான விடை?

காமராஜ் said...

அருணா மேடம்
கருத்துக்கு நன்றி.
உண்டியலில் போடுகிறகாசும்,
நெற்றி நிறைந்த திருநீறும்.
இடைக்கால நிம்மதியுமமந்த
ஒற்றைக்குரலில் தொலைந்து போகிறது.

அவரவர் வானம், அவரவர் காற்று, அவரவர் அனுக்கிரஹம்
எப்படி சரிப்படும், சாத்தியப்படும்.
அதுதான் வள்ளுவரை இப்படிக்கோபப்பட வைத்திருக்கிறது.

''இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்"

காமராஜ் said...

வாருங்கள் ஜீவா வணக்கம்,
கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும்
கொடுக்கிற அவர் சர்வ வல்லமை படைத்தவர்
சாமான்யருக்கும் கீழே கிடக்கும் பிச்சைக்காரர்களை
எப்படி விடுகிறார் ?
கடவுளையும்ப் படைத்து அதை நம்ப வைக்கிற,
அதைக்கேள்வியும் கேட்கிற மனிதன் மகத்தானவன்.

காமராஜ் said...

வணக்கம்
வடகரை வேலன்.

உங்களுக்கு... பதில் இல்லை.
இன்னைக்கு என்ன பதிவு.

geevanathy said...

படமும்,பதிவும் மனதைப்பிசைகிறது.. கேள்விக்கான விடை ??? ஆகவே இருக்கும் நாமாக மாறாதவரை....

anujanya said...

என்னுடைய முதல் வருகை காமராஜ். ரொம்ப நல்லா இருக்கு உங்க வலைப்பூ. நிதானமாகப் படிக்க வேண்டும்.

இந்தக் கவிதை எழுப்பும் கேள்விகள் ... அவர்கள் கடவுளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று கொள்ள வேண்டியதுதான்.

அனுஜன்யா

காமராஜ் said...

வணக்கம் ஜீவன் எப்படி இருக்கிறீர்கள்?
"மீண்டும் சந்திப்போம்" படித்த இரவு
அதற்கு மேல் தொடரமுடியவுமில்லை,
அணைத்து விட்டுப்பின் தூங்கவும் இயலவில்லை.
பின் இரண்டு முறை வலைப்பக்கம் வந்தேன்.
எப்படி...இருக்கிறது.

காமராஜ் said...

வணக்கம் அனுஜன்யா,
உண்மையில் நல்வரவு.
மாதவராஜ், வடகரை வேலன் இருவருமே
உங்களது பதிவுகளை சிபாரிசு
செய்தார்கள்.
நீங்கள், ரவி, வால்பையன், அய்யணார்,
தங்கராசா எங்கள் மிக முக்கிய விருப்ப
பதிவர்கள்.